தாகம் Tucson, Arizona USA 65-0919 1மாலைவணக்கம் நண்பர்களே! இன்றிரவு இங்கிருப்பது ஒரு சிலாக்கியம். இந்த grant way assembly சகோ மாக் (Mack) அவரோடு இருக்கும் அருமையான துணையாளர்களோடும், மற்ற சபைகளிலிருந்து வந்து கலந்து கொண்ட கிறிஸ்தவர்களோடும், சகோ லிவலி (Lcevay Le)யும் இந்த grant way Assembly-ல் இருப்பது இரண்டாவது தடவையாகும். இப்பொழுது தான் எனது ஆத்ம நண்பரான சகோ F.F. போஸ்வர்த் (F.F. Bosworth) அவர்களை அறிந்து ஒரு நண்பனை சந்தித்தேன். அவர் ஆண்டவரிடம் போய்விட்டார் என்பதை அறியாதவனாய் இருந்தேன். சகோ. போஸ்வர்த் (Bosworthi) 84 வயதில் ஆண்டவரை சந்திக்கப் போய் விட்டார் என்பதை அறியாதவனாய் நான் வெளிநாடு சென்றிருந்த போது “நான் எலியாவின் கரங்களில் தண்ணீர் வார்த்த எலிசாவை சந்தித்தது போன்று நான் உணருகிறேன்'' என்று சொன்னேன். 2தூரதேசத்தில் காலிபோர்னியாவிலிருந்து நியூயார்க் New york வரை டெக்ஸ்அஸ் (Texas) தேசத்தின் பல பகுதிகளிலுமிருந்து. தொலைபேசியில் இன்றிரவு இணைக்கப்பட்டிருக்கின்ற அனைவருக்கும் இப்பொழுது நான் வரவேற்கிறேன். இப்படி தொலைபேசி இணைப்பு தொடர்பு இருக்கின்றது. இன்றிரவு ஒரு பெரிய ஆசீர்வாதமாக இருக்கின்றது. நம்முடைய நல்ல நண்பர் பேரி கிரீன் (Parry Green) மூலமாக நான் அறிந்து கொண்டேன். அதாவது ஒரு சின்ன Gadget இருக்கின்றதாம் அதை உங்கள் வீட்டில் இருக்கும் டெலிவிஷனில் மாட்டினால் நீங்கள் கேட்பதோடு மட்டுமல்லாமல் காணவும் முடியும். அவர்கள் இப்பொழுதே அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 3சகோதரி மாக் நன்றாக இருந்து இங்கே உட்கார்ந்து ஆர்கன் வாசிப்பதை கண்டு சந்தோஷப்படுகிறேன். என்னுடைய நண்பர்கள் அநேகரை காண்கிறேன். Sierra VISTA, சகோ. போர்டர்ஸ் (Borders) சகோ. ராபர்சன் (Bro. Roberson, Indiana) இருந்து வந்தவர் அநேகர். நான் நினைக்கிறேன் Jeffersonville கூடாரத்திலிருந்து பாதிபேர் இங்கே உட்கார்ந்திருக்கிறீர்கள் என்று சொல்ல பிரியப்படுகிறேன். அதோ அங்கிருக்கும் என் நண்பர் சகோ. (Kuntz) நூன்டி வியாதியை குறித்து ஜெப விண்ணப்பம் சகோ. (Kuntz) நூன்டி நான் அதற்காக ஜெபிக்கிறேன் கவலைப்படாதீர் விசுவாசமாயிருங்கள். அது சரியாகிவிடும். தூரத்திலிருக்கும் டெக்ஸ்அஸ்( Texas) சகோ. Blair இன்றிரவு நீர் கேட்டுக் கொண்டு இருக்கின்றீரா இதை நினைவில் வையுங்கள். முதல் தடவையில் உம்மை வெளியே கொண்டு வந்த தேவன் இந்த இரண்டாவது தடவையிலும் உம்மை வெளியே கொண்டு வருவார். தேவன் இதை உமக்கு அருளுவார் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். எதைக் குறித்தும் பிசாசினுடைய பொய்யை எடுத்துக் கொள்ள வேண்டாம். தேவன் தேவனாய் இருக்கிறார். ஒன்றுமட்டும் நினைவிருக்கட்டும். அவர் இன்னமும் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். நாங்கள் அவரை நேசிக்கின்றோம். அவரை விசுவாசிக்கின்றோம். நாங்கள் உமக்காக ஜெபிக்கிறோம். காலிபோர்னியாவில் California)ல் உள்ள நண்பர்கள் யாவரும் சகோ. Mercies அரிசோனா (Arizona)வில் இருக்கிறவர்கள் யாவரும் மற்ற இடங்களிலிருப்பவர்கள் Phoenix சகோ. வில்லியம்ஸ் (Williams) நீங்கள் யாவரும் இப்பொழுது தொலைபேசியின் மூலமாக இணைக்கப்பட்டிருக்கிறீர்கள். நாங்கள் உண்மையாகவே நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். (Georgia) ஜார்ஜியாவிலிருப்பவர்களுக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 4இன்றிரவு உண்மையான வரவேற்பு எனக்கு இந்த அருமையான சபையில் Assembly of God, Grantway என்னுடைய நண்பர் சகோ, மாக் (Mack)வுடனும் இருக்கிறது போன்று உணருகிறேன். தேவன் சகோ. மாக் (Mack) அவர்களை ஆசீர்வதித்தார், ஒருசமயம் கனடாவில் எனக்கு நினைவிருக்கின்றது. ஒரு குதிரையின் மேல் ஒரு Trail பாதை நோக்கி காட்டிற்குள் போய் கொண்டிருந்தேன், பரிசுத்தாவியானவர் என்னை கீழே இறங்கி சகோ. மாக் (Mack)காக ஜெபிக்கும்படி சொன்னார். அந்த நேரத்தில் அவர் ஒரு அவசர நிலையில் இருந்தார். தேவன் அவரை சுகப்படுத்தினார். நான் அதற்காகவும் அருமையான சத்தியத்தில் அவரோடு கூட தேவனை ஆராதிக்க இன்றிரவு கூடி வந்தமைக்காகவும் நன்றியுள்ளவனாய் இருக்கிறேன், எனக்கு பின்னாக மேடையில் உட்கார்ந்து கொண்டிருக்கிற ஒரு மனிதன் “உமக்கு என்னைத் தெரியும் என்று யூகிக்க வேண்டாம். ஒரு சமயம் தெருவில் வரும் போது நீர் உம்முடைய வாகனத்தில் என்னை ஏற்றிக் கொண்டு போனீர்'' என்றான். எனக்கு தெரியவில்லை எங்கேயோ பாஸ்டனிலோ அல்லது டெட்ராய்டோ. வழக்கமாக நான் எப்பொழுதும் தேவையுள்ளவர்களுக்கு உதவி செய்ய என் கரம் எப்பொழுதும் நீட்டப்பட்டிருக்கும் என்று சொன்னேன். ஆகவே இன்றிரவு நாம் யாவரும் தேவைகள் உள்ளவர்களாயிருக்கிறோம். தேவன் தாமே இன்றிரவு தம்முடைய ஆசீர்வாதங்களை, உதவிகளை அவருடைய கிருபையும் இரக்கத்தையும், நமக்கு கொடுக்க அவரது கரத்தை நீட்டும்படி நாம் ஜெபிக்கிறோம், 5நான் எப்பொழுதும் நீண்ட நேரம் பேசும் சுபாவமுள்ளவன். ஆனால் இன்றிரவு அப்படி செய்யாமலிருக்க பிரயாசிக்கிறேன். (OHIO) ஒஹியோவிலிருக்கிறவர்கள் இப்பொழுது தான் கூப்பிட்டார்கள். சகோதரி டச் (Dauch) அந்த குழுவும் சகோ. மெகினி (McKinney) யும் சகோ. பிரவுன் (Brown) இவர்கள் யாவரும் OHIOவோடு தொலைபேசியில் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். உங்கள் யாவருக்கும் எங்கள் வாழ்த்துக்களை அனுப்புகிறோம். இப்பொழுது நியூயார்க் (Newyork)ல் நேரம் கழிந்திருக்கும் சுமார் 11 அல்லது 12 மணி இருக்கும் இந்நேரத்தில் அங்கே. சபைகள் வந்து இந்த நேர மட்டுமாக ஆராதனைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். சுற்றிலுமுள்ள இப்படிபட்ட நண்பர்கள் யாவருக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். 6நாம் வார்த்தையை திறப்பதற்கு முன்னர் வார்த்தையை ஆக்கியோனிடத்தில் பேசுவோம். நாம் சற்று நேரம் தலைவணங்குவோம். எங்களை நேசிக்கிற பரலோக பிதாவே, இன்றிரவு நாங்கள் ஜீவனோடும் உம்முடைய பிள்ளைகளோடும் கூடும்படியாகவும் கிடைத்த இந்த சிலாக்கியத்துக்காக மிகவும் களிகூருகிறோம். இந்த ஜனங்கள் என்றென்றைக்குமாய் ஜீவிப்பார்கள் என்று நாங்கள் விசுவாசிக்கின்றோம். இப்பொழுது நாங்கள் நித்திய ஜீவனை உடையவர்களாயிருக்கிறோம். ஏனெனில் உம்முடைய குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுபோகாமல் நித்திய ஜீவனை அடையும் படியாய் அவரை நீர் கொடுத்தீர். இவ்வுலகில் அவருடைய யாத்திரையின் போது என்னுடைய வார்த்தைகளுக்கு செவிகொடுத்து என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாய் இருக்கிறான். அவன் ஆக்கினைக்குள் தீர்க்கப்படாமல் மரணத்தினின்று ஜீவனுக்குள் பிரவேசித்திருக்கிறான். ஏனெனில் நாம் தேவனுடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறோம். இந்த பெரிய இரட்சகருக்காக நாங்கள் உமக்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். நாங்கள் அவருடைய வார்த்தையை வாசித்து அதை பேசும் போது இன்றிரவு இங்கே நீர் எங்களை உம்முடைய மகா பெரிய சமூகத்தினால் ஆசீர்வதிக்கும்படியாய் நாங்கள் ஜெபிக்கிறோம். ஆண்டவரே எங்கெல்லாம் உம்முடைய பிள்ளைகள் கூடியிருந்தாலும் பரிசுத்தாவியானவர் தாமே அதை இத்தேசம் முழுவதுமாய் ஒவ்வொரு இருதயத்திற்கும் கொண்டு செல்வாராக. பீடத்தில் இருக்கும் மற்ற ஊழியக்காரர்களையும் ஆசீர்வதியும். இந்த கிராண்ட்வே சபையையும், அதன் பாஸ்டரையும் அவருடைய மனைவியையும், அவருடைய பிள்ளைகளையும், மூப்பர்களையும், தருமகர்த்தாக்களையும், பொறுப்பாளர்களையும், பிதாவே நீர் ஆசீர்வதிக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். ஒருவரும் கிரியை செய்யக் கூடாதபடியான வேளை வந்து கொண்டிருக்கிறபடியினால், பிதாவே நாங்கள் எங்கே போகிறோம் என்பதை காணப் போதுமான வெளிச்சம் இருக்கின்றதான இந்த வேளையிலேயே நாங்கள் யாவருமாக சேர்ந்து தேவனுடைய இராச்சியத்திற்காக வேலை செய்யும் படியாய் செய்யும். பிதாவே இந்த சிலாக்கியம் எங்களுக்கு இருக்கும்போதே நாங்கள் நேரத்தை மீட்டுக்கொள்ள செய்யும். அதை எங்களுக்கு அருள்செய்யும். இந்த தேசம் முழுவதுமாய் இருக்கின்ற வியாதியாயுள்ள துயரப்படுகின்ற யாவரையும் சுகப்படுத்தும். இத்தேசத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் தேவனுடைய சமூகம் உணரப்படுவதாக. 7நியாயத்தீர்ப்பானது விழுகின்றது என்பதை நாங்கள் உணருகிறோம். பெரிய தவறுகள் உண்டாகின்றன. தேசம் ஆடுகின்றது. அநேக இடங்களிலே பூமியதிர்ச்சிகள் கடந்த காலங்களிலே பெரிய சரித்திர பூர்வமான காரியங்கள் நியாயத்தீர்ப்பாய் வந்ததை நாங்கள் வேதத்தின் மூலமாக கேட்டிருக்கின்றோம். அவைகள் இப்பொழுது திரும்பவுமாய் நிகழ்கின்றதை காண்கிறோம். தீர்க்க தரிசனமானது “நோவாவின் நாட்களில் நடந்தது போன்று மனுஷ குமாரன் வரும் நாட்களிலும் நடைபெறும். லோத்தின் நாட்களில் நடந்தது போன்று மனுஷகுமாரன் வரும் நாட்களிலும் நடைபெறுமென்று” கூறப்பட்டிருக்கின்றது. அவைகள் இப்பொழுது நடை பெறுகின்றதை நாம் காண்கிறோம். ''மனிதர்களின் இருதயம் சோர்ந்து போகின்ற காலங்களின் தத்தளிப்பும், தேசங்களுக்கு இடையே இடுக்கண்ணும், உண்டாயிருக்கும். தேவனே நாங்கள் கடைசி நேரத்தில் வந்திருக்கிறோம் என்று அறிவோம்“. ஜீவனுக்கென்று உம்மால் நியமிக்கப்பட்ட ஒவ்வொரு பிள்ளைகளுக்கும், ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் இந்த செய்தியை கொண்டு செல்ல உதவி செய்யும். இவைகளை அருளிச் செய்யும் கர்த்தாவே. இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். வாசிக்கப்பட்ட இந்த பாகத்தை ஆசீர்வதிப்பீராக. 8ஒரு ஊழியக்காரன் எங்கே இருந்து படிக்கிறான் என்று உங்கள் வேதத்தில் அதை பார்க்க அநேகர் விரும்புவீர்கள். ஒரு சந்தர்பத்தை எடுக்கும்படியாய் சங்கீதம் 42-லிருந்து மூன்று வசனங்களை இன்றிரவு வாசிக்க விரும்புகிறேன். இந்த பொருளே நான் பேசிக் கொண்டே போகும்போது கூடுமானால் குறிப்பிடப்படும்படியாய் நான் சில வேத வசனங்களை குறித்து வைத்திருக்கிறேன். தாவீதின் சங்கீதம். இந்த சங்கீதங்களை தாவீது எழுதினார். நீங்கள் வேதத்தை புரட்டிக் கொண்டிருக்கும்போது இதை நான் சொல்ல விரும்புகிறேன் சங்கீதங்கள் ஏவப்பட்டிருக்கின்றதா? நிச்சயமாக அவைகள் ஏவப்பட்டிருக்கின்றது. வேதத்தில் காணப்படுகின்ற எதுவும் ஏவப்பட்டது. அது சரித்திர ரீதியாயிருந்தாலும், சங்கீதங்களாய் இருந்தாலும் சரி எவைகளாயிருந்தாலும் சரி. அவைகள் ஏவப்பட்டது. ''தாவீது சங்கீதங்களிலே என்ன சொல்லி இருக்கிறான் என்று நீங்கள் வாசித்தது இல்லையா?“ என்று இயேசு சொன்னார். இந்த சங்கீதங்களெல்லாம் பாடல்கள் தாம் என்று நான் நினைக்கிறேன். எல்லா பாடல்களும் தேவனால் ஏவப்பட்டவைகள். அவைகள் தீர்க்க தரிசனங்களும் கூட என்று நான் விசுவாசிக்கிறேன். இந்த பாடல் நிறைவேறுகின்ற காலத்திலே அந்த நாளிலே நான் நிற்கிறேன் என்று நம்புகிறேன். ஆகாயத்தில் ஓர் சந்திப்பு இருக்க போகிறது; அந்த இனிமையான, இனிமையான இடத்தில் என்றொ ஒர் நாள்; விண்ணிற்க்கு அப்பால் இருக்கும் அந்த வீட்டில்; உங்களை சந்தித்து, உங்களுக்கு வாழ்த்துதல் கூறுவேன். ஒருபோதும் கேட்டிராத அப்பாடலை, சாவுக்கேதுவான காதுகளால் கேட்கபட்டிராத; அது மகிமையுள்ளதாய் இருக்கும் என்று நான் உங்களுக்கு தெரிவிக்கிறேன். ஆகாயத்தில் நடக்கும் அந்த சந்திப்பில்; தேவனுடைய சொந்த குமாரனே முன்னின்று வழி நடத்துவார். ஓ, அந்த நேரத்திலே நான் அங்கே இருக்க விரும்புகிறேன். 9இப்பொழுது சங்கீதம்: 42: 1-3 ''மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவது போல தேவனே என் ஆத்துமா உம்மை வாஞ்சித்து கதறுகிறது. என் ஆத்துமா தேவன் மேல், ஜீவனுள்ள தேவன் மேலேயே தாகமாயிருக்கிறது. நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்? உன் தேவன் எங்கேயென்று அவர்கள் நாள்தோறும் என்னிடத்தில் சொல்லுகிறபடியால் இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று இந்த சங்கீதத்தை எழுதும் போது தாவீது மிகவும் துயரத்தில் இருந்திருப்பான் என்று நான் நினைக்கிறேன். ஒரு மனுஷனுக்குள்ளிருந்து நேர்த்தியானதை கீலேசமான நேரத்தில் தான் வெளியே கொண்டுவரும். உண்மையாகவே நாம் உபவாசிக்கின்ற நேரத்தில் நாம் தேவனோடு நம்மை சரியான நிலையில் வைக்க நம்மை வழியில் இருந்து அப்புறப்படுத்துகிறதாயிருக்கும். நான் நினைக்கிறேன். தாவீது இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களுக்குள் ஆகும் போதுதான் இப்படிப்பட்ட காரியங்களை குறித்து நினைக்கவும் தேவனை குறித்து தியானிக்கவும் ஆரம்பிக்கிறான் என்று நான் நினைக்கிறேன். அநேக நேரங்களிலே, நாம் தேவனை நோக்கி பார்க்க தான் வேண்டும் என்ற ஒரு நெருக்கத்துக்குள்ளாக தேவன் நம்மை கொண்டு போகிறார். தேவனுடைய பெரிய ஆசீர்வாதங்கள் எங்கிருந்து வருகிறது என்று காணும்படியாய் நாம் சில நேரங்களில் வியாதியின் படுக்கையிலோ ஆஸ்பத்திரியிலோ அல்லது எங்கேயோ இருக்க வேண்டி நேருகிறது. 10இன்றிரவு நான் பேச வேண்டுமென்றிருக்கின்ற ஒரே ஒரு வார்த்தை, வாசித்த வேத பாகத்திலிருந்து 2-வது வசனத்தில் காணலாம். தாகம் என்ற வார்த்தை. இந்த வார்த்தைக்காக நான் அகராதியை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு சமயத்திலே நான் பிரசங்கித்த “தேவன் மேல் தாகமாயிருக்கிறது'' என்ற ஒரு செய்தியை நினைத்துக் கொண்டிருந்தேன் . நான் இதை தாவீது ''உம்முடைய நியாயங்கள் எனக்கு என்னுடைய ஜீவனுக்கு மேலானது'' என்று சொன்ன சங்கீதத்திலிருந்து எடுத்தேன். நான் ”தாகம்“ என்ற வார்த்தையை குறித்து சிந்தித்து, கொண்டு அதை குறித்து அகராதியில் அதற்கு என்ன அர்த்தம் கொடுக்கப்பட்டிருக்கிறதென்று பார்த்துக் கொண்டிருந்தேன். வெப்ஸ்டர் (Webster) அகராதி ”அது ஒரு வேதனையோடு கூடிய வாஞ்சை“ என்று சொல்லுகிறது. உனக்கு மிகவும் அவசியமாய் ஒன்று தேவைபடும் போது அது உனக்கு ஒரு வருத்தத்தை வேதனையை உண்டாக்கும் அளவிற்கு ஆகின்றது. தாகம் உண்டாவது இயற்கைக்கு மாறானதல்ல. தாகம் இயற்கையானது. அது தேவன் நமக்கு கொடுத்த ஏதோ ஒன்றாய் இருக்கின்றது. அது ஏதோ ஒன்றிற்காக ஒரு வாஞ்சையை நமக்குள் கொடுக்கின்றது. தேவன் உனக்குள்ளாக ஒரு மேற்பார்வை கோபுரத்தை (Control Tower) வைத்திருக்கிறார். அது உனக்குள் எழும் வித்தியாசமான வாஞ்சைகளின் மேல் அதிகாரஞ் செலுத்துகிறது. இந்த மேற்பார்வை கோபுரமானது ஒரு மனுஷனுடைய இருதயத்திற்குள்ளிருந்து அது அவனுக்கு தேவையான வாஞ்சைகளை குறித்து அவனை எச்சரிக்கும்படியாய் தேவன் அவனுக்குள்ளாய் வைத்ததாயிருக்கிறது. 11இரண்டு வித்தியாசமான தாகங்கள் உண்டு. சரீரபிரகாரமான தாகம் என்று ஒன்று உண்டு. ஆவிக்குரிய பிரகாரமான தாகமும் உண்டு. தாவீது சொன்ன இதை மறுபடியுமாக வாசிக்க விரும்புகிறேன். ''என் ஆத்துமா, தேவன் மேல், ஜீவனுள்ள தேவன் மேலேயே தாகமாயிருக்கிறது“. இது யாரோ சொன்ன ஒரு கதையோ அல்லது சரித்திரபிரகாரமாகாவா அல்லது அநேக வருஷங்களுக்கு முன்பே நடை பெற்ற ஒரு சம்பவமோ கிடையாது. ஆனால் இது ஜீவனுள்ள தேவன் மேல், என்றென்றைக்கும் இருக்கின்ற தேவன் மேலேயே உள்ளது. அவனுடைய ஆத்துமா இந்த தேவன் மேல் தாகமாயிருந்தது. ஏதோ சரித்திர ரீதியான காரியத்தின் மேல் அல்ல. 12உனக்கு அவசியமான காரியங்களை மட்டும் உனக்கு அளிக்கும் படியாய் தேவன் உனக்கு மேற்பார்வை கோபுரத்தை கொடுத்திருக்கிறார். உனக்குள்ளாக இருக்கும் மேற்பார்வை கோபுரமே உன்னை நடத்துகிறதாய் இருக்கிறது. ஆவிக்குரிய பிரகாரமாக பார்க்கும் போது இந்த தாகம் அந்த மேற்பார்வை கோபுரத்திற்குள்ளாக சென்று உன்னுடைய தேவை என்ன என்பதை சொல்லுகின்றது. இந்த மேற்பார்வை கோபுரம் சரீரத்திலும் ஆத்துமாவிலும் உண்டு. உன்னுடைய சரீரத்தில் ஒரு மேற்பார்வை கோபுரம் உண்டு. அது உன்னுடைய சரீரத்தின் தேவைகளை சொல்லுகின்றது. அது உனக்கு தாகத்தின் மூலமாக கொண்டு வரப்படுகின்றது. அது மட்டுமல்லாமல் உன்னுடைய ஆத்துமாவிலும் ஒரு மேற்பார்வை கோபுரம் இருக்கின்றது. அது உன்னுடைய ஆவிக்குரிய தேவை என்னவென்று சொல்லுகின்றது. இதன் மூலமாக நீ உன்னை எப்படிப்பட்டதான ஜீவியம் நடத்துகிறாயென்று சொல்லமுடியும். உன்னுடைய வாஞ்சைகள் என்ன என்று உன்னால் காண முடியும் போது இந்த வாஞ்சைகளை உனக்குள்ளாக இருந்து கொண்டு எழுப்பப்படுகிறது என்னவென்று உன்னால் சொல்ல முடியும். நீ தாகமாயிருக்கின்ற ஏதோ ஒரு காரியம் உண்டு. உனக்குள்ளாக இருக்கின்ற அந்த தாகத்தின் சுபாவத்தின் மூலமாக உன்னுடைய வாஞ்சை எதை பற்றினது என்பதை குறித்து உன்னுடைய ஆத்துமாவிற்கு அதை அளிக்கின்றது. நீங்கள் இதை நன்றாய் புரிந்து கொண்டீர்கள் என்று நான் நம்புகிறேன். 13ஆத்துமாவுக்கு ஒன்றும் சரீரத்திற்கு ஒன்றும் மேற் பார்வை கோபுரம் உண்டு. ஒவ்வொரு கோபுரமும் அதன் அதன் தேவை என்ற எச்சரிப்பை அவனுக்கு அனுப்புகிறது. தேவையானவனுடைய தேவை என்னவோ அந்த தேவை ஒவ்வொன்றிற்கும் அது எச்சரிப்பின் அலையை அனுப்புகிறது. உதாரணமாக மாம்சத்தின் வாஞ்சைகளை தீர்க்கும்படியான மாம்ச தாகம் உண்டாகும்போது, ஆத்துமாவிற்குள்ளதான வாஞ்சைகளை ஆவி வாஞ்சிக்கின்றது. அநேக நேரங்களில் இவை ஒன்றோடொன்று போராடுகிறதாயிருக்கும். இந்த நாட்களில் உள்ள பெரிய தொல்லையை நாம் இங்கே காணுகிறோம். அதாவது அநேகர் இன்றைக்கு இந்த இரண்டு வாஞ்சைகளுக்கிடையே ஜீவிக்க பிரயாசிக்கின்றது. ஏனெனில் ஒன்று இந்த பூமிக்கடுத்த காரியங்களை வாஞ்சிக்கின்றது. இன்னொன்று பரலோகத்துக்கடுத்த காரியங்களை வாஞ்சிக்கின்றது. 14ரோமர். 7:21 பவுல் இதை விளக்குகின்றது போன்று ''நன்மை செய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டு“ நீ முயற்சிக்கும் போது அந்த அனுபவம் உங்களுக்கு எப்பொழுதாவது உண்டாயிருந்ததுண்டோ? கிறிஸ்தவர்களே! ஏதோ தகுதியான ஒரு காரியத்தை செய்ய முயற்சிக்கும் போது நன்மையை செய்ய நீ பிரயாசிக்கும்போது அங்கே நீ காண்பாய். ஒவ்வொரு காரியத்திலும் பிசாசு இருக்கின்றதை காண்பாய். இருந்துகொண்டு காரியங்களை வெறுப்பாக்கி போடுவான். நீ செய்ய வேண்டும் என்றிருந்த யாவற்றையும் செய்ய முடியாமற்போகும். கிறிஸ்தவர்கள் அதை அறிந்திருக்கிறார்கள் என்ற ஒரு நல்ல காரியத்தை தான் நான் சொல்லமுடியும். நீ எதையாவது செய்ய ஆரம்பிக்கும் போது அதை செய்யாமற் பண்ணும் படியாய் ஏதோ எப்பொழுதும் முயற்சிக்கும். ஆனாலும் எப்படியாவது அதை செய்தாக வேண்டும் சரியானது எதுவோ அதை நீ செய்ய முடியாதபடி உன்னை தடை செய்ய முயற்சிக்கின்றது. அங்கே இருக்கின்றது அந்த பிசாசு. 15அநேக நோங்களில் நான் பயந்த சுபாவமுள்ளவர்களை சந்தித்திருக்கிறேன். அப்படிப்பட்டவர்கள் ஒரு காரியத்தை செய்ய முயற்சிக்கும் போது அதற்கு இரண்டு பக்கங்களிலும் தடைகள் உண்டாவதை காணும்போது “ஒரு வேளை இது கர்த்தருக்கு சித்தமில்லை போலும்'' என்று சொல்லுவார்கள். பார்த்தீர்களா? பிசாசு அந்த விதமாக உங்களிடத்தில் பொய்யை சொல்ல அனுமதியாதீர்கள். முதலாவது காரியம். அது தேவனுடைய சித்தமா இல்லையா என்பதை கண்டறியுங்கள். அது கர்த்தருடைய சித்தம் தானா என்று அறிய வேண்டுமானால் வேதத்திற்குள் பாருங்கள் உன்னை சரிபடுத்துகின்ற காரியம் அங்கே இருக்கின்றது. அது தேவனுடைய வார்த்தை. நீ அதை செய்யும்படியாக அது வேதத்தில் இருக்கின்றதா என்று பாருங்கள். உதாரணமாக சொல்ல வேண்டுமானால் பரிசுத்தாவியின் அபிஷேகத்தை வாஞ்சிப்பதை குறித்து... அநேக நேரங்களில் நான் பரிசுத்தாவி வேண்டுமென்று நாடினேன். என்னால் அதை பெற்று கொள்ள முடியவில்லை. அது எனக்குள்ளது என்று நாம் நம்பவில்லை. அதற்காக நான் பிரயத்தனம் பண்ணும் போதெல்லாம் நான் சுகவீனமாகிவிடுகிறேன். நான் ஜெபத்தில் போய் உபவாசிக்கும் போது நான் வியாதியாகிறேன். நான் இரவு முழுவதுமாக அல்லது தொடர்ந்து காத்திருந்தால் நான் தூங்கிவிடுகிறேன். என்னால் எழும்பவே முடியவில்லை என்று சொல்லுகின்றவர்களை கண்டிருக்கிறேன். நினைவிருக்கட்டும் அது பிசாசு ஏனென்றால் நீ பரிசுத்தாவியை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது தேவ நோக்கமாயிருக்கிறது. வேண்டும் என்கின்ற யாவருக்கும் அது உள்ளது. அநேக நேரங்களில் நீ காண்கிறது என்னவென்றால் தெய்வீக சுகத்திற்காக நீ கூட்டங்களில் ஜெபித்துக் கொள்ளும் போது அடுத்த நாள் உன்னுடைய நிலமை நீ ஜெபித்துக் கொண்ட நாளுக்கு முன்தினம் இருந்ததை விட மோசமாக இருக்கும். பார்த்தீர்களா? அது வேறொன்றும் அல்ல. தேவன் உனக்காக வைத்திருக்கும் ஆசீர்வாதத்திலிருந்து உன்னை தூரகொண்டு போகும்படியாய் செய்கின்ற பிசாசின் முயற்சியும் இருக்கிறது. அவனுக்கு நீங்கள் செவி கொடுக்காதீர்கள். எப்பொழுதும் தொடர்ந்து முன்னேறி போங்கள். 16அதைபற்றி அனுபவம் எனக்கு நெருக்கத்திலே நான் ஆப்பிரிக்காவுக்கு போகும் போது ஏற்பட்டது. பிசாசு என்னை அதிகமாய் நெருக்கின நேரம் என்று எனக்கு இருக்க வேண்டுமானால் அது நான் கடந்த முறை ஆப்பிரிக்காவுக்கு போக இருந்த நேரம் தான். நான் கடல் கடந்து சென்று நடத்தின கூட்டங்களில் அதுதான் மிகவும் நேர்த்தியானதும் அருமையாயிருந்த கூட்டங்கள். அந்த குறுகிய நேரத்தில்தான் எப்பொழுதும் இல்லாத விதமான வேட்டையும் அந்த நேரத்தில்தான். அநேக காரியங்கள் நிறை வேற்றப்பட்டன என்று நான் நம்புகிறேன். நான் எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த சபைகளெல்லாம் என்னை வேண்டாம் என்று சொன்னது என்று. ஆனால் அங்கு போனபோது நான் கண்டது என்னவென்றால் அங்கிருக்கின்ற சபை ஒன்றின். அங்கத்தினன் ஒருவன் அந்த சபை பெயர் பதித்த காகிதத்தில் ''எங்களுக்கு நீர் தேவை இல்லை என்று எழுதி அனுப்பியிருந்தான் அதன் அர்த்தம் என்னவென்றால் எங்களுக்கு என்பது எனக்கும் என் குடும்பத்திற்கும்“ என்பதையும் அது எல்லா ஜனங்களுக்கும் அல்ல என்றும் கண்டேன் ஆகவே. இப்பொழுது அது நமக்கு ஒரு திறக்கப்பட்ட பெரிய வயலாய் இருக்கிறது. 17பவுல் சொன்னதை பாருங்கள், “நன்மை செய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டு...'' ஒரு மனம்மாறின வாலிபன் ஒருவனை இன்றிரவு பீடத்திற்கு கொண்டு வாருங்கள். இந்த கூடாரத்திலிருந்தோ அல்லது தேசத்தில் எங்கிருந்தோ கொண்டு வாருங்கள். நினைவில் கொள்ளுங்கள்: நாளைக்கே அவளுடைய தாயார் என்றைக்கும் இல்லாத விதமாக கோபமாக இருப்பாள். தகப்பனாரும் எல்லா பள்ளி பிள்ளைகளும், மாறி இருப்பார்கள். எல்லாம் அங்கே தவறாக இருக்கும். ஏனென்றால் பிசாசு உன்னை மறுபடியுமாக திருப்ப பிரயாசிக்கிறான். பாதையை விட்டு நீ விலகி ஓடும்படியாய் அவன் பிரயாசிக்கிறான். நன்மை செய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டு. 18இப்பொழுது நாம் தாகத்தை பார்ப்போம். உண்மையாகவே தாகம் இயற்கையானதா என்று பார்ப்போம். ''நான் அப்படி செய்யவே இல்லை, நான் நினைக்கிறேன், அது கிறிஸ்தவர்களாய் இருக்கவேண்டும் என்கின்ற அவர்களுக்கு மட்டும் தான்“ என்று ஜனங்கள் என்னிடம் சொல்லியிருக்கின்றனர். இல்லவே இல்லை அது. தவறானது. அது உண்மையாகவே ஒவ்வொரு மனிதவர்கத்தோடும் தொடர்புள்ள ஒன்றாகும். அது நிச்சயமாக உண்மை. நாம் இந்த தேசத்திற்கு ஆதி நாட்களில் வந்த போது இங்கே நாம் அஞ்ஞானிகளை கண்டோம். அந்த இந்தியர்கள், அந்த நாளிலே அவர்கள் அந்நியராய் காணப்பட்டாலும் அவர்கள் சூரியனையோ அல்லது எதையோ வணங்கி வந்தார்கள். அவர்கள் மனிதர்களாய் இருந்த மட்டில் அவர்களுக்குள்ளாக ஏதோ ஒன்று இருந்தது. ஒரு இயற்கையான தாகம், எங்கேயோ தேவன் வேண்டுமென்று அழைக்கின்றது. 19சமீபகாலத்தில் ஆப்பிரிக்க காடுகளில் நாகரீகத்திலிருந்து சற்று 487 மைல்கள் தூரத்தில் சுமார் 3000 பேர் கொண்ட ஒரு சிறு பட்டணம் (மொசாம்பிக்கிலுள்ள பெய்ரா) இருக்கின்றது. வெள்ளையனையே பார்த்திராதவர்களை நாங்கள் கண்டோம். ஆடையேயில்லாத ஒரு கிராம பெண்ணைக் கண்டேன். நான் ஒரு சிங்கத்தை வேட்டையாட அதன் வழியாய் போன போது மரத்தின் மேல் உட்கார்ந்திருந்தாள் இந்த பெண். திடீரென்று மனித அலறல் கேட்டது. அவள் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு மரத்தின் மேல் உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவள் எதை கண்டு பயந்தாள். ஒரு சிங்கத்தையோ புலியையோ அல்லது எதையோ அல்லது ஏதோ மிருகத்தை காணும்போது அவளுக்குள்ள ஒரே ஒரு பாதுகாப்பு மரத்தின் மேல் ஏறிக் கொள்வது. அவள் என்னை பார்த்துவிட்டாள். அது ஒரு மனித குரல் என்றும் கேட்டாள். ஆனால் அவள், நோக்கி பார்த்த போது ஒரு வெள்ளையனை கண்டாள். அவள் தன் ஜீவிய நாட்களில் வெள்ளையான மனிதரை கண்டதே கிடையாது. ஆகவே அவளுக்கு மரண திகில் பிடித்தது . ஆனால் அந்த புராதன நிலையில் இருக்கின்ற அந்த ஜனங்களை கண்டபோது அவர்கள் இன்னமும் தொழுது கொண்டிருந்தவர்களாய் காணப்பட்டார்கள். நாங்கள் அவர்களை வரிசையில் அழைக்கும் முன்பாக அவர்கள் உண்ணுகின்ற ஆகாரத்தை ஒரு இலையில் வைத்து கரங்களை கொட்டி அவர்களுக்கே தெரியாத எங்கேயோ இருக்கின்ற ஒரு ஆவியை (கத்தோலிக்கர்களுக்குள்ள ஒரு அர்ச்சீடரை போன்று) சிங்கங்கள் அவர்களை தாக்கும் போது அவர்களை கொன்று போடாமல், அவர்களை பாதுகாக்கும்படி ஆவியை அழைத்தார்கள். 20பாருங்கள் அது ஏதோ இயற்கையானது. தேவனை பற்றின ஒரு தாகம் உண்டாவது இயற்கைக்கு மாறானது அல்ல. அது ஒரு இயற்கையான காரியம். நீ அவசியம் செய்ய வேண்டிய ஒரு காரியம். தேவன் அந்த வண்ணமாய் உன்னை உண்டாக்கி இருக்கிறார். அது ஏதோ மனுஷிகத்திற்கு மேம்பட்டதல்ல. அது வெறுமன எல்லா மனுஷரிடத்தில் காணப்படுகின்ற ஒரு பொதுவான காரியம். அது ஏதோ ஒரு சில ஜனங்களுக்கு மட்டும் விஷேமான தல்ல. ''நான் பார்த்திருக்கிறேன் அவர்கள் அவ்வளவு ஜெப ஜீவியம் செய்கிறார்கள். எப்பொழுதும் வீட்டின் கூரை மீது இருந்து கொண்டு தேவனை துதிக்கிறார்கள். அப்படி எனக்கு இருக்ககூடாதா என்று வாஞ்சிக்கிறேன்'' என்று அவர்கள் சொல்லுகிறார்கள் நீ அந்தவிதமாக உணருகிறதற்கு காரணம் உனக்குள்ளாக இருக்கின்ற தாகம் தான். அது ஒரு இயற்கையான காரியம். தேவனை பற்றின தாகம் உண்டாவது எல்லா மனுஷருக்கும் உள்ளது. 21இப்பொழுது நாம் இயற்கையான தாகத்தை குறித்து முதலாவதாக நாம் பார்ப்போம். ஒரு எடுத்துக்காட்டாக தண்ணீர் தாகத்தை குறித்து பார்ப்போம். தாவீது இங்கே சொன்னது போன்று தண்ணீரின் பேரில் தாகம். தண்ணீர் தாகம் சரீரத்திற்கு தண்ணீர் அவசியமாயிருக்கிறது. அந்த தாகத்திற்கு நீ தண்ணீர் அளிக்கவில்லை என்றால் நீ மாண்டுபோவாய். “சரீரம் தண்ணீரில்லாமல் வரண்டு போம் நீ ஜீவிக்கமாட்டாய்'' அந்த தாகத்திற்கு உன்னால் தண்ணீர் கொடுக்க முடியவில்லை என்றால், அந்த சரீரத்தின் இயற்கையான தாகத்தை தீர்க்க முடியவில்லை என்றால், நீ சீக்கிரத்தில் அழிந்துபோவாய். நீ அதிக நாட்கள் ஜீவிக்கமாட்டாய். தண்ணீரில்லாமல் நீ ஜீவிக்கக் கூடிய நாட்களைவிட அதிக நாட்கள் நீ ஆகாரம் இல்லாமல் ஜீவிக்கலாம். ஏனென்றால் நீ ஆகாரம் இல்லாமல் உபவாசம் இருக்கலாம் (இயேசு இருந்தார்) ஆனால் அதையும் கூட நீ தண்ணீர் இல்லாமல் அவ்வளவு காலம் இருக்க முடியாது. நீ வெறுமனே வரண்டுபோய் மரித்து போவாய். உனக்கு ஏன் தாகம் உண்டாகின்றது. உன்னுடைய சரீரம் உயிராய் இருக்க ஏதோ தேவையாய் இருக்கிறது என்று உனக்கு காண்பிக்க. இந்த சரீரம் உயிராய் இருக்க தண்ணீர் அவசியமாய் இருக்கிறது நீ 80% தண்ணீரும் எண்ணையுமாய் இருக்கிறாய், ஆகவே நீ உயிரோடு இருக்க இப்படிபட்ட மூலாதாரங்களை எடுத்துக் கொள்ளதான் வேண்டும். நான் சொன்னது போன்று இதை குறித்து நீ அலட்சியமாய் இருப்பாயானால் நீ அழிந்துபோவாய். தாகமும் கூட ஒரு அபாய அறிவிப்பாய் இருக்கிறது. தாகமாய் இருக்கின்றது ஒரு Alarm கடிகாரம் போன்று ஆத்துமா அந்த Alarm கடிகாரத்தை உனக்குள்ளாக ஒரு சத்தத்தை எழுப்பி மரணம் உன்னை நெருங்கி நிற்கிறது என்று உனக்கு கூறுகிறது. நீ சீக்கிரமாக அதற்கு தண்ணீர் கொடுக்கவில்லையென்றால் நீ மரிக்கத்தான் வேண்டும். அது இன்னும் உரக்க உரக்க ஆரம்பித்து நீ அதை தவிர்க்காமல் விடமாட்டாய். அப்படி இருக்கும். முடிவிலே நீமரித்து போவாய். ஏனெனில் அது Alarm எச்சரிப்பு கடிகாரம். 22சங்கீதத்தில் இங்கே தாவீது அதை விளக்கினது போன்று “மானானது நீரோடைகளை வாஞ்சித்து கதறுவது போல தேவனே என் ஆத்துமா உம்மை வாஞ்சித்து கதறுகிறது'' மானானது நீரோடைகளை வாஞ்சித்து கதறுவது போல! இதை நான் வாசிக்கும் போதெல்லாம் நான் அடிக்கடி தாவீதை குறித்து இப்படி நினைப்பேன். தாவீது ஒரு காடுவாசி வேட்டைக்காரன், நிச்சயமாக மான் வேட்டை ஆடியிருப்பான். நம்மில் அநேகர் இன்றைக்கும் கூட வேட்டையாடுகிறோம். நாங்கள் பார்த்திருக்கிறோம். காட்டு நாய்கள் ஒரு மானை பற்றி இழுப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா. ஓநாயை போன்று அதற்கு கோரை பல் இயற்கையாய் இருக்கும். அதனால் எகிரி காதுகளுக்கு மேலாக உள்ள கழுத்தை கவ்வி தன் சரீர எடையோடு தொங்கும். அது மானின் தொண்டையை அறுத்துவிடும். அப்பொழுது மானானது தப்பி போக எந்த விதமான சந்தர்ப்பமும் இருக்காது. சில நேரங்களில் ஆப்பிரிக்காவில் இருப்பது போன்ற காட்டு நாய்கள் எகிரி மானின் தொண்டையை பிடிக்க தவறும் போது தொண்டைக்கு கீழாக கவ்வும். இரண்டாவது முறையாக அதே இடத்தில் கவ்வும், ஆனால் மான் மட்டும் சற்று பலமுள்ளதாகவும் துரிதமாகவும் இருக்குமானால் அதனால் நாயை உதறித் தள்ளி விட்டு ஓட முடியும். 23நாய் மிகவும் வேகமாக ஒடும். மான் பார்க்காமல் இருக்கும் போது நாய் பாயும். காற்றிற்கு எதிர்வாடையில் நாய் இருக்கும் போது அது சமீபமாக இருக்கின்றது மானிற்கு தெரியாது. காட்டுநாய் அதை கவ்வும் போது மான் துரிதமாக இருக்குமானால் உதறிவிட்டு ஓட முடியும். ஆனால் நாய் அந்த கவ்வுதலிலிருந்து கீழே விழும் போது அதன் வாய் நிறைய மான் இறைச்சி இருக்கும். அல்லது அது கழுத்தை நோக்கி கவ்வும் போது நரம்பிற்கு பக்கமாக தான் கவ்வும். தவறிவிடும் மானானது உதறிவிடும் போது நாய் தன் வாய் நிறைய மாமிசத்தோடு விழும். அப்பொழுது இரத்தம் கொட்ட ஆரம்பிக்கும். அந்த நாயானது மானின் இரத்தம் சிந்திய பாதையில் மோப்பத்தோடு மானை பின் தொடர்ந்து ஓடிவரும். இரத்தம் சரீரத்தின் ஜீவ ஓட்டமாக இருக்கின்ற படியினால் இரத்தம் சிந்த சிந்த மானின் ஜீவன் குறைந்து கொண்டே வரும். மான் பெலவீனமடைகிறது. நாயோ அல்லது ஒநாயோ அப்பொழுது மானைப் பின் தொடர்ந்து வரும். அப்படியிருக்கின்ற அந்த மான் அப்பொழுது தண்ணீரை கண்டடையவில்லையென்றால், தண்ணீருக்குள் ஏதோ இருக்கின்றது. மான் தண்ணீரை குடித்துவிடும். இரத்தம் சிந்தாமல் நின்றுவிடும். தன்னை குளிர்ச்சி படுத்திக் கொள்ள அந்த மானிற்கு தண்ணீர் இல்லாமற்போகுமானால் இரத்தம் வேகமாக வெளியேறும். ஏனெனில் மானானது ஓடிக் கொண்டிருக்கின்றபடியினால் அதன் இருதயம் வேகமாக துடிக்கும். அதற்கு மட்டும் தண்ணீர் கிடைக்குமானால் அந்த மான் பிழைத்துக் கொள்ளும். 24இங்கே தாவீது “மானானது நீரோடைகளை வாஞ்சித்து கதறுவது போல தேவனே என் ஆத்துமா உம்மை வாஞ்சித்து கதறுகிறது'' என்று சொன்னதிலே அங்கே ஒரு பெரிய பாடம் இருக்கின்றது. தண்ணீர்அதற்கு கிடைக்கவில்லை என்றால் தன் ஜீவன் போகும் என்று அந்த மான் அறியும். அதனால் ஜீவிக்க முடியாது காயப்பட்ட பிறகு நான் மான்களை தொடர்ந்து போயிருக்கிறேன் அது தண்ணீர் ஓடையை கண்டவுடன் அதன் அக்கரைக்கு போய் தண்ணீரை குடித்துவிட்டு மலையின்மேல் ஏறி போய்விடும். திரும்பி வரும், தண்ணீர் குடிக்கும். மேலே போய் விடும். அந்த தண்ணீர் ஓடையண்டை அது இருக்கும் மட்டும் உன்னால் அதை பிடிக்க முடியாது. ஆனால் அந்த தண்ணீர் ஓடையை விட்டு அப்பாலே ஒரு தரம் போய் இன்னொரு ஓடை அதற்கு கிடைக்காமற்போகுமேயானால் நீ அதை பிடித்துவிடலாம். ஒரு மான் தன் மூக்கு மேல் நோக்கி இருக்கும்படியாய், உன்னால் யூகிக்ககூடும், அங்கே எங்கேயோ தண்ணீர் இல்லாத இடத்தில் சிக்கியது என்றாகும்? 25அவன் “மானானது நீரோடைகளை வாஞ்சித்து கதறுவது போல தேவனே என் ஆத்துமா உம்மை வாஞ்சித்து கதறுகிறது உம்மை நான் கண்டடையாமல் போவேனானால் கர்த்தாவே நான் அழிந்து போவேன்'' என்று சொல்கிறான். உம்மை காணாமல் என்னால் தொடர்ந்து போக முடியாது. ஒரு புருஷனோ, அல்லது ஸ்திரியோ, ஒரு பையனோ அல்லது பெண்ணோ, இப்படிப்பட்ட ஒரு தாகம் தேவன் மேல் உண்டாகுமானால் அவன் எதையோ கண்டடைய போகிறான், பார்த்தீர்களா? ஆனால் அந்த தாகத்தோடு கூட, “ஒரு பாதி வழி மாதிரி வருவோமானால், சரி நான் முழங்காற்படியிட்டு தேவன் என்ன செய்கிறார் என்று பார்ப்போம்” என்கிறது, நீ இன்னும் உண்மையான தாகமடையவில்லை. அந்த தாகம் எப்படி இருக்க வேண்டுமானால், மரணமோ, ஜீவனோ அதற்கு இடையில் இருக்க வேண்டும். அப்பொழுது ஏதோ காரியம் நடைபெறும். 26எதிரி வருகிறான் என்ற மோப்பம் அதற்கு உண்டு. அது எதிரி அருகில் இருக்கும் போது அது ஒரு எச்சரிப்பை கொடுக்கிறது அந்த சிருஷ்டியானது தன்னை பாதுகாத்து கொள்ள அதற்கொரு புலன் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதற்குள் எச்சரிப்பை கொடுக்கக் கூடிய ஏதோ அதற்குள் இருந்து எதிரியானவன் எங்கோ அருகில் இருக்கிறான், “அதன் மூக்கை அரிக்கும் போலிருக்கும். காற்று வாடையில் அதை அறியலாம். அவன் அங்கே இருக்கிறானா போய்விட்டானா என்று மான் அறியும், சில நேரங்களில் அரை மைல் தூரத்திற்கு அப்பால் எதிரி இருக்கும் போதே அதனால் மோப்பம் பிடித்து அந்த ஓநாய் இடத்திலிருந்தோ அல்லது ஆபத்திலிருந்தோ விலகி போய் விடும். அதனால் அதை உணர்ந்து கொள்ளமுடியும். ஏனென்றால் அது அந்த விதமாக உண்டாக்கப்பட்டிருக்கிறது” சுபாவப்படி அது ஒரு மான். அதனுக்குள்ளாக இருக்கும் அந்த உணர்வு தேவனால் அதற்கு கொடுக்கப்பட்ட ஒன்றாகும். அதன் மூலமாய் அது ஜீவனோடிருக்க. 27எதிராளி வருவதற்கு முன்னாக, நான் ஒரு மானையும் தேவன் மேல் தாகமாயிருக்கின்ற ஒரு மனிதனையும் ஒப்பிட்டு சிந்தித்தேன். தேவனுடைய ஆவிக்குள்ளாக மறுபடியும் பிறந்து பரிசுத்தாவியின் அபிஷேகத்தை பெற்ற ஒரு தேவனுடைய பிள்ளைக்குள் ஏதோ இருக்கின்றது. எதிரியை உணர்ந்து கொள்ளக் கூடிய ஏதோ ஒன்று அந்த மனிதனுக்குள் இருக்கிறது. வேத வார்த்தைகளை எடுத்து வேத வாக்கியங்களை வாசித்து அந்த வேத வார்த்தைக்குள் எதையோ உள் நுழைக்க பிரயாசிக்கின்ற ஒரு மனிதனை எடுத்து கொள்வாயானால் அவனை பரிசுத்தாவியினால் நிரப்பப்பட்ட ஒரு மனிதன் சீக்கிரத்தில் உணர்ந்து கொள்ளுவான். அங்கே ஏதோ வழிக்கு அப்பாற்பட்டது அவன் ஒரு இடத்திற்கு போன போது... அவனுடைய ஜீவனை பாதுகாத்துக் கொள்ளும்படியாக அந்த எச்சரிக்கை உணர்வு அவனுக்குள் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அது சரியாக தேவனுடைய வார்த்தையாக இருந்தாலொழிய, அவ்விடத்திற்கு போகக் கூடாது. நீ எப்பொழுதும் சரியாக தேவனுடைய வார்த்தையோடு கூடத்தான் இருக்க வேண்டும். நாம் பரிசுத்த ஆவிக்குள்ளய் இருக்குமட்டாய் அந்த உணர்வினால் பாதுகாக்கப்பட்டு இருக்கிறோம். 28நீ போய் மாற்கு: 16 அல்லது உதாரணமாக இப்படியும் சொல்லலாம். நான் மாற்கு: 16 வாசித்தேன். அது “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன. என் நாமத்தினாலே பிசாசுகளை துரத்துவார்கள் நவமான பாஷைகளை பேசுவார்கள் அல்லது சர்ப்பங்களை எடுப்பார்கள். சாவுக்கேதுவான யாதொன்றை குடித்தாலும் அது அவர்களை சேதப்படுத்தாது. வியாதியஸ்தர்கள் மேல் கைகளை அவர்கள் வைத்தால் வியாதியஸ்தர் சொஸ்தமாவார்கள்'' என்று சொல்லுகிறது. யாராவது அங்கே எழும்பி நின்று “அது அப்போஸ்தல காலத்திற்குரியது'' என்று சொல்ல கூடும். அந்த க்ஷணத்தில் தானே நீ மட்டும் பரிசுத்தாவியை பெற்று அந்த உணர்வு கொடுக்கப்பட்டிருக்குமானால் உடனே அது வேலை செய்யும். அங்கே ஏதோ தவறு இருக்கின்றது பார்த்தீர்களா? அவைகள் வேறே ஏதோ காலத்திற்கு உரியது என்றும் இந்த நாட்களுக்கு அவைகள் அவசியமில்லை என்றும் விளக்கம் கொடுக்க முயற்சிப்பார்கள். ஆனால் விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும் என்று இயேசு சொன்னார். அது தவறானது என்றும் அது மரணத்தின் வழி என்றும் அறிந்து உனக்குள்ளாக இருந்து ஏதோ எச்சரிப்பின் சத்தத்தை அது எழுப்பும். 29ஏனென்றால் ''இதனோடு ஒரு வார்த்தையை கூட்டவோ அதிலிருந்து ஒரு வார்த்தையை குறைக்கவோ கூடாது. அப்படி செய்தால் ஜீவ புஸ்தகத்திலிருந்து அவனுடைய பெயர் நீக்கப்படும் என்று இயேசு சொல்லியிருக்கிறார். ஒரு வேத வசனமல்ல. நாம் அதை அப்படியே எழுதப்பட்ட வண்ணமாய் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். தேவன் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றும்படியாய் அதன் பேரில் கவனமுள்ளவராய் இருக்கிறார். நாமும் கூட அது அப்படி சரியாகத்தான் இருக்க வேண்டும் என்று அறிவோம். ஆனபடியினால் ஒரு சபை என்ன சொல்லும் என்பதை பற்றி கவலையில்லை. மற்ற யாராவது என்ன சொல்லுவார்கள் என்பதை பற்றி கவலையில்லை, தேவனுடைய ஆவியினால் பிறந்திருப்பாயானால் வேதத்தின் ஒரு பகுதியாக நீ ஆகிறாய், தேவன் எசேக்கியேலை பார்த்து அவன் ஒரு தீர்க்கதரிசி “புஸ்தக சுருளை எடுத்து புசி'' என்று சொன்னார். அப்பொழுது அந்த சுருளும் தீர்க்கதரிசியும் இருவரும் ஒருவருக்கொருவர் பாகமாகி விட்டார்கள். பரிசுத்தாவியை பெற்றுக் கொள்ளும்போது ஒரு விசுவாசியும் அதே மாதிரியாகத் தான் இருக்கிறான். பரிசுத்தாவியானவர்... வேதாகமத்தை எழுதினார். தேவனுடைய ஆவி தான் தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறது. என்னுடைய வார்த்தைகள் ஆவியாயிருக்கிறது. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது, அந்த வார்த்தைதேவனாயிருந்தது, அந்த வார்த்தை மாமிசமாகி நமது மத்தியில் வாசம் பண்ணினார் (எபிரேயர். 13.8) அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்! நீ அந்த வார்த்தையின் ஒரு பகுதியாயிருக்கும் போது அந்த வார்த்தைக்கு முரணாக ஏதாவது வரட்டும் உடனே உனக்குள்ளாக உணர்வு எச்சரிப்பின் சத்தத்தை எழுப்பும். அது மரணமானது பாதையில் வந்திருக்கின்றது என்பதை எச்சரிக்கிறது. நாம் அதை ஒரு போதும் செய்யக் கூடாது. இந்த தாகங்கள் இயற்கையானவைகளே. ஒரு கிறிஸ்தவனுக்கு இவை இயற்கையானவைகள். மனித வர்க்கத்திற்கு இவை இயற்கையானவைகள். 30வெற்றி காணவும் தாகங்கள் உண்டு. இப்படிப்பட்ட தாகங்கள் உண்டாக இன்றைக்கு அநேகர் எப்படி பயிற்றுவிக்கிறார்கள் நாம் இப்பொழுது கவனித்தோம். பல்கலை கழகத்தை ஆரம்பித்தனர். நாம் அங்கே போகிறோம், அநேக ஆயிரக்கணக்கான டாலர்களை பிள்ளைகளை பள்ளிக்கும் பல்கலைகழகங்களுக்கும் அனுப்ப செலவிடுகின்றனர். வாழ்க்கையில் வெற்றிகரமாயிருக்க என்று அவைகளை அழைக்கின்றனர். நான் அதற்கு எதிராக ஒன்றும் சொல்லவில்லை, அவைகள் சரிதான். ஆனால் என்னை பொருத்தமட்டில் நீ உலகில் எல்லாவித பயிற்சியும் அளிக்கப்பட்டும் இன்னமும் சரியான வெற்றியை அடையாதவனாய் இருக்கிறாய் என்பது தான். அது சரி, ஏனென்றால் அது இங்கே அது உனக்கு காரியங்களை தற்காலிகமாக இலகுவாக்கும். ஆனால் நீ மரிக்கும் போது அவைகளெல்லாவற்றையும் இங்கே நமக்குள்ளதான பொருளாதாரத்தையும் நீ விட்டுவிட்டு போகிறாய். 31அன்றொரு நாள் போனிக்சில் இதை நான் சொன்னேன், இதோ மறுபடியுமாய் அதையே சொல்லுகின்றேன் “இந்த எல்லா நவீன நாகரீகம், எல்லா கல்வி திட்டங்களும், விஞ்ஞான திட்டங்களும், இவைகள் எல்லாம் தேவனுடைய வார்த்தைக்கும் அவருடைய சித்தத்திற்கும் முரணாயிருக்கிறது. வரப்போகின்ற உலகத்தில் இன்றைக்குள்ளது போன்றதொரு நாகரீகம் இருக்கப் போகிறதில்லை இது தலைகீழான நாகரீகம். தேவன் தம்முடைய நாகரீகத்தை முதலாவது உடையவராயிருந்தார். அவர் தம்முடைய வார்த்தையை பேசின போது அவை அவைகளின் இனத்தின்படியே வித்துக்கள் உண்டாகின. அந்த நாகரீகத்தில் மரணம், வியாதி, துக்கம், இருக்கவில்லை. இப்பொழுதும் நாம் யாவற்றையும் விஞ்ஞான உலகத்தில் எடுக்கின்றோம். அது இவைகளையெல்லாம் ஒன்றுபடுத்தி அதை வேறே எதையாகவோ தாறுமாறாக்கி அது மரணத்தை கொண்டு வருகின்றது. அணுகுண்டை போன்று இந்த காரியங்களை குறித்த சூத்திரம் எனக்கு தெரியாது. ஒருவேளை நான் இதை தவறாக சொல்லலாம். ஒரு மாலிகியூலை பிளக்க அவர்கள் யூரேனியத்தை எடுக்கிறார்கள். அந்த மாலிகியூல்கள் அணுக்களாக உடைகின்றன; அதன் பிறகு அது என்ன செய்கிறது? முற்றிலுமாய் அழிக்கப்படுகின்றது. நாம் செய்கின்ற யாவும்! 32நாம் மருந்து எடுக்கின்றோம், இதை சுகப்படுத்த இந்த சூத்திரத்தை எடுத்து அந்த சூத்திரத்தோடே கலந்து அதை நாம் உட்கொள்ளுகிறோம். நாம் என்ன செய்கிறோம்? நாம் வேறே எதையோ கிழிக்கின்றோம். கடந்த மாதம் ரீடர்ஸ் டைஜஸ்ட் வாசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் அதில் “நாம் ஜீவிக்கின்ற இந்த நாட்களில் வாலிப ஸ்திரிகளும், புருஷர்களும், அவர்களுடைய நடுவயது பருவத்தை 20 முதல் 25-க்குள் அடைந்து விடுகிறார்கள்'' என்று எழுதப்பட்டிருக்கிறது. அதை சற்று யோசித்து பாருங்கள். வாலிப பெண்கள், அவர்களுடைய ஸ்திரிகளுக்குள்ள வழிபாடு 20 முதல் 23-க்குள் நின்று போகின்றது. பார்த்தீர்களா. இவைகள் எதனால் உண்டாகின்றன. கலப்புள்ள பதார்த்தங்களை ஆகாரத்தை நாம் புசிக்கிறதினால் உண்டாகின்றன. இவைகளையெல்லாம் நம்முடைய விஞ்ஞானிகள் கொண்டு வந்தார்கள். அவைகளை அப்படி செய்வதினால் அவைகள் உன்னை கொன்று போடுகின்றது. நான் ஆப்பிரிக்காவில் இருந்தேன். அங்கே தங்கள் ஜீவிய நாட்களில் மருந்தையே சாப்பிட்டறியாத வாலிப பையன்களை கண்டேன். அவர்கள் இறைச்சியை புசிக்கிறார்கள் அதில் (Maggets) புழுக்கள் இருக்கின்றன. அவர்கள் ஒரு குளத்திலிருந்த நீரை பருகினர். அதை பார்த்தால் ஒரு எருதையே கொன்றுபோடும் போலிருக்கின்றது அந்த தண்ணீர். நான் அங்கே 200 கெஜ தூரத்தில் உள்ளதிற்கு துப்பாக்கியால் குறி வைத்தேன். என்னால் அதை 75 அளவுள்ள தூரபார்வை குழாயினால் தான் (பைனாகுலர்) (Binocalars) பார்க்க முடிந்தது. என்னுடைய வயதுள்ள ஒருவர் அங்கே நின்று கொண்டிருந்தார். நான் சுட்ட இடத்தை எனக்கு வெறும் கண்களினாலே கண்டு சொன்னார். இந்த நவீன கலாச்சாரம் எனக்கு கொடுத்ததெல்லாவற்றிலும் இந்த மனுஷனுக்குள்ள கண்ணும் வயிறும் எனக்கு இருக்குமானால் நான் நல்ல மனுஷனாக இருப்பேன் என்று உணருகிறேன். அதுதான் காரியம், விஞ்ஞானம், கல்வி, நாகரீகம் இவைகளால் நாம் அழிக்கப்படுகிறோம். நம்மை நாமே அழிக்கிறோம். அது ஏதேன் தோட்டத்தில் ஆரம்பமாகி இன்றைக்கும் தொடர்ந்து, ஓடிக் கொண்டே இருக்கிறது. ஆனால் வெற்றியின் மேல் தாகமாயிருக்கிறார்கள். பின்பு நாம் ஐக்கியத்தின் மேல் தாகமாயிருக்கிறோம். நாம் போகிறோம். நமக்கு ஐக்கியம் தேவையாயிருக்கிறது. 33அது ஒரு வாலிப் புருஷனும் ஒரு வாலிப ஸ்திரியும் போன்றது. ஒரு வாலிப பெண்ணும் ஒரு வாலிப ஆணும் ஒருவரை ஒருவர் நேசிப்பதை, நான், அவசியமற்றது அல்லது இயற்கைக்கு மாறானது என்றல்ல. அது ஒரு அன்பின் தாகம். அது அவர்களுடைய பருவம் அவர்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்கள். அது இயற்கைக்கு மாறானதல்ல. அவர்கள் அதை செய்ய, அது அவர்களுக்கு ஒரு இயற்கையான காரியமாய் இருக்கிறது. இந்த இயற்கையின் சரீரத்தில் நாம் ஜீவிக்கின்றதான ஜீவியம் நாம் தாகமாயிருக்கின்ற காரியங்கள் அநேகம் இருக்கின்றதை நாம் பார்த்தோம். அது ஏதோ நமக்குள்ளாக இருக்கின்றது. நாம் அதை செய்ய விரும்புகின்றோம். அது முற்றிலுமாக நமக்கு அவசியம் என்று நாம் உணருகிறோம். நமக்கு தேவையாய் இருக்கின்றபடியினால் நாம் அதை செய்கிறோம். இந்த நாட்களில் நாம் அநேக ஸ்திரீகள் அழகின்மேல் தாகமுள்ளவர்களாய் இருக்கின்றதை பார்க்கிறோம். தான் பார்ப்பதற்கு நன்றாக இருக்க வேண்டுமென்று தாகம் பெண்களுக்கு இயற்கையான ஒரு காரியம். அது தேவனால் கொடுக்கப்பட்ட ஒரு உணர்வு, ஸ்திரீக்கு அந்த நல்ல தோற்றம் தன் புருஷனுக்காக தேவனால் கொடுக்கப்பட்டதாய் இருக்கிறது. அந்த விதமாக இருக்கதான் ஸ்திரி விரும்புகிறாள். அது ஏன் அப்படி இருக்கிறது? ஏனென்றால் அப்படி இருக்கும்படியாய் தேவன் அதை அவளுக்கு கொடுத்தார். நல்ல தோற்றம் உடையவர்களாயிருப்பது பெண்களுக்கு தவறல்ல. அவர்கள் அப்படிதான் இருக்க வேண்டும். 34சிருஷ்டிகளிலே இந்த ஒன்றுதான் ஆணைக் காட்டிலும் பெண் அழகாயிருப்பது. அது மனித வர்க்கத்தில் தான். மற்ற எந்த மிருகமும், பசுவையும் எருதையும் எடுத்துக் கொள்ளுங்கள். ஆண் மானையும் பெண் மானையும் எடுத்துக் கொள்ளுங்கள், பெட்டைக் கோழியையும் சேவலையும் எடுத்துக் கொள்ளுங்கள், தாய் பறவையையும் ஆண் பறவையையும் எடுத்துக் கொள்ளுங்கள். இவைகளில் எல்லாம் ஆணானது பெரியதும் அழகாயும் இருக்கும். ஆனால் மனித வர்க்கத்தில் அங்கேதான் இந்த தாறுமாறுதல் உண்டாகின்றது. அங்கே மாற்றம் உண்டாகின்றது. ஸ்திரியானவள் எவ்வளவு அழகாயிருக்கிறாள். அவர்கள் அழகாயிருக்க இச்சிக்கிறார்கள். இன்றைக்கு நாம் வீதிகளில் பார்க்கிறதான தெளிவில்லாத சிருஷ்டிகளைப் போல் அல்ல. அப்படிப்பட்ட தோற்றம் அல்ல. என் ஜீவியத்திலே நான் பார்த்த பயங்கரமாய் தோற்றமளிக்கிறவர்கள் உண்மையான தாகத்தை தலைகீழாக்குகின்ற தாறுமாறானது. 35ஒரு ஸ்திரிக்கு இருக்க வேண்டிய உண்மையான தாகம் என்னவென்றால் தகுதியான வஸ்திரங்களினால் தன்னை அலங்கரித்து கிறிஸ்துவை போன்ற ஆவியை உடையவளாய் இருப்பதே. (1தீமோ. 2:9) இந்த விதமாகத்தான் ஒரு ஸ்திரிக்கு தாகம் இருக்க வேண்டும். அப்படி அழகாய் இருக்க வேண்டுமானால் இந்த விதமாகத்தான் உன்னை அழகுபடுத்திக் கொள்ள வேண்டும். பார்த்தீர்களா! கிறிஸ்துவைப் போன்ற ஆவியும் தகுதியான வஸ்திரங்களால் அலங்கரித்துக் கொள்ளுதலும். இன்றைக்கு வீதியில் காணுகின்ற சில ஜனங்களை போன்று, ஓ! ஒரு மனுஷனா அல்லது ஸ்திரியா என்று உன்னால் சொல்ல முடியாது. மிகவும் பயங்கரமாய் காட்சியளிக்கின்ற காரியம் மனித வர்க்கத்தைப் போன்று நான் பார்த்ததே கிடையாது. அது மனுஷகத்திற்கு அப்பாற்பட்டது. இந்த வண்ணமாக கண்களுக்கு வர்ணம் தீட்டிக் கொள்ளுதல், வேடிக்கையாய் காணப்படுகின்ற பல்லியின் கண்கள், அவர்களுடைய வேடிக்கையான ஆடைகள், எல்லாம் வித்தியாசமான வடிவம். அவர்கள் மனித வர்க்கம் போன்று கூட காணப்படுவதில்லை. சில பையன்கள் அவர்களுடைய சகோதரிகளின் சுருள் சாதனங்களை அணிந்து கொண்டு முடியை சுருட்டி விட்டுக் கொள்ளுதல் அது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா, முற்றிலுமான தாறுமாறாதல். அது சாத்தான் தான் தாறுமாறாக்குகிறவன். 36ஏதேன் தோட்டத்தில் எல்லாக் காரியங்களை உண்டாக்கின போது அது மிகவும் அழகாயிருந்தது. அதன் பின்பு சாத்தான் வந்து எல்லாவற்றையும் தாறுமாறாக்கிப் போட்டான். சாத்தானால் ஒன்றையும் சிருஷ்டிக்க முடியாது. ஒரே ஒரு சிருஷ்டி கர்த்தா உண்டு. அவர் தேவன். ஆனால் சாத்தான் மூல சிருஷ்டியைத் தாறுமாறாக்குகிறான். இப்பொழுது அவன், இப்பொழுது தேவன் மனுஷனுக்குள்ளாக வைத்த அந்த மூல தாகத்தை தாறுமாறாக்குவதில் இறங்கிவிட்டான். நான் முன் சொன்னது போன்று ஒரு ஸ்திரியானவள் அழகாயிருக்க விரும்புகிறாள். அவள் பெண்மை என்று சொல்லத் தக்கதாக அவளுக்குள் ஏதோ ஒன்று இருக்கிறது. ஆக அவள் அந்த வண்ணமாக இருக்க விரும்புகிறாள். ஆனால்அவர்கள் இன்றைக்கு வீதியில் போகும் விதத்தைப் பார்த்தால் ஆணைப் போன்று முடியைவெட்டி ஆண்களின் உடைகளை அணிந்து கொண்டு, பின்பு மனிதன் அப்படியே மாறி ஸ்திரிகளின் உடைகளை அணிந்துக் கொண்டு, ஸ்திரிகளைப் போன்று தலை முடியை வெட்டிக் கொண்டு இருக்கிறார்கள். உன்னுடைய ஆகாரம் தாறுமாறாக்கப்பட்டிருக்கின்றது. உன்னுடைய ஜீவியம் தாறுமாறாக்கப்பட்டுருக்கின்றது. உன்னுடைய தாகம் தாறுமாறாக்கப்பட்டிருக்கின்றது. உன்னுடைய வாஞ்சை தாறுமாருக்கப்பட்டிருக்கின்றது. இது தாறுமாறாக்கப்படுதலின் நாளாயிருக்கின்றது. 37சில நாட்களுக்கு முன் நான் சாத்தானின் ஏதேன் என்பதை பேசினேன். தேவன் 6000 வருஷம் எடுத்துக் கொண்டு ஒரு பரிபூரண ஏதேனை உண்டு பண்ணினார். சாத்தான் அதன் பின்பு வந்து அந்த விதைகளை தெளித்து அவைகளை அங்கவீனமாக்கினான். இப்பொழுது அவனுக்கு 6000 வருஷங்கள் கொடுக்கப்பட்டது அவனுக்கு இப்பொழுது அவனுடைய சொந்த விஞ்ஞான ஏதேன் உண்டாயிருக்கிறது. திரும்பவுமாக சரியானதிலிருந்து தாறுமாறாக்குதலுக்குக் கொண்டு வந்தான். இது கலப்பாக்குதலின் காலமாயிருக்கிறது. இன்றைக்கு சபைகளும் கூட கலப்பாயிருக்கும் அளவிற்கு வந்துவிட்டது. அது சரி. அவர்கள் இங்கே வந்து ஒரு சபைக்கு போகிறார்கள். அது ஒரு சபைக்கு பதிலாக தங்கும் விடுதி போன்றிருக்கின்றது. ஒரு சபை என்று சொல்லும் போது, அது ஜனங்கள் ஒன்று கூடி ஆவியோடும் உண்மையோடும் தேவனை ஆராதிக்கின்ற ஒரு ஸ்தலம். ஆனால் இன்றைக்கோ அது ஒரு விடுதியாய் இருக்கின்றது. கொஞ்ச நேரம் ஐக்கியப்படவும் கைகளை குலுக்கவும் அக்கட்டிடத்திற்குப் பின்னால் போய் கொஞ்சம் கருப்பு காப்பி சாப்பிடவும் நாம் அங்கே போகிறோம். அடுத்த வாரம் வரும் வரை வீட்டிற்கு போகிறோம். நாம் நம்முடைய மார்க்க ரீதியாக கடமையைச் செய்தோம். இது ஒரு தாறுமாறாக்கப்பட்ட காலம். தாகம் இருக்கும் படியாய் உனக்குள் தேவன் போட்ட தாகத்தை சாத்தான் தாறுமாறாக்குகிறான். சாத்தான் அவைகளை தாறுமாறாக்குகிறான். 38ஸ்திரிகளாகிய நீங்கள் உங்களை அழகுபடுத்திக் கொள்ள வேண்டுமானால்! தீமோ. 2:9 எடுத்துக் கொள்ளுங்கள் அதாவது தகுதியான வஸ்திரங்களினால் அலங்கரித்துக் கொண்டு தன் புருஷனுக்கு அடக்கமுள்ளவளாய் இருக்கத் தக்க கிறிஸ்து போன்ற ஆவி உடையவர்களாய் இருங்கள். அந்த விதமாகத்தான் நீ உன்னை அலங்கரித்துக் கொள்ளவும், ஜீவிக்கவும் வேண்டி இருக்கிறாய். தேவனுடைய இயற்கையான சுபாவத்தையும், ஆவி ஆத்துமாவில் உள்ள உண்மையான தேவனுடைய தாகத்தையும் பாவத்தின் இச்சையினால் அதை அவன் தாறுமாறாக்குகிறான். பாவம் தாறுமாறாக்கப்பட்டது! அந்த நாட்களிலே தேவனைப் பற்றின தாகத்தையும், செளந்தரியமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்ற தாகத்தையும் மற்ற இந்த எல்லா தாகத்தையும் ஜனங்கள் எப்படி தாறுமாறாக எடுத்துக் கொண்டார்கள் என்று நாம் பார்த்தோம். தண்ணீரை பொறுத்த மட்டில், குடிக்கிறதின் மூலமாய் அதை அவர்கள் திருப்தி படுத்திக் கொண்டார்கள். சந்தோஷமாக இருக்கின்ற தாகம். எல்லோரும் சந்தோஷமாய் இருக்க விரும்புகிறார்கள். ஐக்கியம் கொள்ள தாகம் நாம் தேவன் பேரில் தாகமாயிருக்க, இப்படிபட்ட தாகங்களை எல்லாம் தேவன் நமக்கு வைத்திருக்கின்றார். தேவன் நீ அவர் பேரில் தாகமுள்ளவனாய் இருக்கும்படிக்கு உன்னை உண்டாக்கினார். ஆனால் நாம் இதை வேறே ஏதோ விதமான தாகத்தினால் திருப்தியாக்க பிரயாசிக்கிறோம் சரியான தாகத்தின் தாறுமாறலினால் திருப்தியாக்குகிறோம். பாருங்கள் எப்படி அது இயற்கையில் இருக்கிறதென்று? பாருங்கள் எப்படி அது ஆவிக்குரியதில் இருக்கிறது என்று? நாம் நினைக்கிறோம் ஒரு சபையில் நாம் சேர்ந்து கொள்ளும் போது அது எல்லாவற்றையும் சரியாக்கி விடுகிறது. நாம் செய்ய வேண்டிய காரியங்கள் அவ்வளவு தான் என்று. அது முற்றிலுமாக தவறு. நீ தேவன் பேரில் தாகமாய் இருக்க வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். மானானது நீரோடைகளை வாஞ்சித்து கதறுவது போல தேவனே என் ஆத்துமா உம்மை வாஞ்சித்து கதறுகிறது. 39அந்த மானானது நீரோடைகளை வாஞ்சித்து கொண்டு இருக்கிற போது, ஒரு வேளை இன்னொரு மானானது அங்கு வந்து இந்த விதமாக சொன்னால் எப்படி இருக்கும் “நான் என்ன செய்யக் கூடும் என்று உனக்கு சொல்லுகிறேன். எனக்குத் தெரியும் இங்கே ஒரு மண் பொந்து இருக்கிறது'' என்று சொல்லுமானால் அந்த மானுக்கு அது தேவையில்லை. அந்த மானுக்கு எந்த நன்மையுஞ் செய்யாது. மனுஷ வர்க்கத்திற்குள்ளாக இருக்கின்ற அந்த தாகத்தை, தேவன் அவர்களுக்குள் வந்தாலொழிய வேறொன்றும் அதை திருப்தியாக்க முடியாது. அவன் அதை பெற்றுக் கொள்ள வேண்டும் அல்லது மரிக்க வேண்டும். எந்த ஒரு மனுஷனுக்கும் அவனுக்குள் இருக்கும் அந்த பரிசுத்தமான தாகத்தை அழுத்திப் போடவோ அல்லது மற்ற உலகத்தின் காரியங்களில் திருப்தியாக்கவோ எந்தவித அதிகாரமும் இல்லை. அப்படிச் செய்வது தெய்வ பக்தியாயிராது. உனக்கு தேவன் மேல் தாகம் உண்டாயிருக்குமானால் ஒரு பிரசங்கியாரின் கைகளை குலுக்கி உன் பெயரை அந்த புஸ்தகத்தில் எழுதாதே, தேவன் மேல் உனக்கு தாகம் உண்டாயிருக்குமானால் அதை திருப்தி செய்ய ஒரே ஒரு வழி தான் உண்டு. அது தேவனை சந்திப்பது. உனக்கு தேவன் மேல் தாகம் உண்டாயிருக்குமானால் அந்த ஒரே வழியில் தான் நீ அவரை சந்திக்க முடியும். செய்யக் கூடிய காரியமும் அதுவே. 40அந்த வேளையிலே நீ என்ன செய்கிறாய் என்பதை கவனிக்காமலிருப்பாயானால் அங்கே ஒரு பெரிய ஆபத்தும்கூட இருக்கிறது. தேவன் மேல் உனக்கு தாகம் உண்டாயிருக்குமானால் நீ சந்திக்கிறது தேவன் தான் என்ற நிச்சயம் உனக்கு உண்டாயிருக்க வேண்டும். உன்னுடைய தாகம் திருப்தியாக்கப்பட்டது என்ற நிச்சயத்தை உடையவனாய் இரு. இந்த இயற்கையான பசியிலிருந்து பிசாசு உன்னை தலைகீழாக்க முடியுமானால், அவன் அதை செய்வான் நீ அதினால் திருப்தியாகும் படியாய் முயற்சிப்பான். ஒரு மனிதன் வெளியே போகிறான், அவனை மதுபானம் அருந்த வைக்கிறது என்ன? ஏனென்றால் அவன் கவலையுற்று மன முடைந்திருப்பதினால்... அவனுக்குள் ஏதோ குறைவுபடுகிறது. 41சில காலத்திற்கு முன்பாக நான் மேயோ (Mayo)விலிருந்தேன். அங்கே பேட்டி கண்டு கொண்டிருந்தேன். அங்கே குடிப் பழக்கத்தை குறித்து பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுது நான் என் தகப்பனார் குடிப்பார் என்றேன். ''அவரை குடிக்க வைத்தது என்ன'' என்று சொன்னார். நான் “எனக்குத் தெரியாது” என்றேன். அவர் ''அது ஏனென்றால் அங்கு ஏதோ அவரை திருப்தி ஆக்காமல் இருந்தது, அதை அவர் சிந்தையிலிருந்து எடுத்து போட குடித்தால் முடியும் என்று அவர் எண்ணினார்“. அச்சணமே நான் அதை பிடித்துக் கொண்டேன் உண்மையாகவே அந்த தாகத்தை திருப்தி செய்ய கூடிய ஒன்றே ஒன்று அது தேவன் தாம். தேவன் ஒருவர், அந்த மனுஷக தாகத்தை திருப்தியாக்கக் கூடியவர். அதாவது தேவனை ஏற்றுக் கொள்வது. 42நான் சொன்னது போன்று சாத்தான் இவைகளை எடுத்து அதை தாறுமாறாக்குகிறான். அந்த தாகத்திற்கு உன்னுடைய ஜீவியத்தில் நீ சரியான இடத்தை கொடுக்காமற் போவாயானால், அந்த தாகத்தை திருப்தியாக்க தேவன் வைத்திருக்கின்ற காரியங்களின் பேரில் உனக்கு தாகம் இல்லாமற் போகுமேயானால் அப்பொழுது சாத்தான் வந்து உன்னை உலகத்தின் சாக்கடை தண்ணீர் தேக்கத்திற்கு உன்னை வழி நடத்துவான். எங்கேயாவது அதை நீ பெற்றாக வேண்டும். உன்னால் ஆகாரம் பெற்றுக் கொள்ள முடியாமற் போகுமானால் குப்பை தொட்டியில் விடப்பட்டிருக்கின்ற பருக்கைகளை புசிப்பாய். பார்த்தீர்களா? உனக்கு தண்ணீர் கிடைக்காமல் மரிக்கும் தருவாயில் இருப்பாயானால் எந்த விதமான குளத்திலிருந்தும் தண்ணீரை குடிப்பாய். ஏனென்றால் நீ அழிந்து கொண்டு போகின்றாய். ஆனால் நீ தேவன் பேரில் தாகமாயிருக்கும் போது அதற்கு எந்தவித காரணமுமில்லை. ஏனென்றால் தேவன் ஜீவிக்கின்ற தேவனாயிருக்கிறார் ஏதோ சரித்திர பிரகாரமான தேவனல்ல “என் ஆத்துமா தேவன் மேல், ஜீவனுள்ள தேவன் மேலேயே தாகமாயிருக்கிறது” ஜீவத் தண்ணீரை கொடுக்கின்ற ஏதோ ஒன்று திருப்தியாக்குகின்ற ஏதோ ஒன்று. 43இன்னொரு இயற்கையான தாகம் இருக்கின்றது. அந்த ஆத்துமாவின் தாகத்தில் நீ ஒரு வேளை சொல்லலாம், “சகோ. பிரன்ஹாமே அந்த ஆத்துமாவுக்கு தாகமுண்டாகுமா அது இயற்கையா”? ஆம் அப்படி ஆத்துமாவுக்கு தாகமுண்டாவது இயற்கைதான். அப்படி தான் அவர் பேரில் நீ தாகமாயிருக்கும் படியாகதான் அவர் உன்னை உண்டாக்கி இருக்கிறார் நீ அவர் பேரில் தாகமாயிருக்கும் படியாய் அவர் விரும்புகிறார். “தேவன் உன்னை அவ்விதமாய் உண்டாக்கி இருக்கிறார். அவர் அப்படி உன்னை உண்டாக்கி இருக்க வேண்டியதில்லை. ஆனால் அவர் அப்படித்தான் செய்திருக்கிறார் நீ அவர் மேல் தாகமாய் இருக்கும்படியாய் அவர் உன்னை உண்டாக்கி இராமல் இருந்திருப்பாரேயானால் அந்த நியாயாசனத்தில் அங்கே சாக்கு போக்கு இருக்கும். நான் தேவன் மேல் தாகமாகவே இல்லை'' என்று. ஆனால் நீ சொல்ல உனக்கு எந்த சாக்கு போக்குமில்லை. எப்படியாவது நீ செய்வாய். அதை உன் மனைவியாக செய்வாய், அதை உன்னுடைய வாகனமாக செய்வாய். அதை நீ வேறே ஏதாவதாய் செய்வாய். நீ கோயிலுக்குப் போய் அதை திருப்தியாக்க பிரயாசிப்பாய். கோயிலுக்குப் போவதை குறித்து நான் எதிர்த்து பேசவில்லை. ஆனால் அது திருப்தியாகாது. திருப்தியானது தேவனை, தேவனை, ஜீவனுள்ள பரலோகத்தின் தேவனை, உன்னுடைய ஆத்துமாவிற்குள்ளாக கண்டடைவது. அது உனக்குள்ளாக தாகித்துக்கொண்டிருக்கிறதும் அதிக காலமாய் ஏங்கிக் கொண்டிருக்கிறதையும் திருப்தியாக்கும். நீ அவருடைய ஐக்கியத்திற்காகவும் அவர் மேலும் தாகமாயிருக்கும் படியாக தேவன் உன்னை உண்டாக்கினார். ஐக்கியத்திற்காக அசலான தாகமுண்டு. நாம் ஒருவரையொருவர் சந்திப்பதை விரும்புகிறோம். அதை நாம் இன்று இரவு செய்கிறோம். நாம் யாவருமாக ஒன்றாக சேருகிறோம். ஏனெனில் நாம் ஒருவரோடொருவர் ஐக்கியத்தில் பிரியப்படுகிறோம். நாம் ஏன் அதைச் செய்கிறோம்? ஏனெனில் நமக்குள் இருக்கின்ற ஏதோ நாம் ஒருவரை சந்திக்க வேண்டுமென்று விரும்புகின்றது. அது வெறுமனே இயற்கையானது. இப்பொழுது நாம் யாவரும் ஒரு பொதுவான ஸ்தலத்திலே ஒன்று கூடுகிறோம். ஏனென்றால் நாம் யாவரும் தேவன் பேரில் தாகங் கொண்டவர்களாயிருக்கிறோம் பார்த்தீர்களா. ஆக நாம் இங்கே தவறாமல் ஒழுங்காக இந்த பொது ஸ்தலத்திலே ஐக்கியத்திற்காக சந்திக்கிறோம் இன்றிரவு இங்கே சபையிலே ஒருவேளை பல தரப்பட்ட வித்தியாசமான ஸ்தாபனங்களை சேர்ந்தவர்கள் இங்கிருக்கலாம். ஆனால் அந்த தாகம் என்பதை குறித்த மட்டில் நாம் யாவரும் ஒரே பொதுவான ஒரு ஸ்தலத்தில் சந்திக்கலாம். நாம் யாவரும் தாகமாய் இருக்கிறோம். ஒருவேளை சிலர் தெளித்தலிலும், இன்னொருவர் முழுக்குதலிலும், இன்னொருவர் ஊற்றுதலிலும் விசுவாசமுள்ளவர்களாயிருக்கலாம். ஆனால் தேவன் பேரில் தாகம் என்பதைக் குறித்த காரியத்தில், யாவரும் வரக்கூடிய ஒரு பொது ஸ்தலத்திலே வருகிறோம். நாம் யாவரும் அவருடைய ஐக்கியத்திற்காகவும் அவர் பேரிலும் தாகமாயிருக்கும் படியாய் தேவன் நம்மைஉண்டாக்கினார். எனக்கு ஏதும் தெரியாது... 44நான் சிறு பையனாக இருந்த போது நான் ஏழ்மையான குடும்பத்தில் வளர்க்கப்பட்டேன் என்பது நினைவிருக்கிறது. அநேக நேரங்களிலே நான் மற்ற பையன்களோடு வெளியே போவேன், என்னால் ஒரு மரியாதையான இடத்திற்குப் போகத் தக்கதாக உடுத்திக் கொள்ள முடியாதவனாயிருந்தது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால் எனக்குத் தெரியவில்லை. நான் விரும்பின காரியங்கள் ஜனங்களிடத்தில் இருந்தது என்பதை நான் அறிவேன். ஆனால் எப்படியிருந்த போதிலும் (BLACK SHEEP) “கருப்பு ஆடு'' என்றழைப்பார்களே அதைப் போன்று தான் இருந்தேன். ஆனால் நான் இரட்சிக்கப்பட்ட பிறகு எனக்குள்ளாக ஒரு நண்பனை பற்றின தாகம் இருப்பதைக் கண்டேன். அதாவது என்னை அதிகமாக விரும்புகிற யாராவதாக, நான் நம்பத்தக்க யாராவதாக, என்னோடு கூட உட்கார்ந்து எனக்குள்ள துன்பங்களை குறித்து என்னோடு பேசி பகிர்ந்துக் கொள்ளக் கூடிய யாராவதாக, இருக்க வேண்டும் போன்ற தாகம் உண்டாயிருந்தது, நான் இயேசுவைக் கண்டடைந்த போது, அந்தத் தத்ரூபமான உண்மையான திருப்தியை நான் அடைந்தேன். இயேசு உண்மையான திருப்தியை அளிப்பவர் உன் எல்லா தாகத்தை தீர்ப்பார். அவர் உனக்கு ஏதோ ஒன்றைக் கொடுப்பார். அவருடைய ஸ்தானத்தை எடுத்துக் கொள்ள ஒன்றுமே இயலாது போன்றதொன்றைக் கொடுப்பார். 45சாத்தான் எப்படி இந்த ஆத்துமாவின் திருப்தியாகுதலையும், இந்த ஆத்துமாவின் தாகத்தையும் எப்படி தலைகீழாக்குகிறான். இதை திருப்திபடுத்த அவன் உனக்கு எல்லாவற்றையும் கொடுக்க முயற்சிக்கிறான். இந்த தாறுமாறாக்குதலின் காலத்தில் அவன் எவ்வளவு நயவஞ்சகமுள்ளவனாயிருக்கிறான். இது ஒருதலை கீழாக்கப்பட்ட உலகம். தாறுமாறாக்கப்பட்ட இனம். அது ஒரு தாறுமாறாக்கப்பட்ட ஜனம். எல்லாம் தாறுமாறாக்கப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக தாறுமாறாக்கப்பட்டு இப்பொழுது இதுவரை ஜீவித்த மனிதர்களில் எந்த காலத்திலும் இல்லாத மிகுந்த நயவஞ்சக் காலமாயிற்று. இதுவரையிலும் இல்லாத மிகுந்த நயவஞ்சகமாயிற்று. தேசம் எவ்வளவு நயவஞ்சகமாய் போய்விட்டது என்பதை உன்னால் யூகித்து கூட பார்க்க முடியாது, நம்முடைய சொந்த சகோதரர்களான அமெரிக்க ஜனங்களும் கூட 46சமீபத்தில் நான் பேசிக் கொண்டிருந்தேன். நான் காட்டிற்கு போயிருந்தேன். சில வாரங்களுக்கு முன்பாக அங்கே ஒரு சிகரெட் பெட்டி கீழே இருந்தது. அந்த பெட்டியில் ''ஒரு சிந்திக்கின்ற மனிதனின் வடிகட்டி“ என்று எழுதப்பட்டிருந்தது. அந்த காட்டில் நான் தொடர்ந்து போய் நான் நடந்து திரும்பி வந்தேன். ஆனால் என் சிந்தையில் ஒரு சிந்திக்கும் மனிதனின் வடிகட்டியும், ஒரு புகைக்கும் மனிதனின் ருசியும்” என்பதை அப்படியே வைத்திருந்தேன். எனக்கு நினைவிருக்கிறது, சில வருஷங்களுக்கு முன்பாக நான் உலக கண்காட்சிக்கு சென்றிருந்தேன். அங்கே அவர்கள் YUL BRYNNER இன்னும் மற்றவர்களெல்லாரையும் அங்கே கொண்டு வந்து சிகரெட்டுகளைக் கொண்டு ஒரு நிரூபித்து காட்டி கொண்டுடிருந்தார்கள். சிகரை புகைத்து அந்த புகையை ஒரு சலவைகல்லின் மேல் ஊதுவித்து அதன் பிறகு 2 போன்ற முனையை உடைய கொக்கியினால் அந்த கல்லில் படிந்திருந்த (ICTE) நிக்கோடினை சுரண்டி எடுத்து அதை ஒரு எலியின் முதுகின் மேல் போட்டார்கள். ஏழு நாட்களில் அந்த எலிக்கு அவ்வளவு புற்று நோய் உண்டாகி அதனால் தன் கால்களை ஊன்றி எழுந்து கூட நிற்க முடியாமற் போயிற்று. பாருங்கள். இதெல்லாம் ஒரே ஒரு சிகரெட்டில் இருந்து. அதற்கு பிறகு அது எப்படி ஒரு மனுஷனுடைய புப்புசங்களுக்குள் போகிறது என்பதை காட்டினார்கள். அவர்களில் சிலர் சொல்லுகிறார்கள். “நாங்கள் புகையை உள்ளே இழுப்பதில்லை. வாயிலேயே வைத்து வெளிவிடுவோம்'' என்று அப்படி செய்பவர்களுக்கு அது எப்படி வாயின் உமிழ் நீரோடு கலந்து எப்படி அது அதே தொண்டைக்குள் செல்லுகிறதென்று காண்பித்தார்கள். அதன்பிறகு இந்த மனுஷன் எழும்பி நின்று ”இந்த வடிகட்டியை குறித்து நீங்கள் இவ்வளவு பேச்சை கேட்டீர்கள். அவன் இப்பொழுது உங்களுக்குள் ஒரு வாஞ்சை இருந்தால்“ அங்கே ஒரு தாகம் இருக்கிறது பார்த்தீர்களா? ஒரு சிகரெட் புகைக்க வாஞ்சை, ”இந்த நேரத்திற்கு ஒரு சாதாரண சிகரெட் அந்த வாஞ்சையை ஒருவேளை திருப்தியாக்கலாம். ஆனால் உன்னிடத்தில் ஒரு வடிகட்டி இருக்குமானால் உன்னை திருப்தியாக்க 4 சிகரெட்டுகள் தேவையாயிருக்கிறது. ஏனென்றால் நீங்கள் ஒரு. சிகரெட்டிலிருந்து கால் பாகம் புகைதான் உங்களுக்கு கிடைக்கிறது'' என்று சொன்னான். 47அவன் ''ஒரு புகைக்கும் மனிதனின் ருசி?'' தார் இல்லாமல் புகை உண்டாகாது. தார் (Tar); இருக்குமானால் புற்று நோய் இருக்கும். அங்கே தான் இருக்கிறது. அது ஒரு வித்தை, இந்த தேசத்திலேயே இருக்கின்ற ஒரு புகையிலை கம்பெனி என் நினைவிற்கு வருகின்றது. இந்த தேசத்தினால் அது ஜீவிக்கின்றது. இந்த விதமான வித்தையினால் தான் அது அமெரிக்க குடிமக்களை வஞ்சிக்கின்றது. அவர்களை வஞ்சிக்கின்றது. ஒரு சிந்திக்கின்ற மனிதனின் வடிகட்டி அதிகமான சிகரெட்டுகளை விற்பனை செய்ய இது ஒரு வித்தையாயிருக்கிறது. பின்பு நான், “அந்த சிந்திக்கும் மனிதனின் வடிகட்டி” என்ற காரியத்தை நினைத்தேன். அது நல்ல யோசனை என்று நினைத்தேன். ஆக சிந்திக்கும் மனிதனின் வடிகட்டி இருக்கிறது. அது இந்த வேதம் தான், சிந்திக்கும் மனிதனின் வடிகட்டியானது இந்த வடிகட்டியை தான் எடுத்துக் கொள்ளும். அது ஒரு நீதிமானின் ருசியை உண்டுபண்ணும். இந்த வேதாகமத்தின் பக்கங்களின் மூலமாய் உன்னால் இழுக்க முடியாது இல்லை அது இதை தடை செய்கிறது. அது அதை வெளியே எரிகிறது. நீ சபைக்கு போய் கொண்டு எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம், ஆனால் நீ இந்த வேதாகமத்தின் மூலமாக வந்து பாவத்தை உடையவனாய் இருக்க முடியாது. அது அதை செய்யாது. அது எல்லா பாவத்தையும் வடிகட்டிவிடும், அது ஒரு பரிசுத்த மனிதனின் ருசியை தரும். ஏனெனில் ஒரு மனிதன் தான் பரிசுத்தமாய் இருக்க விரும்பினால் தேவனைப் போல இருக்க விரும்பினால் ஒரு தேவனுடைய குமாரனாகவோ குமாரத்தியாகவோ இருக்க விரும்பினால் அப்பொழுது அவனுக்கு ஒரு சரியான விதமான வடிகட்டி தேவை. ஆனபடியால் அவன் வேதத்தின் இந்த பக்கமாக “எல்லா பாவத்தையும் நிறுத்திவிட்டு இந்த வேதத்தை எழுதின பரிசுத்த ஆவியை மட்டுமே இந்த வேதத்தின் மூலமாக அவனால் கொண்டுவர முடியும். இந்த சிந்திக்கும் மனிதனின் வடிகட்டியை உடையவனாய் இருப்பது ஒரு பரிசுத்த மனிதனின் ருசியாய் இருக்கிறது. 48இந்நாட்களில் அது எவ்வளவு வஞ்சிக்கிறதாயிருக்கிறது என்பதை பாருங்கள், (மத்தேயு. 24:24-ல்) “கடைசி நாட்களில் இந்த இரண்டு ஆவிகளும் மிகவும் நெருக்கமாக இருக்கும். கூடுமானால் தெரிந்து கொள்ளபட்டவர்களையும் வஞ்சிக்க தக்கதாக என்று இயேசு சொன்னார். எவ்வளவு நெருக்கம் நன்மைக்கும் தீமைக்கும் என்ன ஒரு வஞ்சகத்தை இந்நாட்களில் நாம் உடையவர்களாயிருக்கிறோம்”. நம்முடைய அரசாங்கத்திலும் நம்முடைய அரசியலிலும் கூட தனக்கு சரி என்று நினைக்கின்ற ஒரு காரியத்திற்காக முற்றிலுமாக நிற்கத் தக்கதான ஒரு அரசியல்வாதியை நிறுத்த நம்மிடத்தில் ஒரு மனுஷனும் இல்லை. இந்நாட்களுக்குரிய நம்முடைய Patrick Hendry, GeorgeWashington, Abraham Lincon எங்கே? நம்முடைய ஜனாதிபதி அங்கே குறிப்பிட்டது போல ஒருவேளை அவர்கள் விரும்புகிற விதமாக கம்யூனிஸம் அவர்களுக்கு வேண்டுமானால் ஜனங்களுக்கு எதையெல்லாம் வேண்டுமோ அதை வைத்துக் கொள்ளட்டும். அவனுக்கு நன்மையாய் பேச முடியாத ஒரு மனிதன்! ஒரு அடிப்படை கொள்கையின் மேல், குறிக்கோள் என்ன என்பதின் மேல் நிற்கின்ற ஒரு மனிதன். கொஞ்சம் கூட எதிர்ப்பில்லாத வழியில் போக விரும்புகிறவன். இந்த விதமாகத்தான் அந்த ஜனங்கள் அதை சபையில் உடையவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் வந்து சபையில் சேர்த்துக் கொண்டு சொல்லுகிறார்கள். ''சரி நாங்கள் இப்பொழுது சபையில் சேர்ந்து கொண்டோம்'' தேவன் உனக்குள்ளாக வைத்த அந்த பெரிய பரிசுத்த தாகத்தை சரியான வழியில் அதை திருப்புகின்ற அந்த மேற்பார்வை கோபுரம், அதை ஒரு சபையை சேர்ந்து கொள்வதன் மூலமாகவோ, ஒரு கொள்கையை பற்றிக் கொள்வதன் மூலமாகவோ, அல்லது அதை போன்ற ஏதோ ஒன்றை செய்வதன் மூலமாக அதை திருப்திபடுத்த முயற்சிக்கிறாய். கர்த்தருடைய நிறைவும் பிரசன்னமும் உன் ஜீவியத்துக்குள்ளாய் இருந்து அதை திருப்தி செய்யக் கூடுமே ஒழிய வேறொன்றும் இல்லை. 49அவன் ஒரு போதும் ஒரு கொள்கையினால் திருப்தியடையான். உன்னால் ஒரு போதும் வேதத்தின் மூலமாக ஒரு கொள்கையை இழுக்க முடியாது. அப்போஸ்தலர் கொள்கை என்று அழைக்கப்படுகிறதே. அதையும் கூட அதன் மூலமாக அங்கே கொண்டு வர முடியாது. ''நான் பரிசுத்த ரோமன் கத்தோலிக்க சபையை விசுவாசிக்கிறேன். மரித்த பரிசுத்தவான்களோடு பேசுவதை நான் விசுவாசிக்கிறேன்'' என்று வேதத்தில் எந்த இடத்தில் அப்போஸ்தலக் கொள்கை கூறுகிறது என்று எனக்கு காட்டுங்கள், ஆனால் வேதத்தில் சொல்லியிருக்கிறது “தேவனுக்கும் மனுஷனுக்கும் மத்தியில் ஒரே ஒரு மத்தியஸ்தர் உண்டு. அது மனிதனாகிய இயேசு கிறிஸ்துவே” நீங்கள் அதை ஒரு போதும் வேதத்தின் மூலமாக இழுக்க முடியாது. 50நீங்கள் இந்த விதமான நடனங்களையும் அரைக்கால் சட்டைகளையும் இன்றைக்கு இந்த ஜனங்கள் செய்து கொண்டிருக்கிற இந்த காரியங்களை இந்த Twists of watusis இப்படிபட்ட எல்லா காரியங்களையும் நீங்கள் ஒரு போதும் தேவனுடைய வார்த்தையின் மூலமாய் இழுக்க முடியாது. வேதத்தின் மூலமாக இந்த நவீன நாகரிக முறைகளை உங்களால் ஒரு போதும் இழுக்க முடியாது. அது இவைகளுக்கு எதிராய் இருக்கிறது, பார்த்தீர்களா? நீங்கள் அந்த தாகத்தை திருப்தியாக்க பிரயாசிக்கிறீர்கள். இந்த வேதாகமம் ஒரு நீதியுள்ள மனிதனுடைய அல்லது ஸ்திரியுடைய ருசியை மட்டுமே திருப்தியாக்கும். இந்த பரிசுத்த ஆவியை. அவர்கள் பார்த்து சிரித்து “நீங்கள் புத்தி தடுமாறி இருக்கிறீர்கள்'' என்று சொல்கிறார்கள். ஆனால் அது அதிக காலமாய் வாஞ்சித்து இருந்தது. திருப்தியாக்குகிறது. அதை குறித்து இந்த உலகம் ஒன்றும் அறியாததாய் இருக்கிறது. அவர்கள் தங்களை தாங்களே பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திலிருந்தும் தேவனுடைய வார்த்தையிலிருந்தும் (எதனிடத்திற்கு போனார்கள்) கழிவு நீர் தொட்டிகளுக்கும் சபைகளின் நீர்த் தேக்கங்களுக்கும் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும், ஸ்தாபன வித்தியாசங்களுக்கும் இவ்விதமான காரியங்களுக்கும் போய்விட்டார்கள். “நீ ஒருகிறிஸ்துவனா” என்று கேள்? நான், “ஒரு மெத்தடிஸ்ட்”. நான், “ஒரு பேப்டிஸ்டு”, நான், “ஒரு பிரிஸ்பிடேரியன்” இவைகளெல்லாம் தேவனை பொறுத்தமட்டில் ஒன்றும் இல்லை. இந்தக் காரியங்கள் எல்லாம் உன்னால் இங்கே தேவனுடைய வேதத்தின் மூலமாக இழுக்க முடியாது. அவர் பேரில் நீ வாஞ்சையாயிருக்க தேவன் உனக்குத் தந்த அந்த பரிசுத்த தாகத்தை நீ திருப்தி செய்ய முயற்சிக்கின்றாய். அது சரியா? 51இங்கே தாவீது ''ஜீவனுள்ள தேவன் மேல்“ என்று சொல்லியிருக்கிறான் என்று உங்களுக்குத் தெரியும். ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது: அந்த வார்த்தை தேவனாய் இருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அப்படியானால் தேவனாகிய இந்த வார்த்தை உனக்குள் ஜீவனாக வருமட்டாக எந்த விதமான திருப்தியும் இருக்க முடியாது. அப்பொழுது நீ அவர் இந்த வேதத்தில் செய்த வாக்குத்தத்தங்கள் எல்லாவற்றையும் தேவன் தாமே நிறைவேற்றுவதை காண்பாய். 52இப்பொழுது வித்தியாசமான வேத விரிவுரையாளர்கள் நமக்குண்டு. ஒரு சபை இதை இந்த விதமாக வியாக்கியானிக்கின்றது. இன்னொரு சபை அதை அந்த விதமாக வியாக்கியானிக்கின்றது. இன்னொரு சபை இந்த விதமாக வியாக்கியானிக்கின்றது. சிலர் ஒரு சிறு பகுதியை அல்லாமல் முழுவதையும் எடுத்துக் கொள்ளுகிறதில்லை. சிலர் இங்கேயும் அங்கேயும் ஒரு துணிக்கையை எடுத்துக் கொள்ளுகிறார்கள். ஆனால் தேவன் தாமே தம்முடைய சொந்த வியாக்கியானியாய் இருக்கிறார். அவர் ஒரு வாக்குத்தத்தத்தை பண்ணி அதை நிறைவேற்றும் போது அது தானே வியாக்கியானமாய் இருக்கிறது. நான் இன்று இரவு இங்கு இருப்பேன் என்று சொல்லியிருந்து நான் இங்கே இருந்தால் அதுதானே என்னுடைய வாக்கின் நிறைவேறுதல். நான் உன்னிடத்தில் நாளை காலை உன்னை சந்திப்பேன் என்று சொல்லியிருந்து நான் உன்னை சந்தித்தால் அது தான் என்னுடைய வாக்கு எந்த சாக்கு போக்கும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நான் அங்கே இருக்கத்தான் வேண்டும். தேவன் ஒரு வாக்கு பண்ணியிருந்து பின்பு அவர் வந்து அந்த வாக்குதத்தத்தை நிறைவேற்றுகிறார். அதுதானே அந்த வாக்குத்தத்தின் வியாக்கியானம். யார் வேண்டுமானாலும் தேவனை அவருடைய வார்த்தையின் படியாய் எடுத்துக்கொண்டு வேதத்தில் இருக்கின்ற ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம் இல்லை என்று பார்க்க தைரியம் இருக்குமா. அதுதானே உனக்குள்ளாக இருக்கும் அந்த தாகம். ''நீ சொல்லலாம், நான் மட்டும் இயேசுவின் நாட்களில் ஜீவித்திருந்தால் நான் எதையெல்லாம் செய்திருப்பேன்“ என்று. ஏன்? நீ அவருடைய நாட்களில் தான் ஜீவிக்கின்றாய் அதை குறித்து நாம் என்ன செய்கிறோம்? நாம் என்ன செய்கிறோம்? நீ சொல்லலாம் ஒருவேளை நீ செய்தது, ஒரு வேளை அந்த பரிசேயர் செய்தது போல் இருக்கலாம். அவர்கள் ஒரு சபையை சேர்ந்தவர்களாய் இருந்தார்கள் கிறிஸ்துவை மறுதலித்தார்கள். 53இன்றைக்கு நாம், ஜனங்கள் இப்படி சொல்ல முயற்சிக்கிறார்கள். ''நாம் ஒப்பிட்டு பார்க்கிறோம். நாம் ஒரு வேதாகம தாளை இன்னொரு வேதாகம தாளோடு, ஒரு வேதப் பகுதியை இன்னொரு வேதப் பகுதியோடு ஒப்பிட்டு பார்க்கத்தான் வேண்டும்“. ”அது சத்தியமல்ல, இல்லை'', ''இந்த கிரேக்க பதத்தின் அர்த்தம் இது தான். இதன் அர்த்தம் அது'' கிரேக்கர் தாமே காலத்துக்கு முன்பாகவே நிசயா ஆலோசனை சங்கத்திலும், முற்காலத்திய எழுத்தாளர்களும் வித்தியாசமான முறைகளை கொண்டிருந்தார்கள். ஒருவன் இந்த விதமாய் விசுவாசித்தால், இந்த கிரேக்க பண்டிதர் இப்படிதான் அர்த்தம் சொன்னார். இன்னொருவர் இதனுடைய அர்த்தம் இந்த விதமாகத்தான் இருக்க வேண்டும் என்று சொன்னார். அதைக் குறித்து அவர்களிடையே ஒரு போராட்டமே நடந்தது. நமக்கு கிரேக்க பண்டிதர்கள் அல்லது கிரேக்க வார்த்தைகள் இவர்களுடைய வியாக்கியானம் நமக்கு தேவையில்லை. அவரை அறிவது என்பது ஜீவனாயிருக்கிறது. கிறிஸ்துவாகிய அவர் தாமே. ஒப்பிட்டு பார்ப்பது அல்ல. தேவன் தம்முடைய சபையை ஒரு வெளிப்பாட்டின் பேரில் கட்டியிருக்கிறார். நாம் அதே சபையின் மேல் கட்டவில்லை என்றால்... வேதம் சொல்லுகிறது ''ஆபேல் விசுவாசத்தினால்'' என்று, விசுவாசம் என்பது ஒரு தெய்வீக வெளிபடுத்தலாய் இருக்கிறது. பார்த்தீர்களா? விசுவாசம் என்பது ஒரு தெய்வீக வெளிபாடாய் இருக்கிறது. சரியா? இந்த முழு காரியமும் வெளிப்பாட்டின் பேரில் கட்டப்பட்டிருக்கிறது. இது உனக்கு வெளிப்படுத்தப்பட வேண்டியதாயிருக்கிறது. இயேசு சொன்னார், “பிதாவே இவைகளை ஞானிகளுக்கும், கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு கற்றுக் கொள்ள கூடிய பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்”. பாருங்கள், முழு காரியமும் அங்கே தான் கட்டப்பட்டிருக்கிறது. நீ அந்த நபரை அறியத்தான் வேண்டும். 54சபையில் சேர்ந்துக் கொள்வதன் மூலமாய் உன்னால் அதை திருப்திபடுத்த முடியாது. இந்நாட்களுக்கு அவர் செய்த வாக்குத்தங்களும், வார்த்தையும், வார்த்தையாகிய அவரையும், இன்றைக்கு அதன் வியாக்கியானமாய் இருக்கிற அவரையும் தேவனாகிய அவரைத் தாமே, அந்த நபரை நீ கண்டுபிடிக்க வேண்டும். இந்த நாட்களில் அவருக்கென்று இருக்க போகின்ற ஜனங்கள் “கரை, திறை அற்றதான சபை'' இதனுடைய அர்த்தம் ஒரு ஸ்தாபனம் அல்ல. இதனுடைய அர்த்தம் ”கரைதிரையற்ற தனிபட்ட நபர்கள் இரண்டு பேர் படுக்கையில் இருப்பார்கள். ஒருவனை எடுத்துக் கொள்வேன். இன்னொருவனை விட்டுவிடுவேன். இரண்டு பேர் வயலில் இருப்பார்கள். ஒருவனை எடுத்துக் கொள்வேன். இன்னொருவனை விட்டு விடுவேன்''. அவரைப்போல் இருக்க வேண்டும் என்ற பரிசுத்த தாகம், தேவனை உனக்குள்ளாக இருக்கும் போது தேவனுடைய வார்த்தையானது உனக்குள்ளாக இருக்கின்றதையும், நீ தேவனுடைய ஊழியன் என்பதை தன்னில் தானே ரூபகாரபடுத்துகிறதையும் நீ காண்பாய். தேவன் எதை சொன்னாலும் அதனோடு ஒவ்விபோ, அப்பொழுது நீ சரியான பாதையில் வருகிறாய். அப்பொழுது நீ உனக்குள்ளாக இருக்கும் பரிசுத்த தாகத்தை திருப்தியாக்க முடியும். 55ஓ! நிச்சயமாக ஜனங்கள் உன்னை பார்த்து சிரித்து சொல்லுவார்கள். ''மதியிழந்து போனான் பயித்தியமாகிவிட் டான்'' என்று. ஆனால் ஞாபகம் இருக்கட்டும், “அவர்கள் எதிலிருந்து குடிக்கிறார்கள் என்று. அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று பார்'' சற்று யூகித்து பாருங்கள். ஒரு அருமையான நீரூற்று தண்ணீர் அதிலிருந்து புடைத்துக் கொண்டு மேலேழும்பி வர நீ அதை பருகிக் கொண்டிருக்கிறாய். அச்சமயம் அந்த நீர் வழிந்து ஓடி ஏதோ பொந்துக்குள்ளாய் கீழே எங்கேயோ புழு பூச்சிகளோடு வந்துக் கொண்டிருக்கின்றது. அதை ஒருவன் குடித்துக் கொண்டு மேலே நோக்கி உன்னை பார்த்து பரிகசித்தால் எப்படி இருக்கும் என்று? ஓ! ஏன். அவனுக்கு தெரியாது. அவனுக்கு தெரியாது. என்ன ஒரு தாகம் தீர்க்கும் அருவியண்டையில் நீ ஜீவிக்கிறாய் என்று, அது உண்மையாகவே சரி. நமக்கு ஒரு ஜீவிக்கிற தேவன் உண்டு. 19-ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்பு மரித்து இன்னமும் கல்லறையில் இருக்கின்ற ஒருவர் அல்ல. ஆனால் மறுபடியும் உயிர்தெழுந்த ஒருவர் எபிரேயர்: 13.8 சொல்லுகிறது. ''அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கிறார். அந்த பெந்தேகோஸ்தே நாளில் விழுந்த அதே பரிசுத்த ஆவியானவர் இன்றைக்கு இங்கே இப்பொழுது இருக்கிறார்'', அவர் தானே திருப்தியாக்குகின்ற பங்கு, ஏனென்றால் அவரே வார்த்தையாய் இருக்கிறார். அது சரி. பரிசுத்தாவியானவர் வார்த்தையை எழுதினார். அவர் வார்த்தையை வியாக்கினிக்கிறார். 2 பேதுருவில் வேதம் சொல்லுகின்றது, பரிசுத்தாவியானவர் வேதத்தை எழுதினார் என்று. முன் காலத்தவர் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு வேதாகமத்தை எழுதினார்கள். உன்னால் அதை செய்யமுடியாது. பரிசுத்தாவியானவர் என்ற நபரில் தேவன் தாமே உமக்குள்ளாக ஜீவிப்பதினால்லொழிய வேறொன்றிலும் அந்த பரிசுத்த தாகத்தை உன்னால் திருப்திபடுத்த முடியாது. கல்வி, கலாச்சாரம், சபைகளை சேர்ந்து கொள்ளுதல் கோட்பாடுகளை திரும்பத் திரும்ப சொல்லுதல், ஒரு ஐக்கியத்தை சேர்ந்து கொள்ள போகுதல் இந்த காரியங்களெல்லாம் மிகவும் நன்று தான். ஆனால் இவை முற்றிலுமாக அந்த பரிசுத்த தாகத்தை அழுத்திவிடவோ நிறுத்திவிட்டவோ முடியாது. 56அன்றொரு இரவு, நான் பெரிய சுவிசேஷகனாகிய பில்லி கிரகாம் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தேன். அவர்கள் செய்கின்ற விதத்தை கடுமையாய் தாக்கி பேசினதை கேட்ட அந்த நாளிலிருந்து, நான் உங்களுக்கு சொல்லுகிறேன். முன்பைக் காட்டிலும் இப்பொழுது நான் அவருக்காக இப்பொழுது அதிகமாய் ஜெபிக்கிறேன். அவர் சொன்னார். “இந்த குருமார்கள், பாதிரியார்கள் திரும்பின காலர்களை அணிந்தவர்களாய், வந்து, அவர்களுக்கு ஜோலி இல்லாத இடங்களுக்கெல்லாம் போய் ஏதேதோ காரியங்களில் தங்களை நுழைத்துக் கொள்ளுகிறார்கள். ஆனால் அவர்கள் பாதை வழியாய் கைகளைத் தட்டிக் கொண்டு கால்களை தட்டிக் கொண்டு போகிறார்கள். அவர்கள் பரிசுத்தமில்லாத உருளைகளாக காட்சியளிக்கிறார்கள். ஆனால் அவர்கள் விசுவாசிக்கத் தக்கதாக ஏதோ இருக்கின்றது; அவர்களிடத்தில் ஏதோ இருக்கின்றது. அது அவர்கள் ஆத்துமாவை எழுச்சிக்கிறது. அவர்கள் எழிச்சிக்கத் தக்கதாக ஏதோ இருக்கின்றது. யாரோ ஒரு ஸ்திரி அங்கே போய் எதிலோ தலையை நுழைத்துக் கொண்டாள். அவர்கள் நினைத்தார்கள். அவள் ஒரு இரத்த சாட்சி என்று. அவள் அக்காரியத்திற்குள்ளாக அவளுக்கு எந்தவித அலுவலுமில்லை. இப்பொழுது நாம் இங்கே பார்க்கிறது என்னவென்றால், ஏதோ கைகளை தட்டும்படியாய் அவர்களுக்கு ஏதோ இருக்கின்றது. அவர்கள் சந்தோஷமாய் இருக்கிறார்கள். அவர்கள் ஏதோ செய்துக் கொண்டிருக்கிறார்கள். நீ சரி என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு அடிப்படை கொள்கையின் மேல் நிற்கின்றாயானால், அது சரிதான். அப்பொழுது ஒரு சபையில் எழும்பி நில், யாராவது கைகளை தட்டவோ அல்லது கால்களை தட்டவோ செய்யட்டும் சபை பொறுப்பாளர்கள் deacons வந்து அவர்களை வெளியே கொண்டு போவார்கள். பாருங்கள். அவர்கள் அவர்களுடைய ஜனங்களை இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த வல்லமையினாலே விடுவிக்கப்பட்ட, ஆசீர்வதிக்கப்பட்ட தேவனுடைய வார்த்தையினாலே அவர்களை போஷிப்பதற்கு பதிலாக அவர்களை கோட்பாடும் ஸ்தாபனமுமான அசுத்தமான கழிநீர் கால்வாய்களாக்கி போட்டனர். 57பாருங்கள், அவர்கள் தாங்கள் இன்னார், இன்னார் இந்த இந்த வேதாகம பள்ளியிலிருந்து படித்து பட்டம் பெற்றவன் என்று சொல்வதன் மூலம் தங்கள் தாகத்தை தீர்த்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். அதனால் ஒரு பயனுமில்லை. ஒரு காரியமுமில்லை. அவர்கள் “தேவன் என்னை அடையாளங் கண்டுக் கொள்வார். ஏனென்றால் நான் அவருடைய பாஸ்டராக இருக்கிறேன். தேவன் என்னை அடையாளங் கண்டுக் கொள்வார். ஏனென்றால் நான் HOLY FATHER இன்னார் இன்னார் அல்லது பேராயர் இன்னார் இன்னார்'' என்று சொல்லித் தங்களை திருப்த்திபடுத்திக் கொள்ள பிரயாசிக்கிறார்கள். ''நான் ஒரு பி.எச்.டி; எல்.எல்.டி. நான் கலையில் பட்டம் பெற்றிருக்கிறேன்” அது சரி தான். ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் அதன் அர்த்தம் நீ அந்த அளவுக்கு தேவனை விட்டு தூரமாய் போய்விட்டாய் என்பதாம். அது சரி, எல்லா நேரத்திலும் அந்த அளவுக்கு தேவனை விட்டு தூரமாய் போய்விட்டார்கள்! நீ தேவனை ஒரு அனுபவத்தின் மூலமாய் தான் அறிய முடியும். இதை உனக்குள்ளாக கற்றறிய முடியாது. இது உனக்குள்ளாக பிறந்திருக்கிறது! அது தேவன் உனக்கு கொடுக்கின்ற ஏதோ ஒன்றாய் இருக்கின்றது. கல்வி இதனோடு ஒன்றும் செய்வதற்கில்லை. வேதத்தில் காணப்படுகின்ற ஒரு பெரிய மனிதன், பரிசுத்த பேதுரு தன் பெயரைக் கூட எழுதத் தெரியாதவர். அது முற்றிலும் சரியே, “பேதுருவும் யோவானும், படிப்பறியாதவர்களும், பேதமையுள்ளவர்களும்” என்றும் வேதம் சொல்லுகின்றது. ஆனால் பரலோகத்தின் திறவு கோல்களை அவனிடத்தில் கொடுப்பது இயேசுவுக்கு பிரியமாய் இருந்தது. ஏனென்றால் அவன் தேவன் பேரில் தாகமுள்ளவனாயிருந்தான். ஆமென். தேவன் பேரில் ஐக்கியத்திற்காக தாகமுள்ளவனாயிருந்தான் ஆம். ஐயா! 58வாலிப மனுஷனாகிய ஏசாயாவை நினைக்கிறேன். ஒரு அருமையான வாலிபன். அவன் ஒரு நாள் அங்கே தேவாலயத்திலிருந்தான். அந்த பெரிய ராஜா, தன் முகத்தை அவன் பேரில் பேரில் சாய்த்து, அவன் பெரிய மனிதர்களில் ஒருவன் என்று நினைத்தான். அவன் ஒரு அருமையான பெற்றோர்களால் ஒரு நல்ல தாயும் தகப்பனாலும் வளர்க்கப்பட்டான். ஆனால் அவன் வெளி சென்ற போது அவனுடைய கொள்கைகள் சரியாய் இருந்தபடியினாலே, அவன் தேவனோடு காரியங்களை சரிபடுத்தினான். ஏசாயா அவனை நோக்கிப் பார்த்து, அவனை ஒரு பெரிய மனிதன் என்று நினைத்து, தனக்கு ஒரு முன்மாதிரியாய் அவனை வைத்தான். ஆனால் நீ இயேசு கிறிஸ்துவாகிய மனிதனையல்லாமல் வேறெந்த மனிதனையும் உனக்கு முன் மாதிரியாக வையாதே. எல்லா மனிதர்களும் வழித்தவறி போய்விடுவார்கள். கொஞ்ச காலம் கழித்து அவன் ஒரு கட்டத்திற்குள் வந்தான். அவன் ஒரு ராஜா ஆனால் அவன் ஒரு ஆசாரிய ஸ்தானத்தை எடுக்க முயற்சித்து தேவாலயத்திற்குள் பிரவேசித்தான். அவன் குஷ்ட ரோகத்தால் பீடிக்கப்பட்டான். பின்பு ஏசாயா மிகவும் கவலையாகினான். ஆகவே அவன் தேவாலயத்துக்கு போய் ஜெபிக்க ஆரம்பித்தான். அவன் நினைத்தான் கொஞ்ச நேரம் போய் ஜெபிக்கலாம் என்று. கவனியுங்கள், அந்த மனிதன் ஒரு தீர்க்கதரிசி, ஆனால் அங்கே தேவாலயத்திலே ஒரு வாலிபன் ஒரு நாளில் தேவனிடத்தில் முறையிட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு அப்பொழுது ஒரு தரிசனம் உண்டானது. அந்த தரிசனத்தில் அவன் தூதர்களையும் கேரூபீன்கள் தங்கள் இரண்டு செட்டைகளால் முகத்தை மூடி, இரண்டு செட் டைகளால் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்துக் கொண்டிருக்கிறதை கண்டான். அவைகள் தேவாலயத்தில் முன்னும் பின்னுமாய் மேலும் கீழுமாய் பறந்து ''சர்வ வல்லமையுள்ள தேவன், பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் என்று கூப்பிட்டுச் சொன்னார்கள். 59ஏசாயா, அந்த பெரிய தாகம் அவனுக்குள்ளிருந்தது. ஒருவேளை அவன் படித்தவனாயிருக்கலாம். ஒருவேளை நல்ல கல்வியறிவு உண்டாயிருந்திருக்கலாம். தேவன் எப்படியிருக்க வேண்டும் என்ற அற்புதமான மனவுரு அவனுக்கு இருந்தது. ஆசாரியர்கள் சொல்ல அவன் கேட்டிருக்கிறான். அவன் தேவாலயத்திலிருந்திருக்கிறான். அவன் ஒரு நல்ல விசுவாசியாக வளர்க்கப்பட்டான். ஆனால் அவன் அதனோடு இன்னும் முகமுகமாய் சந்திக்காதிருந்தான். பார்த்தீர்களா? அவனிடத்தில் சரியாய் செய்ய வாஞ்சை இருந்தது. அவன் சரியாய் இருக்க விரும்பினான். ஆனால் அவனுக்கு இருந்தது கல்வியின் பாகம் மட்டும்தான். அவனுக்கு வேத சாஸ்திரத்தின்படி அறிந்திருந்தான். ஆனால் அவன் அந்த நாளிலே தேவாலயத்திற்கு வந்து கேரூபீன்கள் தங்கள் செட்டைகளை அடித்துக் கொண்டு முன்னும் பின்னுமாக போகிறதை கண்டு, இந்த தூதர்கள் தேவனுடைய முகத்திற்கு முன்பாக ஊழியம் செய்கின்றது, என்பதை உணர்ந்து கொண்டான். அந்த தூதர்கள் பாவம் என்பது, இன்னது என்று அறியாதவர்களாய் இருந்தும் கர்த்தருடைய சமுகத்தில் நிற்க அவர்கள் தங்களுடைய பரிசுத்த முகத்தை கர்த்தருடைய சமூகத்தில் நிற்க மறைத்துக் கொள்ள வேண்டியதாயிருந்தது. அப்பொழுது அந்த தீர்க்கதரிசி சத்தமிட்டான். “ஐயோ? அதமானேன். நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன்”. எனக்கிருந்த வேத சாஸ்திரம் நான் கற்றது எல்லாம் தேவனை பற்றின என்னுடைய அற்புதமான மனவுரு எல்லாம், இப்பொழுது நான் அதனோடு முகமுகமாய் நிற்கிறேன். அவன் சொன்னான், ''நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்கள் நடுவில் வாசமாயிருக்கிறவன்'' என்று. அவர்களுடைய நியாயபிரமாண போதனைகள், அவர்கள் செய்த காரியங்கள் எல்லாம், அவன் கர்த்தருடைய சமூகத்திற்குள்ளாகி தேவனை உயரமான சிங்காசனத்தின் மேல் பரலோகத்தில் வீற்றிருக்க அவருடைய வஸ்திர தொங்கலால் தேவாலயம் நிறைந்திருக்க, அவன் கண்ட அந்த நிலையை ஒருபோதும் அடைந்ததில்லை. அங்கே அவன் முகமுகமாய் தத்ரூபமாய் கண்டான். அவன் நான் அசுத்த உதடுகள் உள்ள மனிதன் - அசுத்த உதடுகள் உள்ள மனிதர் நடுவில் வாசமாயிருப்பவன் என்று கூப்பிட்டு சொன்னான். 60அதன் பின்பு கேருபீன்களில் ஒருவன் குறட்டால் ஒரு நெருப்பு தழலை எடுத்து அந்த அசுத்த உதடுகளை தொட்டான். அவனை ஒரு கோழையிலிருந்து, கற்றவனிலிருந்து, போதகனிலிருந்து, தேவனுடைய வார்த்தை அவன் மூலமாக வரும்படியான ஒரு தீர்க்கதரிசியாய் மாற்றினது. நிச்சயமாக அவன் தேவ சமுகத்தில் இருந்த மட்டில் காரியம் முற்றிலும் வித்தியாசமாய் இருந்தது. அவனுக்குள் இருந்த அந்த தாகம், அவன் அதனால் நிரப்பப்படும் படியான நிலை உண்டாகும் உச்சகட்டத்தை அடைந்தது. நான் உனக்கு சொல்லுகிறேன் நண்பனே, நீ எத்தனை சபைகளை சேர்ந்தாலும் சரி, நீ எத்தனை பெயர்களை அங்கு பதிவு செய்திருந்தாலும் சரி, நீ எந்த வழி போனாலும் சரி, நீ தெளிப்போ, அல்லது முழுக்கு ஞானஸ்நானம் பெற்றிருப்பாயோ சரி, அல்லது நீ என்னவாயிருந்தாலும் சரி, எனக்கு அக்கரையில்லை. நீ இயேசு கிறிஸ்துவாகிய நபரை சந்தித்தாக வேண்டும். அந்த ஒரே ஒரு காரியம் மட்டுமே உன்னை உண்மையாய் திருப்தியாக்கும். உணர்ச்சி வசப்படுதல், அதை செய்ய முடியாது, ஒருவேளை நீ மேலும் கீழுமாக உன்னால் முடிந்த வரை சத்தமிடலாம், அல்லது தரையில் இங்குமங்குமாக ஓடலாம், உனக்கு வேண்டிய மட்டும் அந்நிய பாஷையில் பேசலாம், அந்த காரியங்களெல்லாம் பரிசுத்தமும் நல்லவைகள் தான். நான் அதற்கு எதிராக ஒன்றையும் சொல்லவில்லை. ஆனால் நீ அந்த நபரை, அந்த திருப்தியாக்கும் பாகத்தை, உன்னுடைய சரீரத்திலிருக்கும் ஒவ்வொரு தசை நாரையும் எடுத்துக் கொள்ளும் ஏதோ ஒன்று, உணர்ச்சி வசப்படுத்தலினால் அல்ல, திருப்தியடைவதினால் அதை சந்திக்குமாட்டாய். 61ஒரு விளம்பர அட்டையை நான் பார்ப்பது வழக்கம். அதில் “நீ தாகமாயிருப்பாயானால் 'பார்பே' என்று சொல்'' என்று எழுதப்பட்டிருந்தது. நான் சிறுவனாயிருந்த போது பார்பே (Parfait) என்ற அழைக்கப்படுகின்ற ஒரு பானம் ஒன்று இருந்தது. பழய தண்ணீர் தேங்கின குளமொன்றில் மீன்பிடித்து விட்டு திரும்புவது என் நினைவிற்கு வருகிறது. நான் மரிக்கின்ற அளவிற்கு பட்டினியாய் வந்து கொண்டிருந்தேன். அப்பொழுது அந்த விளம்பர அட்டையை ”நீ தாகமாயிருந்தால் Parfait (பேர்பை) என்று சொல்“ பார்த்தேன். நான் இன்னும் அதிகமதிகமாக தாகமானேன். நான் எச்சை துப்ப முடியாத அதாவது உமிழ்நீர் சுரக்காத அளவிற்கு தாகித்து போனேன். பாருங்கள், அது அதை ஒன்றும் செய்யாது. அதை ஒன்றும் திருப்திபடுத்த முடியாது. எனக்கு அக்கரையில்லை, நீ வேண்டுமானால் கோக்ஸ் குடிக்கலாம். நீ எது வேண்டுமானாலும் குடிக்கலாம். தித்திப்பாக்கப்பட்ட (Carbonated) (கார்போடைட்) தண்ணீரை வேண்டுமானாலும் குடிக்கலாம். ஆனால் குளிர்ச்சியான ஒடையிலிருந்து வந்த அருமையான குளிர்ச்சியான தண்ணீர் மட்டுமே அந்த தாகத்தை திருப்தியாக்கும். அந்த தாகத்தை அதுதான் தீர்க்கும். மற்றெல்லா காரியங்களும் அதற்கு மாற்றுதான். 62மனுஷக ஆத்துமாவிலுள்ள வாஞ்சையையும் ஒவ்வொரு தசை நாரையும் திருப்தி செய்யக்கூடிய அசலான பரிசுத்தாவியின் அபிஷேகம் நமக்கிங்கே இருக்கும் போது, நாம் ஏன் அதற்கு பதிலாக ஒரு மாற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்? அப்படியானால் அந்த மகா பெரிய அப்போஸ்தலனாகிய பவுலைப் போன்று ''மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே? நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்?“ என்று சொன்னது போன்று மரணத்தின் முகத்திற்கு நேராக நில்லுங்கள். சகோதரனே, உனக்குள்ளாக இருக்கின்ற அந்த பரிசுத்த தாகத்தை திருப்தி செய்கின்றது. அந்த அனுபவந்தானே. அது அதை திருப்தி செய்கின்றது. நீ அதை குறித்து ஒன்றுஞ் செய்யவேண்டிய அவசியம் இல்லை. ஆம். அது உதடுகளை சுத்திகரிக்கும். உணர்ச்சி வசப்படுதலிலேயே ஜீவிக்கின்ற ஜனங்களும் உண்டு. சிலர் “எங்களுடைய பெந்தேகோஸ்தே இயக்கத்திலே அது இருக்கின்றது” என்று சொல்லிக் கொள்வோருமுண்டு. அவர்கள் உள்ளே போவார்கள். அது அருமையானது தான். கைகளை தட்டுவார்கள், வாத்தியங்கள் வாசிப்பார்கள், வாத்திய சத்தம் நின்றது. ஷ்வ்யூ. அவ்வளவு தான். எல்லாவற்றின் மேலும் ஒரு வாளி தண்ணீர் கொட்டினது போன்று எல்லாம் அடங்கிவிட்டது. நாம் அதை செய்கிறோம். நாம் அதை செய்கின்ற ஒரு பழக்கத்திற்குள்ளாகிவிட்டோம். அது நம்முடைய பழக்கங்களில் ஒன்றாகிவிட்டது. 63நான் உங்களுக்கு சில காரியங்களை சொல்லுகிறேன். நீ தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுக்கொள்ளும் போது, அதை நீ செய்வது உனக்கு ஒரு வழக்கமாகும் போது, ஏனென்றால் நீ நினைக்கிறாய், அதை செய்து தான் ஆகவேண்டும் என்று. ஏனென்றால் நீ சத்தமிட்டு மேலும் கீழுமாக குதித்து வாத்தியத்தோடு நடனமாடவில்லையென்றால், உன் அயலான் நீ பின் வாங்கிபோனாய் என்று நினைத்து கொள்ளுவான் என்று, நீ நினைக்கின்றபடியால். அப்படியானால் நீ தேங்கி நிற்கின்ற குட்டையிலிருந்து நீ பருகுகிறாய் என்பதாகும். சரியா! ஒவ்வொரு தசை நாரையும் நிரம்புமட்டாய், பரிசுத்தாவியானவர் தாமே உனக்குள்ளாய் பொங்குமட்டாய், வாத்தியம் வாசிக்கப்படுகின்றதா என்பதை பற்றி கவலையில்லை. உம்மண்டை தேவனே நான் சேரவே என்ற பாட்டை வாசிக்கிறார்களா இல்லையா என்ற கவலையில்லை. அல்லது எதுவாயிருந்தாலும் சரி, பரிசுத்தாவியானவர் தாமே இன்னமும் உன்னுடைய இருதயத்திற்குள்ளாய் மகிமையின் மணிஓசை அடித்துக் கொண்டே இருக்க வேண்டும், அது திருப்தியாக்கும், அது தான் தேவனுடைய திருப்தியாக்குகின்ற பங்கு. ஒருவேளை நீ மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசலாம், உனக்கு உண்டான யாவற்றையும் ஏழைகளுக்கு அன்னதானம் பண்ணலாம். சகல இரகசியங்களையும் சகல அறிவையும் அறிந்திருக்கலாம் நீ இன்னமும் ஒன்றுமில்லாதவனாய் இருக்கிறாய் (1கொரிந்தியர்: 13) அந்த தாகத்தை தீர்க்கக்கூடிய அந்த திருப்தி செய்யும் காரியம் வரும்மட்டாய் இவையிருந்தும் ஒன்றுமில்லை. “மானானது நீரோடைகளை வாஞ்சித்து கதறுவது போல், என் ஆத்துமா ஜீவனுள்ள தேவன்மேல் வாஞ்சிக்கிறது, நான் அதை கண்டடைய வேண்டும். இல்லையேல் அழிந்து போவேன்'', அந்தவிதமாக நீ தேவன் மேல் பசிதாகமாயிருக்கும் போது ஏதோ ஒரு காரியம் நிகழ போகின்றது. பரிசுத்தாவியானவர் தாமே உன்னை அந்த தேவனுடைய பெரிய நீருற்றுகளண்டைக்கு உன்னை நடத்துவார். ஆம் ஐயா! 64ஆவியோடு தேவனை தொழுது கொள்வது ஒரு நன்மையான காரியம். அது உண்மை. ஆனால் சில நேரங்களில் உன்னிடத்தில் ஆவியிருக்கின்றது. உண்மையில்லை. (யோவான்: 4) “நாம் தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ளுகிறோம்'' என்று சொல்லுகிறது. இயேசு தானே உண்மையாயிருக்கிறார். அது முற்றிலும் சரியே. அவர் வார்த்தையாயிருக்கிறார். உன்னை திருப்திபடுத்த இயற்கையில் தேவன் அனுப்பின நீர் அருவிகளை ஒவ்வொன்றையும் சாத்தான் தீட்டுபடுத்தினான். அவன் தொடக் கூடிய ஒவ்வொன்றிலும் அவன் விஷ மருந்தைப் போட்டுவிட்டான். அது சரி. அவன் அந்த சபையின் பெரிய நீர் அருவியை எடுத்துக் கொண்டான். அது, அது தான் தேவனுடைய வழி . இயேசு “இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற் கொள்வதில்லை'' என்று சொன்னார்.இதைக் குறித்து வித்தியாசமான வாதங்கள் உண்டு. ரோமன் கத்தோலிக்க மார்கத்தார் அவர் அதை பேதுருவின் மேல் கட்டினார் என்று சொல்லுகிறார்கள். பார்த்தீர்களா. அது அப்படியிருக்குமானால் பேதுரு வெட்கத்தால் பின் வாங்கிப்போனான். ஆகவே அது அப்படியில்லை. அது ''நிச்சயமாக பேதுருவின் மேல் பெத்ரா என்ற சின்ன கல்லின் மேல் நிச்சயமாய்க் கட்டப்படவில்லை.'' பிராடஸ்டன்ட் (Protestant) மார்க்கத்தார் சொல்லுகிறார்கள், ''இயேசு கிறிஸ்துவாகிய அவர் மேல் அவர் சபையை கட்டினார்'' என்று. வித்தியாசமாகச் சொல்லவேண்டும் என்பதற்காக அல்ல. ஆனால் நான் கருத்தில் அவர்களோடு வேறுபடுகிறேன். இவ்விரண்டில் ஒன்றின் மேலும் அவர் கட்டவேயில்லை. அவர் “தாம் யார்'' என்ற வெளிப்பாட்டின் மேல் அதை. கட்டினார். யோனாவின் குமாரனாகிய சீமோனே நீ பாக்கியவான். மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிபடுத்தவில்லை. பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். அறிவின் மூலமாயல்ல. இதை நீ புத்தகங்களின் மூலமாகக் கற்றுக் கொள்வது இல்லை. சபையை சேர்ந்து கொள்வதன் மூலம் இதை நீ கற்றுக் கொள்வதில்லை. இதை நீ கடைகளில் கற்றுக் கொள்ளுகிறதில்லை. நீ கற்றுக் கொள்ளவில்லை. ஆனால் பரிசுத்த ஆவியானவர் தாமே இயேசு கிறிஸ்துவாகிய நபரை உன்னிடத்திற்கு கொண்டு வந்தார். அப்பொழுது, ”இந்த கல்லின் மேல் என் சபையை கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.'' அந்த பரிசுத்த தாகம், இயேசு கிறிஸ்துவாகிய நபரில் திருப்தியடைந்தது. அங்கே தான் காரியம். அந்த காரியத்தைதானே நாம் நோக்கிப் பார்க்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். அதாவது அந்த தாகத்தை ஆனால் திருப்திபடுத்த. சரி. நாம் இதை அவசியம் செய்ய வேண்டும் என்று பார்த்தோம். 65அறிவு? ஓ! அறிவு ஒரு பெரிய காரியம், நாம் நிரம்புகிறோம். இன்றைக்கு நாம் அவற்றால் நிறைந்திருக்கிறோம். ஆனால் பாருங்கள். அறிவானது அன்றொரு நாள் அறிவு என்ற தலைப்பின் கீழ் பேசிக் கொண்டிருந்தேன். அங்கே வெளிபுறமாக ஒரு மனிதன், என்னுடைய நண்பன் ஒருவனுடன் பேசிக் கொண்டிருந்தார். அவர் ''ஒரு மனுஷனுக்கு கல்வியின் பேரில் நம்பிக்கையில்லையென்றால் அவன் ஏன் வேதத்தை வாசிக்க வேண்டும்?'' என்று சொன்னார். நான் “சரி, கர்த்தராகிய இயேசு என்ன சொன்னார் என்பதையே அவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை என்றால், ஒன்றுமில்லாத நான் சொல்லுவதை இவர்களால் எப்படி அறிந்து கொள்ள முடியும்'' என்று நினைத்தேன். அவர் அவ்வளவு தெளிவாய் இருந்தும் கூட அவர்களால் அவரைப் புரிந்துக்கொள்ள முடியவில்லை. ஒரு நாளில் அவர் ”நீங்கள் மனுஷ குமாரனுடைய மாமிசத்தை புசியாமலும் அவருடைய இரத்தத்தை பானம் பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை'' என்று சொன்னார். அவர் அதை விளக்கிக் கூறவில்லை. அவர் தொடர்ந்து நடந்தார். அது சரி. பார்த்தீர்களா? அவர்கள் “சரி, இவன் நர மாமிசம் புசிப்பவன் போலும், இவனுடைய மாமிசத்தைப் புசித்து இவனுடைய இரத்தத்தைக் குடிக்க வேண்டும் என்கிறானே. இவன் ஒரு இரத்தத்தைக் குடிப்பவன் போலும். பாருங்கள், இவன் நாமும் இரத்தத்தை குடிக்கிறவர்களாக வேண்டுமென்று விரும்புகிறான்” என்று சொன்னார்கள். பாருங்கள். அந்த படித்த மேதாவிகளை. ஆனால் அவர் “என் ஆடுகள் என் சத்தத்துக்கு செவி கொடுக்கும்” அது தெரிந்து கொள்ளப்படுபவர்களிடத்திற்கு வரும். தேவன் தம்முடைய முன்னறிவினால் அவர்களைத் தெரிந்துக் கொண்டார். “என் பிதா எனக்கு தந்தவர்கள்... என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். பிதாவானவர் எனக்கு கொடுக்கின்ற யாவும் என்னிடத்தில் வரும், அவர்கள் அதைப் புரிந்து கொள்வார்கள்''. சீஷர்களாகிய அவர்களால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவர்கள் அதை விசுவாசித்தார்கள். பார்த்தீர்களா? அது சரியே. நீ அதை விசுவாசிப்பாயானால்! என்னால் அநேக காரியங்களைப் புரிந்து கொள்ள முடிகிறதில்லை. இருந்த போதிலும் நான் அதை விசுவாசிக்கிறேன். ஏனென்றால் அப்படியிருக்கிறதென்று தேவன் சொல்லியிருக்கிறார். 66அறிவு - உனக்கு தெரியுமா பிசாசின் சுவிசேஷம் அறிவு என்று. அதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? அவன் அதை ஏதேன் தோட்டத்திலே ஏவாளிடத்திலே பிரசங்கித்தான். அவள் அவனுடைய அறிவு சுவிசேஷத்தால் வஞ்சிக்கப்பட்டாள். இப்பொழுது அவன் மனித இனத்தையே அதைக் கொண்டு தீட்டுப்படுத்திப் போட்டான். அது முற்றிலும் சரியே. அவர்கள் கல்வித் திட்டங்களை எடுத்துக் கொண்டு, அவைகளை சபையிலே போட்டார்கள். அவர்கள் அங்கே சரியாய்த் தான் இருக்கிறார்கள். ஆனால் தேவனுடைய வார்த்தையில் அல்ல. இல்லை ஐயா. கல்வியின் மூலமாக உன்னால் தேவனை அறிய முடியாது. எப்படி என்று அறிந்து கொள்வதனாலோ, கணிதம் கற்றுக் கொள்வதனாலோ, பெரிய வார்த்தைகளை உச்சரிப்பதினாலோ, நீ தேவனை அறிந்து கொள்ள முடியாது. பவுல், “அவர் ஒரு சாமர்த்தியன். ஆனால் அவன் கிறிஸ்துவினிடத்தில் வந்து பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டு கொரிந்தியரிடத்தில் சென்ற போது, அவன் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனத்துடன் நான் உங்களிடத்திற்கு வரவில்லை. அவன் உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது'' என்று சொன்னான். சில நேரங்களில் சபையின் திட்டங்களை வகுக்கும்போது நாம் அதனுடைய போதகரை அழைக்கிறோம். சபையானது தன்னுடைய போதகரை வாக்கெடுப்பின் மூலமாகத் தெரிந்து கொள்ளும் போது அவர்கள் சொல்லுவார்கள். “இந்த போதகர் இரண்டு பட்டங்களை பல்கலைக்கழகத்தில் பெற்றிருக்கிறார். அவர் 4 வருடங்கள் மனோதத்துவம் பயின்றிருக்கிறார். அவர் இதை, அதை, எதையெல்லாமோ படித்திருக்கிறார்'' என்று. ஜனங்கள் எப்படி நினைப்பார்கள், என்பதைப் பற்றி சிறிதும் கவலைபடாமல், தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து அதனால் ஏவப்பட்டு தேவனுடைய வார்த்தையை மட்டும் பிரசங்கிக்கின்ற ஒரு போதகனுக்குப் பதிலாக இப்பேர்ப்பட்ட ஒருவனுக்கு தான் வாக்களித்துத் தெரிந்து கொள்வார்கள். 67உங்களுக்குத் தெரியும், “தேவன் ஏசேக்கியாவிடம் அவர்கள் விசுவாசித்தாலும் விசுவாசிக்காமற் போனாலும் நீ அதை பிரசங்கி. எப்படியிருந்த போதிலும் நீ பிரசங்கி'' என்று சொன்னார் பார்த்தீர்களா? சரியா. அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளுகிறார்களோ இல்லையோ. அதைக் குறித்து பரவாயில்லை. அவர்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அவரோ அதேவிதமாக தொடர்ந்து பிரசங்கித்துக் கொண்டு போனார். பார்த்தீர்களா? தேவனை விசுவாசித்து உண்மையாகவே வார்த்தையை பிரசங்கிக்கிற ஒரு உத்தமமான போதகருக்கு பதிலாக, புத்தி சாதுர்யமுள்ளவனை, நல்ல படிப்பு உள்ளவனை பீடத்தில் நின்று பிரசங்கிக்க 15 நிமிடங்களுக்கு மேல் எடுக்காத ஒருவனை, அதன் மூலமாக அவர்கள் போய் மற்ற அலுவல்களை கவனிக்கவும் சிக்கிகள் போய் அவர்கள் வேலைகளை ஆரம்பிக்கவும், (Twist) ட்விஸ்ட் மற்றும் காரியங்களைக் கவனிக்கவும், அப்படி ஒருவனைப் போதகராக கொண்டு வருவார்கள். இது கலப்பினாலான கல்வி தீட்டை கொண்டு வருமேயொழிய வேறொன்றையும் அல்ல. அது சரி. உண்மையாகவே அப்படித்தான் இருக்கும். ஆனால் அது என்ன? அது அவர்களுடைய ருசியை திருப்திப்படுத்துகிறது. பார்த்தீர்களா. ஒரு உலக பிரகாரமான சபை அங்கத்தினனின் ருசியை அது திருப்திபடுத்துகிறது. இது ஒரு பரிசுத்தவானின் ருசியை திருப்திபடுத்தாது ஒவ்வொரு முறையிலும் திருப்திப்படுத்த அவன் வார்த்தையை எடுத்துக் கொள்வான்! ஆனால் அவர்கள் ''ஓ, அந்த ஜனங்களா, கொஞ்சம் புத்திக் கோளாறு உள்ளவர்கள். அவர்களுக்கு அது சரியாய் புரிகிறதில்லை. அவர்கள் ஏதோ கடந்த நாட்களின் காரியங்களில் ஜீவிக்க பிரயாசிக்கிறார்கள்'' 68இது விநோதமாய் இல்லையா? நான் இங்கே மேற்குப் பக்கம் வந்திருக்கிறேன். இங்கே நான் பார்க்கிற காரியம் இவர்களெல்லாரும் ஏதோ கடந்து போன காலத்தின் வழியிலே ஜீவிக்க பிரயாசிக்கிறார்கள். பழைய மாட்டுக்கார பையன்களை போன்று இருக்க விரும்புகிறார்கள். இன்னும் கீழாக கென்ட்டக்கி (KENTUCKY)க்கு போவீர்களானால் அவர்கள் இன்னும் அந்த ஹில் பில்லி (HILL BLLY) நாட்களைப் போலவே அவர்கள் இருக்க விரும்புகிறார்கள். ஆனால் கடந்து போன காலமார்க்க காரியங்களை பார்க்கும்போது, அதைக் குறித்து அவர்களுக்கு ஒன்றும் வேண்டியதில்லை. பழைய நாகரீக நாட்கள்? நான் இங்கே ரோடிஓ (RODE0)வின் நாட்களில் வந்தேன். அப்பொழுது நான் கண்டது ஸ்திரி பெரியவளாய் இருப்பாள். அவளுடைய கண்களின் கீழ் பச்சை நிறம் இருக்கும். முடியைக் குட்டையாக வெட்டிக் கொண்டிருப்பாள். வாயில் சிகரெட் வைத்திருப்பாள். ஏன், அந்தக் காட்சியை இன்னும் பழைய நாட்களில் இருந்தவர்கள் கண்டிருப்பார்களேயானால், அவர்கள் நினைத்திருப்பார்கள். அவள் எங்கேயோ சீர்குலைந்து போயிருக்க வேண்டுமென்று. அவளை உள்ளே தள்ளி இருப்பார்கள். இன்றைக்கு நீயோ அல்லது உன் மகளோ உடுத்துக் கொள்வது போன்று, உன் தாயானவள் அவளுடைய நாட்களில் உடுத்தி இருந்திருப்பாளேயானால், என்ன காரியம் நடைபெற்றிருக்கும்? அவளைப் பயித்தியகார ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பார்கள். நிச்சயமாக, அவள் தன்னுடைய ஆடையில்லாதவளாக வந்திருப்பாள். ஆனால் இப்பொழுது நினைத்துப் பாருங்கள். இன்றைக்கும் காரியம் அப்படியே இருக்கின்றது. மனிதன் தன் மாமிசத்தில் அழுகிக் கொண்டிருக்கிறான். அவர்கள் தங்கள் நடுவயதில், 20 முதல் 25-வரை இருப்பார்களேயானால் அவர்களுடைய மூளையும் கூட அழுகிக் கொண்டே போகிறது. போதுமான புரிந்துக் கொள்ளுதல் இல்லாத அளவிற்கு ஜனங்கள் போய்விட்டார்கள். அவர்கள் மரியாதை என்பதற்கு அர்த்தம் அறியாதவர்களாயிருக்கிறார்கள். சரியானதிற்கும் தவறுக்கும்அவர்கள் வித்தியாசம் தெரியாதவர்களாய் இருக்கிறார்கள். ஓ! எப்பேர்பட்ட கல்வித்திட்டம் அவர்களுக்கு... 69உனக்கு தெரியுமா கல்வி, பிசாசினால் உண்டானது என்று என்னால் நிரூபிக்க முடியும். எழுத படிப்பதை அல்ல, அவர்களுடைய கல்வியை சபையில் போடுவதை குறித்து சொல்லுகிறேன். கம்யூனிஸம் எதன் பேரில் அமர்ந்திருக்கிறது? விஞ்ஞானம், கல்வி அது தான் அவர்களுடைய கடவுள். சாத்தான். பார்த்தீர்களா! ஏவாளிடம் அவன் அறிமுகபடுத்தியது அதுதான். இன்னும் அவர்கள் பிடித்துக் கொண்டிருக்கிறது அதைதான். இப்பொழுது அது நம்முடைய சபைகளை பற்றிக் கொண்டது. பாப்டிஸ்ட் மெத்தடிஸ்ட் (Methodist) பிரஸ்பிடேரியன் (Pusbyterian) பெந்தேகோஸ்தே (Pentecostai) மற்றும் எல்லோரையும். ஏதோ கல்வி, புத்தி சாதுர்யம் யாரோ பெரிய, இன்னார், இன்னார், இது அவர்களை தேவனை விட்டு தூரமாக அவர்களை கொண்டு போகின்றது. அது தவறு, ஆம் ஐயா. நாம் பார்த்தோம். அது அவர்களுடைய வாஞ்சையை திருப்தியாக்குகின்றது. ஒரு சபையானது அதை போன்றதொரு காரியத்திற்கு வாக்களிக்குமானால் அது எதை காட்டுகிறதென்றால், அந்த சபையின் சிந்தை என்ன என்றும், அவர்களுடைய வாஞ்சை என்ன என்றும் அவர்கள் எதன் பேரில் தாகமாயிருக்கிறார்கள் என்றும் காட்டுகின்றது. எங்கள் போதகருக்கு பரந்த மனப்பான்மை, நாங்கள் ஆண் பெண் கலந்து குளிப்பதை பெரிதுபடுத்தமாட்டார், எங்களோடு கூட வருவார். 70அன்றொரு நாள் ஒரு சிறு பெண் என்னுடைய சாராளிடம் கூறினாள். அவளுடைய பாஸ்டர் ஆப்பிரிக்காவுக்கு சென்று திரும்பினதால் அவருக்கு வரவேற்பு கொடுக்க அந்த இரவு அவள் உள்ளாக உடலோடு ஒட்டிக் கொண்டிருக்கும் ஆடை அணிந்து கொண்டு வாட்டூசி (Watu si) நடனம் ஆடி மேலாடையை உரிந்து போட்டாள் அன்றிரவு. வாட்டூசி (Watusi) என்பது அங்கே குடியிருக்கின்ற ஒரு ஜாதியார், உனக்கு அது தெரியுமா? பையனே, என்னுடைய சபையில் இருக்கின்ற ஒரு சிறுமி அதை போன்று செய்ய, வாட்டூசி (Watusi) நான் பார்க்க வேண்டும்? பாருங்கள். அது இதைத்தான் காட்டுகின்றது! ஒரு பாஸ்டர் (Pastor) உட்கார்ந்துக் கொண்டு அவருடைய சபையில் இருக்கின்ற (16 அல்லது 18 வயதுள்ள) ஒரு பெண் தன்னுடைய மேலாடைகளை களைந்து போட்டு ஆட அனுமதித்து அதைப் பார்க்கிறாரென்றால், அது அவர் ஒரு கழிவு நீர் தொட்டியிலிருந்து வந்துள்ளார் என்பதை காட்டுகின்றது. ஒரு தேவனுடைய மனுஷன் இப்படிப்பட்ட காரியத்தைச் செய்வானா? நிச்சயமாக மாட்டான். இது மிகவும் கடுமையாக இருக்கலாம். ஆனால் தேசத்திற்கு வெளியிலும் கூட இப்பொழுது பிரசங்கிக்கிறேன். ஆனால் இதையும் கூட நீங்கள் அறிவீர்கள். சகோதரனே சகோதரியே நான் உனக்கு சொல்லுகிறேன். அது உண்மை. 71ஒரு வல்லூறு. அதற்கு மரித்த காரியங்கள் வேண்டும். அதுசரி. அது மரித்துப் போனது. அது அப்படியே, சரி. இது மிகவும் தெளிவாய் நமக்கு காட்டுகின்றது. அவனுடைய தலையில் என்ன இருக்கிறது என்றும், அவர்களுடைய மேற்பார்வை கோபுரம் அவர்களுக்கு எதை கொடுக்கிறது என்றும், அவர்களுடைய ஆத்துமாவில் என்ன இருக்கிறது, என்பதையும் காட்டுகிறது. அவர்களுடைய ஆத்துமா இப்படிப்பட்ட காரியங்களை வாஞ்சிக்கின்றது. அவர்களுடைய ஆத்துமா, உயர்ந்த புத்தி சாதுர்யமுள்ள சபையை, எங்கே அழகான ஆடைகள் அணிந்து, எங்கே பாஸ்டர் (Pastor) 15 அல்லது 20 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளுகின்றாரோ அதை வாஞ்சிக்கின்றது. நீ அதை காட்டிலும் மீறி . போவாயானால், அவர்கள் அவனை டீக்கன்கள் வாரியத்திற்கு தூக்கி போட்டுவிடுவார்கள். அவன் பாவத்தை குறித்து ஒன்றும் சொல்லக் கூடாது. அரைகால் சட்டை அணிந்து கொள்வதை குறித்தோ! ஜனங்கள் இதை, அதை செய்வதை குறித்தோ, ஒன்றும் சொல்லக் கூடாது. அப்படி செய்வானேயானால் அந்த வாரியம் அவனை வெளியே தூக்கி எறியும். பார்த்தீர்களா? அது என்ன? அதுதான் அவர்களுடைய சிந்திக்கும் மனிதனின் வடிகட்டி. வேதம், 1யோவான்: 2:15-ல் “நீ இந்த உலக ஒழுங்குகளிலும் அல்லது உலகத்தின் காரியங்களில் அன்பு கூறுவீர்களானால், ஏன் அப்படியென்றால் தேவனுடைய அன்பு அவர்களிடத்தில் இல்லை.'' 72சபையென்ற பெயரில் இப்பொழுது அவர்கள் தொடர்ந்து செய்துக் கொண்டிருக்கும் காரியங்களை குறித்து என்ன, சபைகளிலே ஸ்கொயர் டான்ஸ் (Square Dance) பழகிக் கொள்ளுகிறார்கள். பங்க்கோ, பிங்கோ (Bunco - Bingo) விருந்துகள், வாலிபர்களின் ராக் அண்டு ரோல், டுஸ்ட் (Rock and Roll, Twist) நடனங்கள் இப்படிப்பட்டவைகள்! இந்த எல்விஸ் பிரஸ்லி (Elvis Presley)-ஐ பாருங்கள், பிசாசு பாதணிகள் அணிந்து நின்றுக் கொண்டிருக்கிறது. பாட் பூண் ரிக்கி நெல்சன் (Pat Bone Ricky Nelson) இந்த தேசத்திற்கு இதுவரை இருந்திராத பெரிய இடையூறுகள். அது சரி. அவர்கள் சொல்லுகிறார்கள், “அவர்கள் மிகவும் பக்தியுள்ளவர்கள் என்று. அவர்கள் கிறிஸ்தவப் பாடல்களை பாடுகிறார்கள்'' என்று. அது அப்படியிருக்க வேண்டியதில்லை. அப்படிப்பட்ட ஒரு காரியத்தை சபையானது அனுமதித்து இருக்கக் கூடாது. இவர்களில் சிலர் இன்றிரவு இங்கே தெரு வீட்டிலே போய் வர்த்தியம் வாசிப்பார்கள். அடுத்த இரவு பீடத்தண்டைக்கு வந்து அழுவார்கள். அதற்கடுத்த இரவு ஒரு மேடையின் மேல் இன்னிசை வாசிப்பார்கள். ஓ! குட்நெஸ் (goodness) கிரேஸியஸ் (gracious) இருந்தபோதிலும் எவ்வளவு தூரம் தான் அசுத்தம் போக முடியும்? ஆம் ஐயா. நான் ஒரு தேவனுடைய மனுஷன் என்று நிரூபிக்கட்டும். ஏதோ பழம் கிட்டாரையோ அல்லது எதையோ வாசிக்கத் தெரியும் என்பதனால் இப்படிப்பட்ட காரியங்களை அல்ல. உன்னுடைய வாஞ்சையின் மூலமாக உன் இருதய சிங்காசனத்தில் யார் வீற்றிருக்கிறதென்று உன்னால் சொல்ல முடியும். நீ விரும்புகிறதென்னவோ அதுதானே. உன்னைப் பற்றி கூறுகிறது. ''சகோ பிரன்ஹாமே, அந்த காரியங்களெல்லாம் சரி என்று நான் நினைக்கிறேன்'' என்று நீ சொல்லலாம். ஆம் ஐயா. உன்னுடைய ஆத்துமாவைப் போஷிக்கிறது என்னவோ, உன்னுடைய ஆத்துமா தாகிக்கிறது என்னவோ, அது இதை திருப்திபடுத்துகின்றதை நீ காண்பாய். அது இந்த வார்த்தையாய் இல்லாதிருக்குமானால், அப்பொழுது அங்கே ஏதோ தவறு இருக்கின்றது, ஏனெனில் பரிசுத்தாவியானவர் வார்த்தையின் பேரில் மட்டுமே ஜீவிக்கின்றார், பார்த்தீர்களா? 73நாம் முடிப்பதற்கு முன்பாக, நீங்கள் இன்னொரு பெரிய ஆபத்தை பார்க்க வேண்டுமென்று விரும்புகிறேன். நான் இங்கே குறிப்பிட்ட இந்த காரியங்களில் ஒன்றிலும் நீ குற்றமாகாதிருப்பாயானால், அது தான் நீ ஒரு தாக்கத்தை அசட்டை செய்கின்ற ஆபத்து பார்த்தீர்களா? நான் ஒரு பரிசுத்த தாகத்தை உடையவனாயிருக்கிறேன், “சகோதரன், பிரன்ஹாமே சபைகளுக்கு போவதும், சபைகளை சேர்ந்து கொள்ளுதல் போன்ற காரியங்களில் நான் குற்றமற்றவனாக இருக்கிறேன்'', என்று நீ சொல்லலாம். ஆனால் பாருங்கள். ஒரு தாகத்தை அசட்டை செய்கின்றது. ஆகாரமோ அல்லது தண்ணீர் தாகத்தையோ, நீ திருப்தி செய்ய அசட்டையாயிருப்பாயானால், நீ மரித்து போவாய். உனக்குள்ளாக இருக்கின்ற தேவனை பற்றின தாகத்தை நீ அசட்டை செய்வாயானால், நீ ஆவிக்குரிய பிரகாரமாக, நீ மரித்துபோவாய். நீ எழுப்புதல்கள் வேண்டுமென்று அழைக்கிறாய். உன்னுடைய சபையானது எழுப்புதல்களை உடையதாயிருக்க வேண்டுமென்று காத்திருக்கின்றாய். அது உனக்கு வேண்டிய ஒரு எழுப்புதல் அல்ல. அந்த எழுப்புதலானது நீ எப்பொழுது தேவனைப் பற்றி தாகிக்க ஆரம்பித்தாயோ அப்பொழுதே உனக்குள்ளாக ஆரம்பித்திருக்க வேண்டும். ஒரு வேளை அந்த எழுப்புதலை தேவை என்று சொல்லுகின்ற இன்னொரு நபர் சபையில் இல்லாமலிருக்கலாம். அது உனக்குள்ளாக உடைத்துக் கொண்டு வருமானால் மற்ற இடங்களிலும் கூட உடைத்துக் கொண்டு வரும். பார்த்தீர்களா? ஆனால் பாருங்கள். அந்த தாகத்தை நீ அசட்டை பண்ணுகிறாய். ஒரு பசுவின் மடி பால் நிறைந்து காத்திருக்கும் போது, பாலை நீ கறக்காமல் போவாயானால் அந்த பசுவிற்கு பால் சுரக்குதல் நின்றுவிடும். அது முற்றுலும் சரி. “நான் இனி தண்ணீர் குடிக்கவே மாட்டேன்” என்று சொல்லி, நீ தண்ணீர் குடிக்க அசட்டை செய்வாயானால் நீ மரித்து போவாய், சாப்பிட அசட்டை செய்வாயானால் நீ மரித்து போவாய். ஆகவே நீ பரிசுத்த ஆவிக்கு வார்த்தையை கொடுக்க அசட்டையாயிருப்பாயானால் நீ மரித்து போவாய். 74கிறிஸ்தவனே, நீ பாப்டிஸ்ட், மெதடிஸ்ட், பிரஸ்பிடேரியன், பென்தேகோஸ்தே, அஸ்சாம்பலி ஆப்காட், டூ நெஸ், திரிநெஸ், ஒன்நெஸ், (you Baptist, Methodist, Presbyterian,Pentecostal, Assemblies. of God, Twoness, Threeness, oneness) நீ எதுவாயிருந்தாலும் சரி. பார்த்தீர்களா, அதைப் பற்றி கவலையில்லை, எனக்கு, அது ஒன்றுமில்லை. தேவனுக்கும் அது ஒன்றுமில்லை என்று நினைக்கிறேன். பார்த்தீர்களா. நீ ஒரு தனிப்பட்ட நபர். நீ ஒரு தனி பொருள். நீ ஒருபோதும் ஒரு சபையாய், ஒரு ஸ்தாபனமாய் பரலோகத்திற்கு போக போகிறதில்லை. நீ ஒரு தனிப்பட்ட நபராய் தான் பரலோகத்திற்கு போவாய். உனக்கும் தேவனுக்கும் இடையே, அவ்வளவுதான். நீ எந்த சபையை சேர்ந்தவன் என்பதைப் பற்றிக் கவலையில்லை. நீ வேதத்தை வாசிக்கவும், வேதத்தை விசுவாசிக்கவும், அதனால் பரிசுத்தாவியை போஷிப்பிக்கவும் அசட்டையாயிருப்பாயாயின், நீ மரித்து போவாய். யோவான்: 4:3-ல், ''மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் எல்லா வார்த்தையினாலும் பிழைப்பான்'' ஒரு பகுதியினாலல்ல என்று இயேசு சொன்னார். நாம் இங்கே கொஞ்சம் எடுத்துக் கொள்ளுகிறோம். அதை, நான் வேத தொத்தி தொத்தி செல்பவன் (hitch hiker) என்று அதை அழைப்பேன். அவர்கள் சொல்லுவார்கள். சரி, நான் இதை விசுவாசிக்கிறேன் ஆனால் இப்பொழுது நாம் இங்கே போவோம். பார்த்தீர்களா? நீ அதை வார்த்தை வார்த்தையாய் அதை எடுக்க வேண்டும். “மனிதன் தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் எல்லா வார்த்தையினாலும் பிழைப்பான்” என்று இயேசு சொன்னார். உனக்கு அது தெரியுமா? உனக்கு தெரியுமா? நாம் ஜீவிக்கிறதான இந்த நாட்களை மார்க்க தாறுமாறாக்கிவிட்டோம். 75சமீபத்தில் என் மகள் என்னை அழைத்து, அப்பா! இந்த வீட்டின் அடுத்த பக்கத்தில், இங்கே வாருங்கள், நாங்கள் மார்க்க சம்மந்தமான நிகழ்ச்சி வைக்க போகிறோம், என்றாள். அது ஒரு கோயில், பாட்டுக்கள் பாடுவது, அங்கே யாரோ ஒரு ரிக்கி (Ricky) அதை வாசித்துக் கொண்டிருந்தான். நான் அவபக்தியான அசைவை கண்டிருப்பேனேயானால் இதுதான் அது. அதை நடத்த வந்தவர்களும், பார்க்க வந்த ஜனங்களும் பார்ப்பதற்கு ஏதோ தரையிலே காட்டும் வித்தை போலிருந்தது. அவர்கள் ஏதோ இந்திய ஜாதியாயிருப்பது போல் இருக்கிறார்கள். அவர்கள் எகிரி குதித்து அவனோடு குத்து சண்டை போடுவது போலிருந்தது. ஏன் அந்த உத்தமத்தோடு சென்றது என்ன, நாம் வழக்கமாக பாடுகின்ற கடந்த நாட்களின் பாடல்கள். நாம் பாடி தேவ ஆவியில் மகிழ்ந்து நம்முடைய கன்னங்களில் கண்ணீர் வழிய பாடின பாடல்கள் எங்கே? இப்பொழுதோ நாம் ஒரு பாடகர் என்று காட்ட மூச்சு திணரும்படியாய், முகம் நீல நிறமாய் மாறும் அளவுக்கு சுவாசத்தை அடக்கிக் கொண்டு பாட முயற்சிக்கிறோம், பார்த்தீர்களா. நாம் ஹாலிஉட் (Holly wood)-ஐ அப்படியே பின்பற்றுகிறோம். புத்தி கூர்மையான பாடல் பாடுதல், குரல் பயிற்சி, இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள், நன்றாக பாடுவதை கேட்க எனக்கு பிரியம்தான். இன்றைக்கு பாடல் என்று சொல்லிக் கொண்டு கிரிச், கிரிச்சென்று சத்தமிடுகின்றார்களே, அதை நிச்சயமாக நான் வெறுக்கிறேன். அது சரிதான். அது ஒரு தாறுமாறுதல். அது சரியே. 76ஒரு மனிதன் தான் மனிதனாக இருக்கும் போது எனக்கு காண விருப்பம். ஒருவன் தன் மனைவியின் உள்ளாடைகளை அணிந்து கொண்டு தலைமயிர் முன் பக்கமாக சுருட்டிவிட்டு கொண்டு பக்கவாட்டில் சுருள் சாதனைகளை தலையில் அணிந்து முன் பக்கமாக மயிரை வெட்டிக் கொண்டு இருக்கின்ற ஒரு மனிதனை காண நான் வெறுக்கிறேன். அதை நான் ஒரு மனிதன் என்று அழைக்க மாட்டேன். அவன் எந்த இனத்தை சேர்ந்தவன் என்று கூட அவனுக்கு தெரியவில்லை. பார்த்தீர்களா? அதுசரி. ஒரு ஸ்திரியை பாருங்கள், அவள் முடியை வெட்டிக் கொண்டு ஒரு மனிதனுடைய தலைமயிரை போன்று காட்சி அளிக்கும்படி செய்து கொள்ளுகிறாள். மனிதன் சுருள் சாதனைகளை தலையில் அணிந்து கொண்டு ஸ்திரியை போலிருக்கும்படி முயற்சிக்கிறான். மனிதன் தன் மனைவியின் உள்ளாடைகளை அணிந்து கொள்ளுகிறான். அவள் அவனுடைய மேலாடைகளை அணிந்து கொள்ளுகிறாள் பாருங்கள் வெறுமனே அப்படியே தலைகீழாக இருக்கின்றது. தேசத்தோடும், ஜனத்தோடும், சபைகளோடும், எல்லாவற்றோடும், காரியம் அதே விதமாய் தான் இருக்கின்றது. ஓ தேவனே! இந்த காரியத்தின் முடிவு எங்கே இருக்கின்றது? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகை, அதுதான் அதனுடைய முடிவு. 77ஆக நீ பரிசுத்தாவியை தேவனுடைய வார்த்தையால் போஷிக்க அசட்டையாயிருப்பாயானால், எல்லா வார்த்தையும் பரிசுத்தாவியினால் ஆனது, என்று இயேசு சொன்னார். இப்பொழுது கவனியுங்கள். உனக்குள்ளாக இருப்பது அசலான பரிசுத்தாவியாய் இருந்து நீ அதற்கு தவறான காரியங்களை ஆகாரமாய் தருவாயானால், அதற்கு அந்த வித்தியாசம் தெரியும். ஞாபகம் இருக்கட்டும். பரிசுத்தாவியானவர் புசிப்பது தேவனுடைய வார்த்தையை தான். அது ஆர்வத்தினால் போஷிக்கப்படுகிறதில்லை. அது கல்வியினால் போஷிக்கப்படுகிறதில்லை. அது சபைக்கு போவதினால் போஷிக்கப்படுகிறதில்லை. வேத சாஸ்திரங்களினால் அது போஷிக்கப்படுகிறதில்லை. வேத சாஸ்திர கருத்துக்கும், பரிசுத்தாவியின் ஏவுதலுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. இயேசு நாட்களில் இருந்த அந்த எல்லா வேத சாஸ்திரிகளும், மேசியா இந்த வண்ணமாகத் தான் வரவேண்டும் என்று வார்த்தைக்கு, வார்த்தையாக, பக்கத்திற்கு பக்கமாக வரையப்பட்டு வைத்திருந்தார்கள்! முற்றிலுமாக அது அப்படிதான் இருந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் அதைக் காண தவறிவிட்டார்கள். இயேசு வந்த போது என்ன சொன்னார் என்று உங்கள் யாவருக்கும் தெரியும், ''நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசினால் உண்டானவர்கள் அவனுடைய கிரியைகளை நீங்கள் செய்வீர்கள்'' என்றார். உண்மையான வார்த்தை என்னவென்று அவர்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை இன்றைக்கு இவர்கள் காண தவறுவது போன்று அன்று அவர்கள் அந்த சின்ன முலைகளை காணத் தவறினார்கள். ''நீங்கள் இதை சேர்ந்தவர்களாய் இருப்பீர்களானால்...“ “நீங்கள் இதை சேர்ந்தவர்களாய் இருப்பீர்களானால், நீ சரியாக இருப்பாய்?” அதை நீ விசுவாசிக்காதே. நீ கிறிஸ்துவை சேர்ந்தவனாக இருக்க வேண்டும். உனக்குள் ஏதோ கிறிஸ்துவைப் பற்றி பசியாயிருக்கும். 78நினைவிருக்கட்டும், நீ உன் தகப்பனின் இடுப்பில் இருக்கும்பொழுது, நீ அப்பொழுது அவரோடு கூட இருந்தாய். ஆனால் உன் தகப்பனார் அப்பொழுது உன்னை அறியவில்லை. உனக்கும் உன் தகப்பனாரை தெரியாது. நீ வந்து பிறக்க வேண்டியவனாய் இருக்கிறாய். தேவன் உன் தாயின் மூலமாக விதை தங்கும் இடம் ஒரு வழியை உண்டு பண்ணினார். அதன் பின்பு, அது வந்தது, அதற்கப்புறம் நீ ஒரு மனுஷனாகவோ, மனுஷியாகவோ ஆனாய். அது எப்படியிருந்த போதிலும் அதன்பின்பு உன்னால் உன் தகப்பனாரை அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. உன் தகப்பனாரும் உன்னோடு ஐக்கியம் கொள்ள முடிந்தது. நினைவிருக்கட்டும், நீ நித்திய ஜீவனை உடையவனாய் உன்னுடைய ஜீவன் ஆரம்பத்திலேயே தேவனுக்குள் இருந்திருக்க வேண்டும். அந்த ஜீவன், தேவன் வார்த்தையாய் இருக்கிறார். அந்த வார்த்தை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிலே மாம்சமான போது தேவன் தம்மை தேவ குமாரனாக்கி, அவருடைய சொந்த சரீரத்தில் வாசம் பண்ண கீழே வருகிறார் என்பதாகும். தேவன் வாசம் பண்ணும் படியாய் கீழே வந்தபோது, அவர் சிலுவையில் அறையப்பட்டபோது, நீ அவருக்குள் இருந்தாய். நீ அவரோடு கூட சிலுவையில் அறையப்பட்டாய். கல்வாரியில் நீ அவரோடு கூட மரித்தாய். நீ அவரோடு கூட அடக்கம் பண்ணப்பட்டாய், அந்த மலையிலே. ஈஸ்டர் (Easter) காலையில் நீ அவரோடு கூட உயிர்த்தெழுந்தாய். இப்பொழுது நீ அவருக்குள், உன்னதங்களிலே அவரோடு கூட உட்கார்ந்து கொண்டிருக்கிறாய். இப்பொழுது உனக்கு அவரோடு கூட ஐக்கியம் உண்டாயிருக்கிறது. பார்த்தீர்களா? தேவன் தாமே நம்மில் ஒருவரானார். தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை, “பிதாவின் ஒரே பேரான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்'' அது என்னவென்றால், உன்னோடு ஒரு மனிதனாக ஐக்கியபடும்படி தேவன் ஒரு மனிதனானார். பார்த்தீர்களா? இப்பொழுது நீ மாமிசமாய் இருக்கிறாய். அவர் மாமிசமாயிருக்கிறார். தேவன் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்ற நபரிலே நமது மத்தியிலே மாமிசமானார். அவருக்குள் தேவன் இருந்தார். அவர் தேவனில் ஒன்றும் குறைவாயில்லை. அவர் தேவனாயிருந்தார். தேவன் அவருடைய குமாரனில், இயேசு கிறிஸ்துவில் வெளிப்பட்டார். தீர்க்கதரிசி அவர் எப்படி இருப்பார் என்று சொன்னாரோ, அது போன்று அவரை இம்மானுவேல் ஆக்கிற்று. 79அப்படியானால், உலகம் தோன்றுவதற்கு முன்னமே நீ இருந்திருக்க வேண்டும். உன்னுடைய பெயர் ஆட்டுகுட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது. அப்படியானால் நீ என்ன புசிக்க முடியும்? வெளி: 22:19-ல் வேதம் சொல்லுகின்றது, ஒருவன் இவைகளோடு ஒரு வார்த்தையை கூட்டினாலும், ஒரு வார்த்தையை எடுத்து போட்டாலும், ஜீவ புஸ்தகத்திலிருந்து அவனுடைய பங்கு எடுத்து போடப்படும். அது எவ்வளவு ஆழமாயிருக்கிறதென்று பார்த்தீர்களா? உன்னால் முடியாது. பரிசுத்தாவியானவர் உலகத்தின் காரியங்களால் ஜீவிக்க முடியாது. ஒரு புறாவையும் காகத்தையும் போன்று. காகம் ஒரு பெரிய மாய்மாலகாரன். காதம், அவன் அங்கே போய் ஒரு நாள் முழுவதும் கோதுமையை சாப்பிட முடியும். அவன், அங்கேயும் பறந்து போய் ஒரு செத்த சடலத்தை, அதையும் கூட புசிக்கும். வயலில் உட்கார்ந்து புறாவோடும் சேர்ந்து கோதுமையும் கூட புசிக்க முடியும், அங்கே போய் அந்த மரித்த சடலத்தையும் புசிக்கும். ஆனால், புறாவானது, நாள் முழுவதுமாக கோதுமையை புசிக்க முடியும், ஆனால் மரித்த சடலத்தை அதனால் புசிக்க முடியாது. ஏனென்றால் அது ஒரு புறாவாக இருக்கின்றது. புறாவிற்கு பிச்சு கிடையாது. அந்த மரித்த சடலத்திலிருந்து ஒரு கடி கடித்தால் போதும். அது அதை கொன்றுபோடும். பாருங்கள், பிச்சு கிடையாது. அந்த வண்ணமாகதான் அது இருக்கின்றது, அதற்கு கசப்பில்லை. ஒரு அசலான உண்மை கிறிஸ்தவனோடும். காரியம் அப்படியே. உலகத்தின் காரியங்கள் அவர்களுக்கு வேண்டியதில்லை. அவர்கள் வெறுமனே தேவனுடைய வார்த்தையை, அதை மட்டுமே புசிப்பார்கள். சுத்தமாக எது இருக்கின்றதோ, சிந்திக்கும் மனிதனின் வடிகட்டி, அவர்கள் அதன் மூலமாகத்தான் வந்தார்கள். அது மட்டுமே. இந்த உலகத்தின் சொத்த காரியங்கள் அவர்களுக்கு, அது நாற்றமாய் இருக்கின்றது. நோவாவின் நாட்களின் அழிவின் நாட்களிலிருந்த, அந்த பழய காகத்தை நோக்கி பாருங்கள். ஒரு சரீரத்திலிருந்து, இன்னொரு சரீரத்திற்கு பறந்து போய் மரித்த சடலங்களை புசித்தது, அது திரும்ப பேழைக்குள் வரவில்லை. ஆனால் அந்த புறாவிற்கோ கால் வைத்து இளைப்பாற இடமில்லாமையால், அதற்கு தானியம் கிடைத்துக் கொண்டிருந்ததான பேழையினிடத்திற்கு திரும்பி வந்தது. நாம் அந்த வண்ணமாய்த் தான் செய்கிறோம். நாம் தேவனுடைய வார்த்தையினால் ஜீவிக்கிறோம். 80தாவீது, தான் தப்பியோடி அலைந்து கொண்டிருந்த நாட்களில் இந்த 42-ம் சங்கீதத்தை எழுதி இருந்திருக்க வேண்டும். அப்பொழுது அவன் “மானானது நீரோடைகளை வாஞ்சித்து கதறுவது போல் என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது” என்று சொன்னான், கவனியுங்கள். அவன் சத்தமிட்டான் தாவீது பயந்து ஓடுகிறவனாயிருந்தான். அவன் தன் மீது அபிஷேக தைலம் உடையவனாயிருந்தான். அவன் ஒரு ராஜாவாக இருக்க போகிறான் என்பதை அறிந்திருந்தான். தீர்க்கதரிசியானவர் அவரை ராஜாவாக அபிஷேகம் பண்ணியிருந்தார். கவனியுங்கள், புறஜாதியாரான ஒரு சிறு கூட்ட சேவகரோடு கூட அவன் அங்கே மலையின் உச்சியில் இருந்தான். அங்கே அவனுக்கு அன்பான பட்டணம், அவர்களுடைய பாவத்தின் நிமித்தமாக பெலிஸ்திய சேனையால் சூழப்பட்டிருக்கிறது. தாவீது அந்த உஷ்ணமான நாளிலே, இந்த சங்கீதத்தை அவன் எழுதின வேளையிலே உஷ்ணமாகத் தான் இருந்திருக்க வேண்டும். “மானானது நீரோடைகளை வாஞ்சித்து கதறுவது போல்”. இந்த நிலையில் தாவீதை கவனியுங்கள். அவன் கீழே நோக்கி பார்த்தான். அன்பான பட்டணத்தை நோக்கி பார்த்தான். அவன் சிறுவனாய் இருந்தபோது வழக்கமாக ஒரு குறிப்பிட்ட குளத்திற்கு மந்தையை ஓட்டிக் கொண்டு போனதை நினைத்தான். அது ஒரு தண்ணீர் மிகுதியாய் உள்ள தேசம். அப்பத்தின் தேசமுமாய் இருந்தது. உண்மையாக, “பெத்லெகேம்” என்பதற்கு தேவனுடைய அப்பத்தின் வீடு என்று அர்த்தமாம். அதன் பிறகு தாவீது அங்கே போய் அந்த அருமையான குளிர்ச்சியான தண்ணீரை அவன் பருகினது அவன் நினைவிற்கு வந்தது. இப்பொழுதோ, அவன் தன் ஜனங்களை விட்டு, பயந்து ஓடுகிறவனாய், மலையின் உச்சியில் இருக்கிறான். அவனுக்கு போவதற்கு வேறு இடமில்லை. அந்த அருமையான குளிர்ந்த தண்ணீரின் மேல், அவனுடைய ஆத்துமா வாஞ்சித்திருக்கும். 81அவனிடத்தில் சில ஊழியக்காரர்கள் இருந்தனர். அவனுக்கிருந்ததான ஒரு அற்பமானவாஞ்சையைகூட அவர்கள் ஒரு கட்டளையாக எடுத்துக் கொண்டார்கள். அவர்களில் மூன்று பேர்15 அல்லது ஏதோ 7 மைல் தூரம் அங்கிருந்த பெலிஸ்திய சேனையோடு போரிட்டு அந்தஇடத்திற்கு போய் அவனுக்கு குடிக்க தண்ணீர் கொண்டு வந்தனர். ஆனால் அவனுடையஆத்துமாவின் தாகம். அவன் அங்கே மேலே இருந்தான். ஒரு வேளை என்ன கிடைக்கின்றதோ, அதை தான் அவன் குடிக்க வேண்டிஇருந் திருக்கும். ஏதோ பழைய ஆட்டுதோல் துருத்திபோன்றது. சுடுகின்ற தண்ணீர் அந்தஉஷ்ணமான வேளையிலே. நான் மட்டும் கீழே போய் எனக்கு இருக்கின்ற இந்த தாகத்தைதீர்த்து கொள்ள முடிந்தால், என்னால் அந்த பெத்லேகேமுக்கு போய், அந்த ஊற்றுநீரண்டைக்கு போய் குடிக்க மட்டும் முடிந்தால், என்று அவன் நினைத்தான்! 82அவர்கள் கீழே போய் தண்ணீரை எடுத்துக் கொண்டு திரும்பி வந்த போது, அவனுடைய ஆத்தும தாகமானது பெத்லேகேமுக்காகவல்ல, ஆனால் எருசலேமுக்காக மிகவும் அதிகமாயிருந்தது. ஆகையினால் அவன் அந்த தண்ணீரை தியாகம் செய்து, நான் அதை குடிக்க கூடமாட்டேன், என்றான். அவன் அதை தரையில் ஊற்றினான். ஒரு அருமையான குளிர்ச்சியான நல்ல தண்ணீரினால் அவனுடைய சரீரத்தின் தாகத்தை தீர்ப்பதை காட்டிலும் அவனுடைய ஆத்துமா தேவன் பேரில் அதிகதாகமாய் இருந்தது. அவன் அதை தரையில் ஊற்றினான். பாருங்கள், தேவனுடைய வீடு, எருசலேமின் ஆத்துமாவை குளிர பண்ணும் தண்ணீர்கள். அவை மேலே இருக்கின்றது! யோவான்: 6:33-ல் ''நானே ஜீவ அப்பம். நானே ஜீவ அப்பம்'', பெத்லேகம் “தேவனுடைய வீடு” நம்முடைய சபை, பூமிக்குரிய தேவனுடைய சபை. இங்கே பூமியில் இருக்கின்றதான சபை. நாம் இங்கே இப்பூமியில் நம்முடைய சபைக்குப் போக பிரியமாயிருக்கிறோம். ஆனால் இதைக் காட்டிலும் பெரியதாயிருக்கிறது எருசலேம். மேலே இருக்கிறது. அது தேவன். மேலே இருக்கின்ற எருசலேம் அது தேவனாயிருக்கிறது. இங்கே ஒரு சபையை சேர்ந்து கொண்டு உன்னை திருப்திபடுத்துகிறதைக் காட்டிலும், நீ அங்கே அவரோடு கூட இருப்பது உன்னுடைய ஆத்துமாவின் தாகத்திற்கு அதிக சந்தோஷமாய் இருக்கும். ஒரு சபையை சேர்ந்து கொள்ளுதல் அந்த தாகத்தை திருப்தியாக்காது. தாவீது அதை இங்கே ஊற்றினான். நேராக தேவனுடைய வீட்டிலிருந்து கொண்டு வந்த அந்த தண்ணீரைப் பாருங்கள், அதை அவன் தரையிலே ஊற்றினான். ஒரு தயவை பெறும்படியாக தேவனிடத்திலிருந்து ஒரு குளிர்ச்சியானதை குடிக்கும் படியாக. உனக்குள்ளாக இருக்கின்ற தாகத்தை காட்டிலும் தேவன் பேரில் உள்ள ஆத்தும தாகத்தின், அந்த தாகம் மிகவும் பெரியதாயிருக்கிறது. 83கவனியுங்கள், எருசலேம் என்ற பதம், எருசலேம் மேலேயிருந்து வந்ததாய் இருக்கிறது. வேதம் “நம்மெல்லாருக்கும் தாயானவள், என்று சொல்லுகிறது. கிறிஸ்து நம்முடைய தாயாயிருக்கிறார். தேவன் நம்முடைய தாயாயிருக்கிறார் என்பதை நாம் உணர்ந்து கொண்டோம். ஏனெனில் நாம் அவர் மூலமாக பிறந்திருக்கிறோம். அந்த வார்த்தையின் அர்த்தம் ''சமாதானம்'' எருசலேம், சாலோம், அல்லது சாலோம் என்பதற்கு சமாதானம் என்று அர்த்தம். எருசலேம் ''சமாதானம்” என்று அர்த்தம். நான் ஒரு சபையைச் சேர்ந்து கொண்டேன் என்று சொல்லிக் கொள்வதைக் காட்டிலும், ஜீவ தண்ணீருக்காக உள்ள எந்த ஆத்துமாவின் தாகம், மிக பெரியதாக இருக்க வேண்டும். உண்மையான, சரியான தாகம், அந்த தாகத்தை ஒருபோதும் திருப்திபடுத்தவே முடியாது. அதை தாறுமாறாக்கலாம். நீ சபைகளை சேர்ந்து கொள்ளும் போது, சரியாகத் தான் நாம் இருக்கின்றோம் என்று நீ நினைத்துக் கொள்ளலாம். ஆனால் காரியம் அதுவல்ல. தேவனை பற்றின அசலான பரிசுத்த தாகத்தை அது ஒரு போதும் திருப்திபடுத்தாது. அதனால் அதை செய்யவே முடியாது. அது அங்கு இல்லவே இல்லை. 84சங்கீதம்: 42:7-ல் தாவீது, ''உமது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் நோக்கிக் கூப்பிடுகிறது'' ஆத்துமாவின் கூப்பிடுதல், என்று சொல்லுகிறார். பாருங்கள், நான் அடிக்கடி இதை ஒரு எடுத்துக்காட்டாக உபயோகிக்கிறேன். ஒரு மீனின் முதுகின் மேல் ஒரு துடுப்பு இருக்குமானால் அதைக் கொண்டு அது நீந்தும் படியாக அங்கே வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு அது தேவையாயிருக்கிறது. ஒருவேளை அது, நான் ஒரு வித்தியாசமான மீனாய் இருக்க போகிறேன். நான் ஒரு சாமர்த்தியமுள்ள கற்ற மீனாயிருக்க போகிறேன். நான் உண்மையான வேத சாஸ்திரத்தை விசுவாசிக்க போகிறேன்! எனக்கு அந்த துடுப்பு அவசியமில்லை என்று நான் விசுவாசிக்கிறேன் என்று சொல்லுமானால் என்னமாயிருக்கும்? அதனால் தண்ணீருக்குள் அதிக தூரம் போக முடியாது. அதனால் முடியுமா? அது முற்றிலும் சரியே. ஒரு மரமானது, “எனக்கு தெரியும், முதலாவதாக நான் வளர பூமி என்று ஒன்று இருந்திருக்க வேண்டும், அது சரியே. நான் இங்கேதான் வளர்ந்திருக்க வேண்டும். ஆனால் நான் ஒரு வித்தியாசமான மரமாக இருக்க போகிறேன், நான் எல்லாரும் காணப்பட என்னை இங்கே நடு வீதியில் அவர்கள் வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்'', என்று சொல்லுமானால் என்னமாயிருக்கும். பாருங்கள், அது அதிக காலம் ஜீவிக்க முடியாது. அது சரி. ”ஆழமானது ஆழத்தை நோக்கி கூப்பிடும் போது“ அது ஒரு சபையை சேர்ந்துக் கொள்வதைக் காட்டிலும் அதிகமானதை எடுக்கிறது. அது ஒரு பிரசங்கியாருடன் கைகுலுக்குவதை காட்டிலும் அதிகமானதை எடுக்கிறது. அது ஒரு நல்ல நேர்மையான ஜீவியம் ஜீவிப்பதை காட்டிலும் அதிகமானதை எடுக்கிறது. உனக்குள்ளாக இருக்கின்றதை திருப்திபடுத்த, தேவனிடத்திலிருந்து உன்னுடைய ஆத்துமாவுக்குள் ஊற்றபடுகின்ற எதையோ அது எடுத்துக் கொள்ளுகிறது. ''ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது. உமது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது''. 85இன்றிரவு நமக்குள்ளாக இருக்கின்ற தாகத்தை எந்த விதமான தாகம் என்று நாம் நினைக்கலாம்? நாம் பெந்தேகோஸ்தே ஜனங்களாய் நாம் எங்கே சேர பார்க்கிறோம்? நமக்குள்ளாக எந்த விதமான தாகம் இருக்கின்றது? எனக்குள்ளாக எந்த விதமான தாகம் இருக்கின்றது? உனக்குள்ளாக எந்த விதமான தாகம் இருக்கின்றது? தேவனை பற்றின அந்த பரிசுத்த தாகத்தை அழுத்தி போட பிரயாசிக்காதீர்கள். வருஷங்களுக்கு முன்னால் இந்த மலைகளில் தங்கம் இருந்தபோது, நான் அநேக வருஷங்களுக்கு முன்பாக ஒரு கதையை படித்திருக்கிறேன், அது மறப்பதே கிடையாது. அந்த கதையானது தனக்கு ஒரு எதிர்காலத்தை நோக்கினவனாய் ஒருவன் பொன்னைத் தேடி எங்கோ இந்த மலையையெல்லாம் கடந்து சென்றான். அங்கே அவன் பொன்னை தேடி நல்ல பொன் அவனுக்கு கிடைத்தது. அவன் திரும்பி வரும்போது அவன் அந்த பட்டணத்தை அடைந்தவுடன் தான் எப்படி இருப்பேன், அவனுடைய தொல்லைகள் எல்லாம் தீர்ந்து போய் இருக்கும், என்று நினைத்தான். அவன், ''நாளை நான் பட்டணத்திற்குள் போய்விடுவேன், இன்னும் ஒரு நாள் பிரயாணத்தில் நான் பட்டணத்தை அடைந்துவிடுவேன், நான் பொன்னை உடையவனாயிருப்பேன்“ என்று சொல்ல முயற்சித்தான். அவனிடம் கோணிகள் நிறைய பொன் இருந்தது. 86அவனோடு ஒரு நாய் இருந்தது. இப்பொழுது நான் பரிசுத்தாவியை நாய்க்கு ஒப்பிடவில்லை. ஆனால் அதை ஒரு எடுத்துக் காட்டாக பண்ணுகிறேன். அந்த இரவிலே அவன் தன் படுக்கையிலே படுத்துக் கொண்டு “நாளைக்கு நான் என் பொன்னையெல்லாம் உள்ளே கொண்டு போவேன். நான் என்னவாயிருக்க வேண்டும் என்று விரும்பினேனோ, அந்த விதமாக ஆகிவிடுவேன். நான் ஒரு ஐஸ்வரியவானாயிருக்க விரும்பினேன். நான் அருமையான காரியங்களை உடையவனாய் இருக்க விரும்பினேன்'', என்றெல்லாம் நினைக்க ஆரம்பித்தான். அந்த நேரத்தில் இந்த நாய் குரைக்க ஆரம்பித்தது, ஏனென்றால் அங்கே ஒரு எதிரி நெருங்கி வந்து கொண்டிருந்தான். அவன் அந்த நாயிடம் போய், வாயை மூடு என்றான். அந்த நாய் அடங்கிவிட்டது. அவன் தன் படுக்கைக்கு திரும்பி, அவன் தான் தூங்க போவது போன்று ஆரம்பித்தான். அந்த நேரம் நாயானது மறுபடியுமாக தன் சங்கிலியை இழுத்துக் கொண்டு குரைக்க ஆரம்பித்தது. அவன் மறுபடியுமாக கதவண்டை சென்று, வாயை மூடு, நாளைக்கு நான் ஐஸ்வரியவானாயிருப்பேன் என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும், என்று சொன்னான். அதுதான் அவனுடைய பெரிய கனவாயிருந்தது. ஆனால் அந்த நாய் திரும்பவுமாக குரைக்க ஆரம்பித்தது. 87முடிவிலே, அவன் மிகவுமாய் அதைரியப்பட்டு போய், தன் துப்பாக்கியை எடுத்து வந்து அந்த நாயை சுட்டு கொன்றுவிட்டான். இருந்த போதிலும் இனி நீ எனக்கு உபயோகமாய் இருக்க போகிறதில்லை. நாளைக்கு நான் ஒரு ஐஸ்வரியவான். நாளை நான் ஐஸ்வரியவானாக போவேன் என்று சொன்னான். அவன் தன் துப்பாக்கியை கீழே வைத்துவிட்டு தன் முதுகை கதவு பக்கமாக திருப்பிக் கொண்டு தூங்க போனான். அவனை அநேக நாட்களாக பின் தொடர்ந்து வந்தவர்கள் மெதுவாக உள்ளே நுழைந்து அவனை கொன்று போட்டார்கள். அவன் ஐஸ்வரியவான் ஆகவில்லை, பார்த்தீர்களா? அவனுடைய உயிருக்கு ஆபத்து என்று எச்சரித்து கொண்டிருந்த அந்த எச்சரிப்பின் சத்தத்தை உண்டாக்கும் கருவியை நிறுத்திபோட்டான். 88சகோதரனே, சகோதரியே உன்னால் அதை முடியவே முடியாது. ஒரு போதும் உன்னுடைய இருதயத்திலுள்ள அந்த பரிசுத்த அழைப்பை, ஒரு சபையை சேர்ந்து கொள்வதனாலோ, ஒரு சமய கோட்பாட்டை, திரும்ப திரும்ப சொல்லுவதனாலோ, ஒரு குறிப்பிட்ட ஸ்தாபனத்தை சார்ந்தவனாக இருப்பதனாலோ, அழுத்தி போட பிரயாசிக்காதே. அதை திருப்தியாக்க கூடியது ஒன்றே ஒன்று உண்டு. அது இயேசு கிறிஸ்துவாகிய நபரே. “மானானது நீரோடைகளை வாஞ்சித்து கதறுவது போல, தேவனே என் ஆத்துமா உம்மை வாஞ்சித்து கதறுகிறது. என் ஆத்துமா ஜீவனுள்ள தேவன் மேல் தாகமாயிருக்கிறது” உனக்குள்ளாக ஏதோ ஒன்று இருக்கின்றது. அது தேவனுடைய அசைவை காண வாஞ்சிக்கிறது. உன்னுடைய ஆத்துமா அதன் பேரில் தாகமாய் இருக்கிறது. அதைப் பற்றி ஒன்றையும் தடை செய்து போடாதே. போதகர் உன்னிடத்தில், ''நீ அவருடைய கையை பிடித்து குலுக்க வேண்டும், சபையை சேர்ந்து கொள் அல்லது ஒரு ஸ்தாபனத்தை சார்ந்து கொள்'', என்று சொல்ல இடங்கொடாதே. அந்த பரிசுத்த தாகத்தை கொன்று போடாதே; அது உன்னை எச்சரிக்கின்றது. ஒரு நாள் வரும். அப்பொழுது நீ உன் பாதையின் முடிவிற்கு வந்திருப்பாய். 89நாம் வந்த பட்டணத்தில் இருந்த ஒரு சிறு ஸ்திரியை போன்று. ஒரு அருமையான சிறு பெண் அங்கே ஒரு சபைக்கு போனாள். அவள் தெரு வழியாய் வந்து கொண்டிருந்தாள். அவளுக்கு நீண்ட கூந்தல் இருந்தது. அவளுடைய தலைமயிர், ஒரு உரிக்கப்பட்ட வெங்காயத்தை போன்று பின்னாக தொங்கிக் கொண்டிருந்தது. அவளுடைய முகம் எந்த விதமான மேக் அப்பும் (Make-up) செய்யாதது போல் காணப்பட்டது. இந்த பெண் அவளை பார்த்து உங்களுக்கு மட்டும் அந்த வழுக்கைதலை போதகர் மட்டும் இல்லாதிருந்திருப்பாரானால் (என்னை குறித்து அவள் பேசுகிறாள்) நீ பார்ப்பதற்கு கெளரவமாயிருப்பவள் போலிருப்பாய். ஆனால் உன்னை இப்பொழுது பார்த்தால் ஏதோ பண்டைய கால பொருள் கடையிலிருந்து கொண்டு வந்தது போல் இருக்கின்றாய்“ என்று பரிகசித்தாள். அவள் காணும் போதெல்லாம் அவள் அந்த விதமாக சொல்லி அதிக வெறுப்புண்டாக்குவாள். எங்களுடைய போதகர் மிக பரந்த மனப்பான்மை உள்ளவர். எங்களை அறிவார். நீ ஏன் அப்படி செய்கிறாய்? நீ எந்த விதமாக உடுத்துகிறாயோ, சிந்திக்கின்றாயோ, அதனால் ஒன்றுமில்லை. என்றாள்! அதில் காரியம் உண்டு! தேவனுடைய வேதம் சொல்லுகிறது, அதில் உண்டு என்று, நாம் எல்லா வார்த்தையினாலும் ஜீவிக்கிறோம். இந்த சிறு பெண் அதை குறித்து சிறிதேனும் பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து சென்றாள். இப்பொழுது அவள் ஒரு தேவ ஊழியளாய் இருக்கிறாள். 90ஆக இந்த வாலிப ஸ்திரி ஏதோ சமுதாய வியாதி கண்டு மரித்து போனாள். என்னுடைய நண்பன் ஒருவர், அவள் மரித்துக் கொண்டிருக்கும் போது சுகந்தவர்க்க நீரை அவளுடைய சரீரத்திற்குள் செலுத்திக் கொண்டிருந்தான். அவன் சொன்னான், அவள் மரித்த பிறகும் கூட அந்த சுகந்தவர்க்க வாசனையை அவனால் முகர முடிந்தது என்று. அவளுடைய பக்கவாட்டில் துவாரம் ஒன்று தின்று கொண்டிருந்தது. சமுதாய வியாதி. அவர்களுக்கு அது தெரியாது, அவளுடைய பெற்றோர்களுக்கும் அது தெரியாது, அவளுக்கு என்ன கோளாது என்று. ஆனால் அவள் மரிப்பதற்கு முந்தி. அவள் ஞாயிறு பாடசாலையில் உபாத்தியாய் இருந்தாள். அவளுடைய ஞாயிறு பள்ளி பிள்ளைகளின் கூட்டம், அவள் பரலோகம் போகும் போது தேவ தூதர்கள் வந்து அவளைத் தூக்கிக் கொண்டு போவதைக் கானும்படியாய் வந்திருந்தார்கள். அவளுடைய போதகர் ஆஸ்பத்திரி கூடத்தில் சிகரெட்டை புகைத்துக் கொண்டு அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தார். அவள் மரிக்கும் போது அவர்களெல்லாரும் பாட இருக்கிறார்கள், உங்களுக்குத் தெரியுமா, அவள் மரிக்க வேண்டும் என்று அவர்களெல்லாம் அறிந்திருந்தார்கள். வைத்தியர் சொல்லிவிட்டார் அவள் மரிக்கின்றாள் என்று. ஆதலால் அவர்களெல்லாரும் தூதர்கள் வந்து அவளை தூக்கிக் கொண்டு போவதை காணும்படி அவர்களெல்லாரும் இருந்தார்கள். 91சடிதியாக அவள் உண்மையான நிலையை உணர ஆரம்பித்தாள். அவள் ஒரு உண்மையான சபை அங்கத்தினளாயிருந்தாள். அவள் ஒரு ஓய்வு நாள் பாடசாலை உபாத்தியாயினி, ஒரு அருமையான பெரிய ஸ்தாபனத்தை சேர்ந்தவள். அவள் போராட ஆரம்பித்த போது மரணம் அவளைத் தாக்கிற்று. அவளுடைய கண்கள் சற்று வெளியே வந்தது. அவள் அப்பொழுது நான் இழந்து போனேன்! நான் இழந்து போனேன்! போதகரை அழையுங்கள்!'' என்றாள். அவர் சிகரெட்டை கீழே எறிந்து விட்டு உள்ளே நுழைந்து, “இங்கே, இங்கே, இங்கே, இங்கே, உனக்கு ஹிபோ (Hypo) கொடுக்கும் படி நாங்கள் வைத்தியரை கொண்டு வருவோம்!'' என்றார். ''எனக்கு எந்த ஹிபோ (Hypo)வும் வேண்டாம்'' மனுஷரை வஞ்சிக்கிறவனே! நான் மரித்துக் கொண்டிருக்கிறேன். நான் நரகத்திற்கு போகிறேன். நான் இழந்து போனேன், ஏனென்றால் நீ சத்தியத்தை எனக்கு சொல்ல தவறிப் போனாய். போய் அந்த சிறு குட்யூஸ் (Gooduse) பெண்ணை அழைத்துக் கொண்டு வாருங்கள், சீக்கிரமாய் என்னிடத்தில் கொண்டு வாருங்கள். அவள் தான் சரியாய் இருக்கிறாள்! என்றாள். ஒரு முறை நீங்கள் உண்மையான நிலையை சந்திக்குமட்டாய் காத்திருங்கள். அந்த பரிசுத்த தாகத்தை நிறுத்திபோட பிரயாசிக்காதே. நீ அதை ஏதோ நவீன, கற்ற, “இரட்டை குழாய் துப்பாக்கியால் பிய்த்து போடாதே”. இன்றிரவு உன்னை நானே வழியும், சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னாலேயன்றி ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்! என்று எச்சரிக்கின்ற பரிசுத்தாவியின் எச்சரிப்பிற்கு செவி கொடு, அவரே வார்த்தையாயிருக்கிறார். ஒரு நொடி நாம் தலைகளை வணங்குவோம். 92கர்த்தராகிய இயேசுவின், இன்னுமொரு வார்த்தையை, நீங்கள் அதை குறித்து நினைத்துக் கொண்டிருக்கும் போதே, சொல்ல பிரியப்படுகிறேன். மத்தேயு: 5-ல் இயேசுவானவர் “பசி தாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள் என்று சொன்னார். அந்த தாகத்தை உன்னில் உடையவனாய் இருப்பதே ஆசீர்வாதமானது. ஸ்தாபனங்களாலும், கொள்கைகளாலும், கோட்பாடுகளாலும், காரியங்களாலும், சபை ஒழுங்குகளாலும், சபைகளை சேர்ந்து கொள்ளுதல் போன்ற சமுதாய காரியங்களாலும், சபையை விட்டு சபைக்கு போவதாலும், உன்னுடைய முழு ஒழுங்குகள் சீர்கெட்டு போன ஒரு நிலைக்கு நீ வந்ததுண்டா. ஒரு பன்றி ஒரு தொட்டிக்குள் இருப்பது போன்று உன்னை தீட்டின் தண்ணீரை உன்மேல் ஊற்றி, நீ அதில் உழன்று கொண்டு இருக்கும்படி, பிசாசினால் முடிந்ததா? எப்பொழுது, தேவனை பற்றின அந்த தாகம் தீர்க்கபடுகிறது கூட, என்ன என்று உனக்கு தெரியாது. உனக்குள்ளாக ஜீவித்துக் கொண்டு வெளிப்படுத்தி கொண்டு இருக்கின்ற பரிசுத்த ஆவியினால் அவரை ஒரு உண்மை பொருளாய் காண்பதுவே. அந்த விதத்தில் இருப்பாயானால், நீ இன்னமும் தேவன் பேரில் தாகமாயிருப்பாயானால், நான் உனக்கு சொல்லுகிறேன். “இம்மானுவேலின் இரத்தத்தால் நிறைந்த ஊற்றுண்டே எப்பாவ தீங்கும் அதினால் நிவிர்த்தியாகுமே மா பாவியான கள்ளனும், இவ்வூற்றில் மூழ்கினான் மன்னிப்பும் மோட்சானந்தமும், அடைந்து பூரித்தான். காயத்தில் ஓடும் ரத்தத்தை விசுவாசத்தால் கண்டேன் ஒப்பற்ற மீட்பர் நேசத்தை எங்கும் பிரஸ்தாபிப்பேன். 93அந்த தாகம் உனக்குள்ளாக தேவனை பற்றி, இன்னும் அதிகமாக அறிந்து கொள்ள, இன்னும் அவரிடம் நெருங்கி வர, இன்றிரவு இருக்குமானால், உங்கள் கரங்களை நீங்கள் உயர்த்தி எல்லா தலைகளும் வணங்கி இருக்கின்ற இந்நேரத்திலே, “எனக்காக ஜெபியுங்கள்'' என்று சொல்வீர்களா? ஓ, தேவனே அந்த கரங்களை பாரும். எங்கெங்கே இது ஒலிப்பரப்பபடுகின்றதோ, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு திசைகளிலிருந்து, அறைகளில் இருக்கின்ற நீங்கள், வாஞ்சிப்பீர்களானால், அங்கேயே உங்கள் கரங்களை அங்கே உங்கள் போதகருக்கு கையை உயர்த்துங்கள். உனக்குள் ஏதோ தேவனை பற்றி தாகமாயிருக்கின்றது. அந்த பரிசுத்த தாகம். அதை திருப்திபடுத்தாதே. நீ சொல்லலாம், “சகோ. பிரன்ஹாம்; ஒரு நேரத்தில், நான் சத்தமிட்டேன், ஆவியில் நடனமாடினேன்''. அதை எடுக்காதே, எடுக்காதே. காத்திரு, அந்த திருப்தி வருமட்டாக பரிசுத்தாவியின் நிறைவின் திருப்தியாக்கும் பாகம் உள்ளே வருமட்டாக காத்திருங்கள். அப்பொழுது ஆனந்த மணியோசையாகிய சத்தமிடுதலும் பாஷைகளில் பேசுதலும் ஆவியில் நடனமாடுதலும் வரும். நீங்கள் அதை வாத்தியங்களை கொண்டு செய்ய வேண்டிய அவசியமில்லை. நீ வீதியிலே உன் காரிலே போகும்போது அதை செய்வாய். நீ தரையை பெருக்கி கொண்டிருக்கும் போது அதை செய்வாய். நீ தச்சுவேலை செய்யும் போது சுவற்றில் ஆணி அடித்துக் கொண்டிருக்கும் போது அதை செய்வாய். நீ எங்கிருந்தாலும் சரி, அந்த சொல்ல முடியாத சந்தோஷமும், மகிமையின் நிறைவும் உண்டாயிருக்கும். இப்பொழுது நாம் ஜெபிப்போம். 94அன்புள்ள பரலோக பிதாவே! இன்றிரவு மிகவும் நீண்டதும், இழுத்துக் கொண்டு போனதுமாயிருந்தது இந்த சிறிய செய்தி, ஆனால் அருமையான தேவனே உம்முடைய பரிசுத்த ஆவியானவர் தாமே இங்கிருக்கின்ற ஒவ்வொரு இருதயத்திற்கும் அதை விளக்கி தருவாராக. இன்றிரவு இந்த சபையிலே அதிகமதிகமான கரங்கள் இந்த இடமெல்லாம் உயர்த்தப்பட்டது. அன்புள்ள ஆண்டவரே! அவர்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம். ஓ! அந்த. தேவனுடைய திருப்தியாக்கும் பங்கு அது. கிறிஸ்து, மகிமையின் நம்பிக்கை, உம்மிலுள்ள ஜீவனின் நம்பிக்கை, அது இங்கிருக்கின்ற அவர்கள் ஒவ்வொருவருக்கும் வருவதாக இந்த தேசத்தை கடந்தும், காலிபோர்னியாவிலிருந்து, நியுயார்க் (New York) மட்டும் அங்கே இப்பொழுது விடியற்காலை. அவர்கள் இதை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அங்கே நியு காம்ப்ஷயர் (New Hampshire)லும் கீழே போஸ்டன் (Boston) மட்டும் டெக்ஸ்சாஸ் (Texas) வரைக்கும் ஊடான இன்டியானா (Indiana)விலும், அங்கே காலிபோர்னியா (California) இன்னும் சுற்று வட்டாரங்களிலும். ஓ! தேவனே அந்த கரங்களை பாரும். அவர்களுக்கு கீழே இருக்கின்றதை பாரும், கர்த்தாவே! அங்கே பசியாயும், தாகமுமாய் இருக்கின்ற அந்த இருதயங்களை பாரும். 95இந்த தாறுமாறாக்கப்பட்ட தலைகீழாக்கப்பட்ட நாளில், பிசாசு ஜனங்களின் கண்களை குருடாக்கி வெறுமனே சபைகளில் சேர்ந்து கொண்டு, “உனக்கு தேவையானது எல்லாம் இவ்வளவு தான்'' என்று சொல்லுகிறான். அவர்கள் இன்னமும் தங்களை தாங்களே நோக்கிக் கொண்டு, அவர்கள் செய்கின்ற விதத்தையும், உலகத்தை போன்று அவர்கள் இருக்க வேண்டுமென்ற வாஞ்சையையும் பார்க்கிறார்கள். வேதம் நமக்கு ”நாம் இன்னும் உலகத்தின் காரியங்களை நேசிப்போமானால் தேவனுடைய அன்பு நம்மிடத்தில் இல்லை“ என்று சொல்லுகிறது நினைத்து பாரும் பிதாவே! அந்த உண்மையான வார்த்தையை அவன் எவ்வளவு தாறுமாறாக்கி போட்டிருக்கிறானென்று அவர்களால் எப்படி. ''ஓ, நாங்கள் வேதத்தை விசுவாசிக்கிறோம், ஆனால் இதை அல்ல, இதை நாங்கள் விசுவாசிக்கிறதில்லை''. ஏனென்றால் ஏதோ ஸ்தாபனமானது அவர்களுடைய சிந்தையை இந்த கழிநீர் தொட்டிக்காய் திருப்பினது. இயேசுவானவர், ''இதிலிருந்து ஒரு வார்த்தையை கூட்டினாலும், எடுத்துப் போட்டாலும், ஜீவ புஸ்தகத்திலிருந்து அவனுடைய பங்கை எடுத்து போடப்படும்'' என்று சொன்னார். அன்புள்ள தேவனே! ஜனங்கள் நல்ல ஜீவியம் ஜீவித்து, சுத்தமான, பரிசுத்தமான ஜீவியம், எவ்வளவு உத்தமமாய் இருக்கக் கூடுமோ, அவ்வளவு உத்தமமாய் சபைக்கு சென்றும், நியாயதீர்ப்பில் அவர்கள் இழந்து போகும் போது, எவ்வளவு ஏமாந்து போவார்கள். 96அந்த பரிசேயரை சற்று சிந்தித்துப் பாருங்கள். சிறு பையனாயிருந்ததிலிருந்து அவர்கள் வார்த்தையிலே பழக்குவிக்கப்பட்டு, பள்ளிகள் மற்ற காரியங்கள் மூலமாய் வளர்க்கப்பட்டாலும், அவர்கள் பரிசுத்தமாய் இருக்க வேண்டும். இல்லையேல் கல்லெறிந்து கொல்லப்படுவார்கள். அப்படியுள்ள அவர்களைப் பார்த்து, “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசினால் உண்டானவர்கள்'' என்று இயேசு சொன்னார். அந்த இஸ்ரவேல் எப்படி ஆகிவிட்டான்! ஆண்டவரே, இந்த பெந்தேகோஸ்துகளுக்கு இது ஒரு எச்சரிக்கையாய் இருக்கட்டும். தீர்க்கதரிசியாகிய மோசே தேவனுடைய வார்த்தையை நிறைவேற்றும்படியாய் சாயங்கால வெளிச்சத்தை அவர்களுக்கு கொண்டு வரும்படியாய் எப்படி எகிப்திற்கு வந்தான். தேவனுடைய பெரிய அற்புதங்களை எப்படி கண்டார்கள்? எப்படி அவர்கள் அவனை பின் தொடர்ந்தார்கள்? சிவந்த சமுத்திரத்தை கடந்து ஞானஸ்நானத்துக்குள்ளானார்கள். வனாந்தரத்திற்குள் சென்றார்கள். பரலோகத்திலிருந்து விழுந்த, தூதர்களுடைய ஆகாரத்தை புசித்தார்கள்? அவர்கள் காதேஷ்பர்னியாவிலிருந்துதிரும்பி வந்த போது வாக்குதத்தம் பண்ணப்பட்ட தேசத்திலிருந்து காதேஷ்பர்னியாவுக்கு வந்த பிறகு அவர்கள் எல்லா வார்த்தையும் எடுத்துக் கொள்ள மறுத்தார்கள். ''அவர்கள் இராட்சதர்கள், நம்மால் அவர்களை மேற்கொள்ள முடியாது'' என்று சொன்னார்கள். எப்போது சொன்னார்கள்? '' நான் அந்த தேசத்தை உங்களுக்கு கொடுத்துவிட்டேன்'' என்று தேவன் சொன்ன பிறகு! எல்லை கோடு! அவர்கள் யாவரும் அழிந்தார்கள், மரித்தார்கள், இழந்தார்கள். தேவனற்றவர்களாய், இவைகளையெல்லாம் செய்திருந்தும், என்று இயேசு சொன்னார். இந்த அற்புதங்கள் எல்லாவற்றையும் கண்டார்கள், அநுபவித்தார்கள். கடற்கரையோரத்தில் தம்பூறு வாசிக்க மீரியாமோடு, மேலும் கீழுமாக நடனமாடினர். 20 லட்சம் பேரில் 3 பேர் மட்டுமே உள் பிரவேசித்தனர். 97பிதாவே! புருஷனிலிருந்து வரும் ஜெனிக்கள் (Gene) ஸ்திரியோடு சேரும் போது ஒரு லட்சத்தில் ஒன்றே ஒன்றுதான் ஏற்றுக் கொள்ளப்படுகிறது, என்பதை நாங்கள் உணருகிறோம். புருஷனிலிருந்து ஒரே ஒரு கிருமிதான் ஸ்திரியினிடத்திலிருந்து வரும், வளமான முட்டையை அடைகிறது, மற்ற ஒரு லட்சமும் அழிந்து போகிறது. எகிப்திலிருந்து 20 லட்சம் பேர் வெளியே புறப்பட்டார்கள், இரண்டு பேர் யோசுவாவும், காலேபும் தேசத்தில் பிரவேசித்தார்கள். லட்சத்தில் ஒருவர். பிதாவே! அதை குறித்து நினைக்கும் போது நடுக்கம் எனக்கு உண்டாகிறது. சிந்தியுங்கள். இன்றைக்கு உலக முழுவதும் 50 கோடி கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். அதை பார்க்கும் போது 500 பேர் பிரவேசிப்பார்கள். ஒரு வேளை இன்றிரவு நீ வர இருக்குமானால். தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் நினைவுச் சின்னமாயிருக்கிறதென்று தேவனே நாங்கள் நினைவு கூறும்படியாய் செய்யும். நாங்கள் அதை விசுவாசிக்க வேண்டும். நாங்கள் அதற்கு கீழ்படிய வேண்டும், “நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக் கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்தாவியின் வரத்தை பெறுவீர்கள். வாக்குதத்தமானது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்தில் உள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது''என்று நீர் கொல்லி இருக்கிறீர். தேவனே இன்னமும் இன்றிரவும் நீர் அழைக்கிறீர், வாக்குதத்தமானது நீர் அழைக்குமட்டாய் இருக்கிறது. பாதிரியார்கள் ஜனங்களின் சிந்தையை மாறுபாடாக்கி, கல்வி ஸ்தாபனங்களின் வேத சாஸ்திர கல்லூரி மூலமாக, ''வெறுமனே நீ விசுவாசி'' என்று அவர்களை சொல்லும்படியாய் செய்கிறார்கள். பிசாசும் கூட விசுவாசிக்கிறான். ஆனால் அவனால் பரிசுத்தாவியை பெற்றுக் கொள்ள முடியாது. யூதாஸ் இஸ்காரியத்து, மற்ற அப்போஸ்தலர்கள் செய்த காரியங்களையும் தானும் செய்தான் சுவிசேஷத்தை பிரசங்கித்தான். ஆனால் அவன் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ள வேண்டிய நேரம் வந்தபோது அவன் தன் சுய நிறத்தை காட்டினான். தேவனே, அந்த அனுபவம் இல்லையென்றால், அவர்கள் இழந்துவிட்டார்கள் என்பதை இந்த நாட்டின் ஜனங்கள் உணர்ந்து கொள்ளும்படி செய்வீராக. ஆண்டவரே, இவர்களை உம்முடைய கரத்திலே ஒப்புகொடுக்கின்ற இந்த வேளையிலே உம்முடைய பங்கினாலே அவர்களுடைய ஆத்துமா திருப்தியடைகின்ற இரவாய் இது இருப்பதாக. ஆண்டவரே, அவர்கள் உம்முடையவர்கள். நாங்கள் உம்முடைய வார்த்தைக்கு மட்டுமே உத்திரவாதிகள். அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்து, பரிசுத்த ஆவியினால் நிரம்பியிருக்கும்படியாக நான் ஜெபிக்கிறேன். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். நான் நேசிக்கிறேன் நான் நேசிக்கிறேன். முன்னற் அன்பு கூர்ந்ததால், கல்வாரியில் என் இரட்சிப்பை வாங்கினதினால். 98ஓ! அவர் உன்னுடைய திருப்தியாக்கும் பங்காக இருக்கிறாரா? உங்கள் முழு இருதயத்தோடு அவரை நேசிக்கிறீர்களா? இந்த வார்த்தைகள் சில நேரங்களில் அறுக்கின்றதாய் இருக்கும். ஆனால் நாம் யாவரும் இப்பொழுது ஆவியோடு பாடுவோம். உன் பக்கத்தில் வீற்றிருக்கும் சகோதரனை ''பிரயாணியே கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக'' என்று நாம் மறுபடியும் பாடிக் கொண்டிருக்கும் போது சொல் சகோதரியே. நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் ஏனெனில் முந்தி அவர் என்னை நேசித்ததால், சம்பாதித்தார் என் இரட்சிப்பை, கல்வாரி மரத்திலே. இப்போது, நாம் ஒருவருக்கொருவர் கை குலுக்குவோம். இப்போது, நாம் கண்களை மூடி, நம் கைகளை அவரிடம் உயர்த்தி, ஆவியில் பாடுவோம். நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் ஏனெனில் முந்தி அவர் என்னை நேசித்ததால், சம்பாதித்தார் என் இரட்சிப்பை, கல்வாரி மரத்திலே. ஓ! அவர் அற்புதமானவர் அல்லவா? அற்புதர், அற்புதர் இயேசு எனக்கு, ஆலோசனைக் கர்த்தராம், சமாதான பிரபு, வல்ல தேவனாம், பாவம் சாபம் யாவும் நீக்கி என்னை இரட்சித்தார். அற்புதர் என் மீட்பர். அவருடைய நாமத்திற்கே ஸ்தோத்திரம்! ஓ! அவர் அற்புதமானவர் அல்லவா? அற்புதர், அற்புதர் இயேசு எனக்கு, ஆலோசனைக் கர்த்தராம், சமாதான பிரபு, வல்ல தேவனாம், பாவம் சாபம் யாவும் நீக்கி என்னை இரட்சித்தார். அற்புதர் என் மீட்பர். அவருடைய நாமத்திற்கே ஸ்தோத்திரம்! 99ஓ, கிறிஸ்துவுடனான உங்கள் அனுபவத்தைப் பற்றி நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்களா? அவர் அற்புதமானவர் அல்லவா? அவர் திருப்தி அளிப்பவர் அல்லவா? நான் ஒரு முறை காணாமற் போனேன். இப்போது நான் கண்டுபிடிக்கப்பட்டேன், ஆக்கினையிலிருந்து விடுபட்டேன். இயேசு விடுதலையையும், முழு இரட்சிப்பையும் தருகிறார். பாவம் சாபம் யாவும் நீக்கி என்னை இரட்சித்தார். அற்புதர் என் மீட்பர். அவருடைய நாமத்திற்கே ஸ்தோத்திரம்! ஓ! அற்புதர், அற்புதர் இயேசு எனக்கு, ஆலோசனைக் கர்த்தராம், சமாதான பிரபு, வல்ல தேவனாம், பாவம் சாபம் யாவும் நீக்கி என்னை இரட்சித்தார். அற்புதர் என் மீட்பர் அவருடைய நாமத்திற்கே ஸ்தோத்திரம்! 100அது வேதப்பூர்வமானது என்று நீங்கள் நம்புகிறீர்களா? வேதம் ''உங்கள் கரங்களை தட்டி, கர்த்தருக்கு ஆனந்த சத்தத்தைச் செலுத்துங்கள்'' என்று சொல்லுகிறது. உங்களுக்குத் தெரியுமா, நான் எப்பொழுதும் இசையை இசைக்க விரும்புவேன். என் மகள் ரெபெக்கா பியானோவை எடுத்துக் கொள்கிறாள். என் சிறு பையன் எக்காளம் எடுத்துக் கொள்கிறான். ஆனால் நான் பத்து நரம்புகள் உள்ள ஒரு கருவியைக் கற்றுக் கொண்டேன். ஓ! அற்புதர், அற்புதர் இயேசு எனக்கு, ஆலோசனைக் கர்த்தராம், சமாதான பிரபு, வல்ல தேவனாம், பாவம் சாபம் யாவும் நீக்கி என்னை இரட்சித்தார். அற்புதர் என் மீட்பர் அவருடைய நாமத்திற்கே ஸ்தோத்திரம்! நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? நாம் ஒளியில் நடப்போம் ஒரு அழகான ஒளியாம். அது சிந்துகிற, பிரகாசமான இரக்கத்தின் பனித்துளிகளாம். நம்மைச் சுற்றி இரவும் பகலும் பிரகாசிக்கிறதாம். இயேசுவே உலகின் ஒளியாவார். நாம் ஒளியில் நடப்போம் ஒரு அழகான ஒளியாம். அது சிந்துகிற, பிரகாசமான இரக்கத்தின் பனித்துளிகளாம். நம்மைச் சுற்றி இரவும் பகலும் பிரகாசிக்கிறதாம். இயேசுவே உலகின் ஒளியாவார். 101(மொழியின்றி இசைத்தல்) உங்களுக்குள்ள எல்லாவற்றோடும் தேவனை ஆராதியுங்கள். (மொழியின்றி இசைத்தல்) பரிசுத்தவான்களின் அணிவகுத்தலில், பரிசுத்தவான்களின் அணிவகுத்தலில், ஆண்டவரே, நான் அந்த எண்ணிக்கையில் இருக்க விரும்புகிறேன். பரிசுத்தவான்களின் அணிவகுத்தலில், ஓ! எல்லாவற்றிற்க்கும் மேலாக கர்த்தர் என்று அவர்கள் முடிசூட்டும் போது, எல்லாவற்றிற்க்கும் மேலாக கர்த்தர் என்று அவர்கள் முடிசூட்டும் போது, ஆண்டவரே, நான் அந்த எண்ணிக்கையில் இருக்க விரும்புகிறேன் எல்லாவற்றிற்க்கும் மேலாக கர்த்தர் என்று அவர்கள் முடிசூட்டும் போது, சூரியன் பிரகாசிக்க மறுத்தபோது, சூரியன் பிரகாசிக்க மறுத்தபோது, ஆண்டவரே, நான் அந்த எண்ணிக்கையில் இருக்க விரும்புகிறேன் சூரியன் பிரகாசிக்க மறுத்தபோது. நீங்கள் அதை நேசிக்கிறீர்களா? இப்போது, நான் வியக்கிறேன் உங்கள் பாதங்கள் மாற்றப்பட்டுள்ளன என்றால் இனி நீங்கள் உலகத்திற்காக அங்கே ஒருபோதும் நடனம் செய்ய வேண்டாம், பாருங்கள். நம்முடைய பாதங்களைக் கர்த்தருக்கு தட்டுவோம். கர்த்தருக்கே! உங்களுடைய கரங்கள் மாற்றப்பட்டுவிட்டதா நீங்கள் இனி ஒருபோதும் திருட மாட்டீர்கள்? உங்களுடைய உதடுகள் மாற்றப்பட்டுவிட்டதா நீங்கள் இனி ஒருபோதும் பொய் சொல்ல மாட்டீர்கள்? உங்கள் சிந்தையில் மதத்தைப் பெறாதீர்கள். உங்கள் எல்லாவற்றிலும் அதைப் பெறுங்கள். அவ்வளவுதான்! இது முழு மனிதனையும் எடுக்கும். அது சரி. இப்போது, ​​நம்முடைய பாதங்களைத் தட்டுவோம். பரிசுத்தவான்களின் அணிவகுத்தலில், பரிசுத்தவான்களின் அணிவகுத்தலில், ஆண்டவரே, நான் அந்த எண்ணிக்கையில் இருக்க விரும்புகிறேன். பரிசுத்தவான்களின் அணிவகுத்தலில், பரிசுத்தவான்களின் அணிவகுத்தலில், பரிசுத்தவான்களின் அணிவகுத்தலில், ஆண்டவரே, நான் அந்த எண்ணிக்கையில் இருக்க விரும்புகிறேன். பரிசுத்தவான்களின் அணிவகுத்தலில், இப்போது, நம்முடைய கரங்களை உயர்துவோம். பரிசுத்தவான்களின் அணிவகுத்தலில், பரிசுத்தவான்களின் அணிவகுத்தலில், ஆண்டவரே, நான் அந்த எண்ணிக்கையில் இருக்க விரும்புகிறேன். பரிசுத்தவான்களின் அணிவகுத்தலில், ஓ! எல்லாவற்றிற்க்கும் மேலாக கர்த்தர் என்று அவர்கள் முடிசூட்டும் போது, எல்லாவற்றிற்க்கும் மேலாக கர்த்தர் என்று அவர்கள் முடிசூட்டும் போது, ஆண்டவரே, நான் அந்த எண்ணிக்கையில் இருக்க விரும்புகிறேன் எல்லாவற்றிற்க்கும் மேலாக கர்த்தர் என்று அவர்கள் முடிசூட்டும் போது, 102நீங்கள் அவரை நேசிக்கவில்லையா? பின்னர், நாம் ஒளியில் நடப்போம், (அவரே ஒளி, உங்களுக்குத் தெரியும்) ஒரு அழகான ஒளியாம். அது சிந்துகிற, பிரகாசமான இரக்கத்தின் பனித்துளிகளாம். நம்மைச் சுற்றி இரவும் பகலும் பிரகாசிக்கிறதாம். இயேசுவே உலகின் ஒளியாவார். அவர் உலகத்தின் ஔியாயிருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவ்விதம்தானா? நீங்கள்? பவுல் ''நான் பாடும்போது ஆவியினால் பாடுவேன். நான் ஆராதித்தால், நான் ஆவியினால் ஆராதிப்பேன்,'' என்று கூறினார், பாருங்கள்! நீங்கள் என்ன செய்தாலும், அதையெல்லாம் ஆவியிலேயே செய்யுங்கள், அது சரியே! ஆவியானது வார்த்தையை ஜீவனிடம் கொண்டு வருகிறது. அது சரியா? அது சரியே! ஆம், ஐயா. ஒளியின் பரிசுத்தரே, இயேசுவே உலகின் ஒளியென்று பிரசித்தம் செய்வீர் இயேசுவே உலகின் ஒளியாயிருக்கிறார். அவருடைய நாமத்தில் கிருபையும், இரக்கமும் உள்ளது. இயேசுவே உலகத்தின் ஒளியாய் இருக்கிறார். பிறகு நாம் என்ன செய்வோம்? நாம் ஒளியில் நடப்போம் அழகான ஒளியில் அது சிந்துகிற இரக்கத்தின் பனித்துளிகளில் பிரகாசிக்கிறது. நம்மைச் சுற்றி இரவும் பகலும் பிரகாசிக்கிறது, இயேசுவே உலகின் ஒளியாயிருக்கிறார். 103வாசிக்கிறவர்களைக் குழப்பும்படி நான் அவ்விதம் செய்ததற்காக வருந்துகிறேன். ஆனால், நான் அவ்விதம் விலகிச் சென்று விடுகிறேன். ஆராதிப்பதை விடச் சிறந்தது எதுவுமே எனக்குத் தெரியாது. அந்த விதத்தில் நாம் அதைச் செய்கிறோம். ஆம் ஐயா. சகோதரன் மேக், உங்களுடனும் மற்றும் உங்கள் சபையுடனும் இங்கே, இன்றிரவு, இந்த நல்ல ஜனங்கள் அனைவருடனும் ஐக்கியம் கொள்ளவுள்ள, இந்த தருணத்திற்காக நான் நன்றி கூறுகிறேன். பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்திற்காக உங்கள் கைகளை உயர்த்திய நீங்கள், உங்கள் போதகர் மேக்கை இங்கே சந்திப்பீர்கள் என்றும் அவர்களில் சிலர், இங்கே உள்ள அறைக்கு செல்லுவார்கள் என்று நம்புகிறேன். நினைவில் கொள்ளுங்கள், தேவன் ஆதியில் ''உண்டாகக்கடவது'' என்று வார்த்தையைப் பேசினபோது, அது அங்கே இருந்திருக்க வேண்டும். அவர் ''நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்,'' என்றார். பாருங்கள். அது நடக்க வேண்டும். உங்கள் போதகரைச் சந்திக்க இங்கு வந்து, அவர் சுவிசேஷத்தை பிரசங்கிக்கையில் அவரோடு நில்லுங்கள். 104இப்போது, நாம் மீண்டும் அந்த நல்ல பழைய பாடலைப் பாடுவோம், நான் அதை நேசிக்கிறேன். நாம் ஒளியில் நடப்போம். இயேசு ''நானே ஒளியாயிருக்கிறேன்,'' என்றார். நீங்கள் அவருக்குள் இருக்கிறீர்கள், பாருங்கள். நீங்கள் எப்படி அவருக்குள் செல்வீர்கள்? அவரோடு சேருவதினாலா? இல்லை. நடுங்குவதா? இல்லை. தண்ணீர் ஞானஸ்நானமா? இல்லை. ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக நாமெல்லாரும் ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம், அதுவே கிறிஸ்துவின் சரீரம். அந்த சரீரத்திற்குள்ளாக ஒன்பது ஆவிக்குரிய வரங்கள், இந்த சரீரம், உள்ளுர் சபையின் மூலமாக, செயல்படுகிறது. நான் அறிந்துள்ள மட்டும் அது அப்போஸ்தல முறையாகும். அது சரியே. ஆகவே... நாங்கள் ஒளியில் இருப்போம், அழகான ஒளியில், பிரகாசமான இரக்கத்தின் பனித்துளிகளாக அது சிந்துகிறது, நம்மைச் சுற்றி இரவும் பகலும் பிரகாசிக்கிறது, இயேசுவே உலகின் ஒளியாயிருக்கிறார்